என் மலர்
டென்னிஸ்
- இரண்டாவது சுற்று ஆட்டத்தில் கனடாவின் கரோல் ஜாவோ-ரஷியாவின் வர்வரா கிராச்சேவா மோதினர்.
- காலிறுதியில் இந்திய ஜோடியான கர்மன் தண்டி-ருதுஜா தோல்வியை தழுவினர்.
சென்னை:
சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டிஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கனடாவின் கரோல் ஜாவோ-ரஷியாவின் வர்வரா கிராச்சேவா மோதினர். இதில் கிராச்சேவா 6-1, 7-5 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
மற்ற ஆட்டங்களில் போடோரோஸ்கா (அர்ஜென்டினா), மெக்டா லினெட் (போலந்து) கேட்டி ஸ்வான் (இங்கிலாந்து) ஆகியோர் கால் இறுதிக்கு முன்னேறினர்.
இன்று ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 5 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் புசார்ட் (கனடா)-போடோரோஸ்கா (அர்ஜென்டினா) மோதுகிறார்கள். 6.15 மணிக்கு நடக்கும் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் கிராச்சேவா (ரஷியா)-லின்டா ப்ருஹ்விர்டோவா (செக் குடியரசு) மோதுகிறார்கள்.
இரவு. 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் மெக்டாலினெட் (போலந்து)-மரினோ (கனடா), இரவு 8.45 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஸ்வான் (இங்கிலாந்து)-நாவ் ஹிபினோ (ஜப்பான்) ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
அனுபவம் வாய்ந்த வீராங்கனையான புசார்ட் அரை இறுதிக்கு தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரட்டையர் பிரிவில் இன்று நடக்கும் அரை இறுதி போட்டியில் புசார்ட் (கனடா)-விக்மேயர் (பெல்ஜியம்) ஜோடி, அன்னா பிஸிங்கோவா (ரஷியா)-டிசலமிட்ஜ் (ஜார்ஜியா) ஜோடி பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
நேற்று நடந்த கால் இறுதியில் இந்திய ஜோடியான கர்மன் தண்டி-ருதுஜா தோல்வியை தழுவினர். இதன் மூலம் இரட்டையர் பிரிவிலும் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே ஒற்றையர் பிரிவிலும் இந்திய வீராங்கனைகள் வெளியேறி விட்டனர்.
- ரோஜர் பெடரர் விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை அதிக முறை வென்றவர்.
- தரவரிசையில் 310 வாரங்கள் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தவர் ரோஜர் பெடரர்.
மும்பை:
2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார். 41 வயதான ரோஜர் பெடரர், 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றவர்.
பாரம்பரியமிக்க விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை அதிக முறை வென்ற சாதனை படைத்தவர் ரோஜர் பெடரர். தரவரிசையில் 310 வாரங்கள் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தவர் என்ற சாதனைக்கும் ரோஜர் பெடரர் சொந்தக்காரர் ஆவார்.
இந்நிலையில், ரோஜர் பெடரருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், என்ன ஒரு அர்ப்பணிப்பு, ரோஜர் பெடரர்.. உங்கள் டென்னிஸ் பிராண்டை நாங்கள் காதலித்தோம். மெல்ல மெல்ல உங்கள் டென்னிஸ் பழக்கமாகிவிட்டது. மேலும் பழக்கவழக்கங்கள் ஒருபோதும் விலகாது, அவை நம்மில் ஒரு பகுதியாக மாறும். அனைத்து அற்புதமான நினைவுகளுக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.
- 2003ம் ஆண்டு பெடரர் தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார்.
- அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்கள் வரிசையில் பெடரர் 3வது இடத்தில் உள்ளார்.
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் தனது ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார். 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்ற ரோஜர் பெடரர், 2022 லேவர் கோப்பைக்குப் பிறகு விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இத்தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
2003ம் ஆண்டு விம்பிள்டனில் சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் பெடரர் தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை பெற்றார். அதன் பிறகு அடுத்தடுத்து பல சர்வதேச போட்டிகளில் சாதனை படைத்தார். 6 ஆஸ்திரேலிய ஓபன், 1 பிரெஞ்ச் ஓபன், 8 விம்பிள்டன் மற்றும் 5 அமெரிக்க ஓபன் என மொத்தம் 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற வீரர்கள் வரிசையில் பெடரர் தனது முக்கிய போட்டியாளர்களான ரபேல் நடால் மற்றும் நோவக் ஜோகோவிச் ஆகியோரைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளார்.
