என் மலர்tooltip icon

    விளையாட்டு

    செஞ்சூரியனில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்துள்ளது.
    தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் நேற்று செஞ்சூரியனில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்ஜேயின் (6 விக்கெட்) சிறப்பான பந்து வீச்சால் இலங்கை அணி 157 ரன்னில் சுருண்டது. தொடக்க வீர்ர குசால் பெரேரா அதிகபட்சமாக 60 ரன்கள் சேர்த்தார்.

    பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. டீன் எல்கரின் சிறப்பான பேட்டிங்கால் தென்ஆப்பிரிக்கா முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் விளாசியது. எல்கர் 92 ரன்களுடனும், டுஸ்சென் 40 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. டீன் எல்கர் சதம் அடித்து 127 ரன்னில் வெளியேறினார். டுஸ்சென் அரைசதம் அடித்து 67 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அதன்பின் வந்த டு பிளிஸ்சிஸ் (8), டி காக் (10), டெம்பா பவுமா (19) சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 302 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

    இலங்கை அணி தரப்பில் விஷ்வா பெர்னாண்டோ 5 விக்கெட் சாய்த்தார். 145 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது.

    லுங்கி நிகிடி அபாரமாக பந்து வீசி குசால் பெரேரா (1), குசால் மெண்டிஸ் (0), திரிமனே (31) ஆகியோரை சொற்ப ரன்னில் வீழ்த்தினார். மினோத் பனுகாவை (1) நோர்ஜோ வெளியேற்றினார். இருந்தாலும் திமுத் கருணாரத்னே சிறப்பாக விளையாடி இலங்கையின் ஸ்கோர் உயர்ந்தது.

    2-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது வரை 5 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. கருணாரத்னே 91 ரன்களுடனும், டிக்வெல்லா 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    இருவரும் நாளை சிறப்பாக விளையாடினால் இலங்கை அணி 150 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற வாய்ப்புள்ளது. இல்லையெனில் தோல்வியை சந்திக்கும்.
    உலகின் தலைசிறந்த வீரரான ரோகித் சர்மாவை வீழ்த்துவதற்கான திட்டத்ம் தயார் என்று ஆஸ்திரேலியாவின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது.

    இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவின் நம்பிக்கைக்குரிய வீரர்களான ஸ்மித் பேட்டிங்கிலும், நாதன் லயன் பந்து வீச்சிலும் மிகப்பெரிய அளவில் சாதிக்கவில்லை.

    சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக சிட்னியில் சிறப்பாக விளையாடலாம் என்ற நம்பிக்கையில் நாதன் லயன் உள்ளார். இந்திய அணியில் ரோகித் சர்மா களம் இறங்குகிறார். இவர் ஒரு மணி நேரம் களத்தில் நின்று விட்டால் எதிரணி பந்து வீச்சாளர்களின் நிலை திண்டாட்டம்தான்.

    இந்த நிலையில் ரோகித் சர்மாவை வீழ்த்துவதற்கான திட்டம் தயாராக உள்ளது என்று நாதன் லயன் தெரிவித்துள்ளார்.

    ரோகித் சர்மா குறித்து நாதன் லயன் கூறுகையில் ‘‘உண்மையிலேயே. ரோகித் சர்மா உலகின் நம்பர் ஒன் வீரராக உள்ளார். இதனால் எங்கள் பந்து வீச்சாளர்களுக்கு கடும் சவாலாக இருக்கும். ஆனால், நாங்கள் எங்கள் வழியில் ஆட்டத்தை வெளிப்படுத்த சென்று கொண்டிருக்கிறோம். நாங்களாகவே சவாலாவை விரும்புகிறோம்.

    இந்திய அணிக்கு மிகப்பெரிய பங்களிப்பை கொடுக்கக் கூடியவர். ஆகையால் அவரை யார் வெளியேற்றுவார்கள் என்பதை பார்க்க ஆர்வமாக இருக்கும். ஆனால், நாங்கள் ரோகித் சர்மாவிற்கு எதிராக எங்களுடைய திட்டத்துடன் செல்வோம். அவரை முன்னதாகவே வீழ்த்துவோம் என்று நம்புகிறோம். ஆனால், அவர் எவ்வளவு பெரிய வீரர் என்பதற்கு மரியாதை கொடுத்தேயாக வேண்டும்’’ என்றார்.
    அணியில் இடம் பிடித்து விளையாட தேர்வாகியிருந்தால் பயோ-பபுளில்தான் இருக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணி வீரர்கள்  ஆஸ்திரேலியா சென்ற போது 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டனர். 3-வது