தனது ஓய்வு முடிவு குறித்து கூறி உள்ள பெடரர், 'கடந்த மூன்று ஆண்டுகளாக காயங்கள் மற்றும் அறுவை சிகிச்சைகள் போன்ற கடுமையான சவால்கள் இருந்தன. இதனால் முழுமையான உடற்தகுதியுடன் போட்டிக்கு திரும்ப கடுமையாக உழைத்தேன். ஆனால் என் உடல் திறன் குறித்து எனக்குத்தான் தெரியும்' என்றார்.
- இன்று நடைபெறும் கால் இறுதியில் கர்மன் தண்டி-ருதுஜா போசலே ஜோடி லூயிசா ஸ்டெபானி (பிரேசில்) கேப்ரியேபா டப்ரோவ்ஸ்கி (கனடா) ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
- ரியா பாட்டியா, ஷர்மதா பாலு, இந்தியாவின் அங்கிதா ரெய்னா, நெதர்லாந்தின் வான்டெர் ஹோக் ஜோடி முதல் சுற்றில் தோற்றன.
சென்னை ஓபன் மகளிர் டென்னிசில் இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய ஜோடியான கர்மன் தண்டி-ருதுஜா போசலே 3-6, 7-6 (7-5), 10-4 என்ற செட் கணக்கில் ஜெசி ரோம்பிஸ் (இந்தோனேசியா) பிரார்த்தனா தோம்பரே (இந்தியா) ஜோடியை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றது.
இன்று நடைபெறும் கால் இறுதியில் கர்மன் தண்டி-ருதுஜா போசலே ஜோடி லூயிசா ஸ்டெபானி (பிரேசில்) கேப்ரியேபா டப்ரோவ்ஸ்கி (கனடா) ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

ரியா பாட்டியா - ஷர்மதா பாலு
மற்றொரு இந்திய ஜோடியான ரியா பாட்டியா, ஷர்மதா பாலு, இந்தியாவின் அங்கிதா ரெய்னா, நெதர்லாந்தின் வான்டெர் ஹோக் ஜோடி முதல் சுற்றில் தோற்றன.
- போட்டியின் தர வரிசையில் 4-ம் இடத்தில் இருக்கும் மரியா கால் இறுதிக்கு தகுதி பெறுவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இன்று நடைபெறும் 2-வது சுற்றில் வெற்றி பெறுவோர் கால் இறுதிக்கு முன்னேறுவார்கள்.
சென்னை:
சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கம் எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
இன்று நடைபெறும் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் மக்டா லிஸெட் (போலந்து)-ஒக்சானா செலக்மெட்தேவா (ரஷியா) மோதுகிறார்கள்.
மற்றொரு ஆட்டத்தில் கேட்டி ஸ்வான் (இங்கிலாந்து) அனஸ்டசிய கசனோவா (ரஷியா) பலப்பரீட்சை நடத்துகிறார்கள். இந்த இரு ஆட்டங்களும் மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.
மாலை 6.15 மணிக்கு நடக்கும் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 85-ம் இடத்தில் இருக்கும் ஜெர்மனியின் தட்ஜானா மரியா, அர்ஜென்டினாவின் பொடோரோஸ் காவுடன் மோதுகிறார்.
போட்டியின் தர வரிசையில் 4-ம் இடத்தில் இருக்கும் மரியா கால் இறுதிக்கு தகுதி பெறுவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு ஆட்டத்தில் கரோல் ஜாவோ (கனடா) வர்வரா கிராச்சேவா (ரஷியா) மோதுகிறார்கள்.
கால் இறுதிக்கு யூஜெனி புசார்ட் (கனடா), நாவ் ஹிபிளோ (ஜப்பான்), லின்டா புரவிர்தோவா (செக் குடியரசு) ஆகியோர் தகுதி பெற்றனர்.
நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் கனடாவின் ரெபேக்கா மரினோ 7-5, 6-3 என்ற நேர்செட் கணக்கில் கதர்சினா காலாவை (போலந்து) வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் 2-வது சுற்றில் வெற்றி பெறுவோர் கால் இறுதிக்கு முன்னேறுவார்கள். ஒற்றையர் பிரிவில் நேற்று இந்திய வீராங்கனை கர்மன் தண்டி தோல்வி அடைந்ததன் மூலம் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.
- எதிராளிகளுக்கு புள்ளிகளை தாரை வார்க்கும் தவறுகளை மட்டும் 26 முறை செய்தார்.
- ஏற்கனவே இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னாவும் தோற்று வெளியேறி விட்டார்.
சென்னை:
சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 359-வது இடம் வகிக்கும் இந்தியாவின் கர்மன் கவுர் தண்டி, அனுபவம் வாய்ந்த யூஜெனி புசார்ட்டை (கனடா) எதிர்கொண்டார்.
முதல் செட்டை எளிதில் இழந்த கர்மன் தண்டி 2-வது செட்டில் எதிராளிக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். 5-2 என்ற முன்னிலையுடன் அந்த செட்டை வெல்லும் நிலைக்கு நகர்ந்தார். ஆனால் அதே உத்வேகத்தை அவரால் தொடர முடியவில்லை. சரிவில் இருந்து மீண்ட புசார்ட் 6-6 என்று சமனுக்கு கொண்டு வந்தார்.
இதையடுத்து கடைபிடிக்கப்பட்ட டைபிரேக்கரில் புசார்ட் வெற்றிக்கனியை பறித்தார். 2 மணி 13 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில் புசார்ட் 6-2, 7-6 (7-2) என்ற நேர் செட்டில் தண்டியை தோற்கடித்து கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். கர்மன் தண்டி, புசார்ட்டை விட அதிக தவறுகளை இழைத்தார்.
பந்தை வலுவாக வெளியே விரட்டுவது, வலை மீது அடிப்பது போன்ற எதிராளிகளுக்கு புள்ளிகளை தாரை வார்க்கும் தவறுகளை மட்டும் 26 முறை செய்தது பின்னடைவாக அமைந்தது. அத்துடன் சீதோஷ்ண நிலையும் அவரை சோர்வடையச் செய்தது. புழுக்கத்தால் வியர்த்து கொட்டி நனைந்து போனார்.
கர்மன் தண்டியின் தோல்வியின் மூலம் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னாவும் தோற்று வெளியேறி விட்டார்.
- சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க வீராங்கனை அலிசன் ரிஸ்கே தோல்வி அடைந்தார்.
- முதல் சுற்றில் இந்திய வீராங்கனை அங்கிதா ஜெர்மனி வீராங்கனையிடம் தோல்வி கண்டார்.
சென்னை:
சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று ஒற்றையர் முதலாவது சுற்று போட்டிகள் நடைபெற்றன.
இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா, ஜெர்மனியின் தாட்ஜனா மரியாவுடன் பலப்பரீட்சை நடத்தினார். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு கரகோஷம், கைதட்டலுக்கு மத்தியில் ஆடிய அங்கிதா ரெய்னா, அனுபவம் வாய்ந்த தாட்ஜனாவை சமாளிக்க முடியாமல் தடுமாறினார்.
முதல் செட்டில் ஒரு கேம் கூட எடுக்காத அங்கிதா 2-வது செட்டில் 5-வது கேமை வென்றது மட்டுமே ஒரே ஆறுதல். 76 நிமிடங்களில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த தாட்ஜனா 6-0, 6-1 என்ற நேர் செட்டில் அங்கிதாவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் உலக தரவரிசையில் 23-வது இடம் வகிக்கும் அமெரிக்காவின் அலிசன் ரிஸ்கே, ரஷியாவின் அனஸ்டசியா கசனோவாவுடன் மோதினார். இதில் அலிசன் ரிஸ்கே 2-6, 3-6 என்ற நேர் செட்டில் பணிந்தார்.
- சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி சென்னையில் முதல் முறையாக நடைபெறுகிறது.
- தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் சார்பில் தமிழக அரசின் ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.2 கோடியாகும்.
சென்னை:
சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடி யத்தில் இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. வருகிற 18-ந்தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது.
சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி சென்னையில் முதல் முறையாக நடைபெறுகிறது. தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் சார்பில் தமிழக அரசின் ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.2 கோடியாகும்.
29-வது இடத்தில் உள்ள அலிசன் ரிஸ்கி (அமெரிக்கா), கிராசேவா (ரஷியா), மேக்டா லினட் (போலந்து), ரெபேக்கா பீட்டர்சன் (சுவீடன்) உள்ளிட்ட உலகின் முன்னணி வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். ஒற்றையர் பிரிவில் 32 வீராங்கனைகளும், இரட்டையர் பிரிவில் 16 ஜோடியினரும் பங்கேற்கிறார்கள்.
முதல் நாளான இன்று 3 டென்னிஸ் ஆடுகளத்தில் 9 ஆட்டங்கள் நடக்கிறது. இந்திய வீராங்கனை கர்மன் தண்டி இன்ைறய முதல் சுற்று ஆட்டத்தில் பிரான்சின் குளோபேக்கியூட்டை சந்திக்கிறார். இந்திய வீராங்கனை முதல் சுற்றில் வெற்றி பெறுவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.
- அல்காரஸ் முதல்முறையாக கிராண்ட்சிலாம் பட்டத்தை கைப்பற்றி உள்ளார்.
நியூயார்க்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்றது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து) சாம்பியன் பட்டம் வென்றார்.
ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு நடந்தது. இதில் 3-ம் நிலை வீரரான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) ஐந்தாவது வரிசையில் உள்ள கேஸ்பர் ரூட் (நார்வே) மோதினார்கள்.
முதல் செட்டை அல்காரஸ் 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக ரூட் 2-வது செட்டை 6-2 என்ற கணக்கில் வென்றார். 3-வது செட்டில் இருவரும் மாறி மாறி புள்ளிகளை பெற்றனர். இதனால் 6-6 என்ற சமநிலை ஏற்பட்டு டைபிரேக்கருக்கு அந்த செட் சென்றது. இதில் அல்காரஸ் 7-1 என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றார்.
அல்காரஸ் அதே உத்வேகத்துடன் ஆடி 4-வது செட்டையும் 6-3 என்ற கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார். ஸ்கோர் 6-4 , 2-6, 7-6 (7-1 ), 6-3. இந்த வெற்றியை பெற அவருக்கு 3 மணி 20 நிமிட நேரம் தேவைப்பட்டது.
19 வயதான அல்காரஸ் முதல்முறையாக கிராண்ட்சிலாம் பட்டத்தை கைப்பற்றி உள்ளார். இதற்கு முன்பு இந்த ஆண்டு நடந்த பிரெஞ்சு ஓபனில் கால்இறுதியில் நுழைந்ததே இவரது சிறந்த நிலையாக இருந்தது.
அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றியதன் மூலம் அல்காரஸ் டென்னிஸ் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார். குறைந்த வயதில் 'நம்பர் 1' இடத்தை பிடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதன்மூலம் நம்பர் ஒன் கனவு நிறைவேறியது.
கேஸ்பர் ரூட்டின் முதல் கிராண்ட்சிலாம் கனவு இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்வியால் கலைந்து போனது.
- அமெரிக்க ஓபன் டென்னிசில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டம் நடைபெற்றது.
- இதில் நார்வேயின் காஸ்பர் ரூட்டை ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் வீழ்த்தினார்.
நியூயார்க்:
கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்றது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் நார்வேயின் காஸ்பர் ரூட், ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரசுடன் மோதினார்.
இதில், கார்லோஸ் 6-4, 2-6, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் காஸ்பர் ரூட்டை வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார்.
- 5-ம் நிலை வீராங்கனையான ஒன்ஸ் ஜபேர், இறுதி ஆட்டத்தில் ஸ்வியாடெக்கை சந்தித்தார்.
- இதில் ஸ்வியாடெக் 6-2, 7-6 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன்பட்டம் வென்றார்.
நியூயார்க்:
கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் 5-ம் நிலை வீராங்கனையான துனிசியாவைச் சேர்ந்த ஒன்ஸ் ஜபேர், போலந்தின் இகா ஸ்வ்யாடெக்கை எதிர்கொண்டார்.
இதில் ஸ்வியாடெக் 6-2, 7-6 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.
- இன்று நடந்த அரையிறுதியில் கார்லோஸ் அல்காரஸ், டியாபோ உடன் மோதினார்.
- இதில் அல்காரஸ் டியாபோவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோ உடன் மோதினார்.
இந்த போட்டியில் 6-7, 6-3, 6-3, 6-7 (5-7), 6-3 என்ற செட் கணக்கில் டியாபோவை வீழ்த்தி வெற்றி பெற்ற கார்லோஸ் அல்காரஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் கார்லோஸ், நார்வேயின் காஸ்பர் ரூட் உடன் மோத உள்ளார்.






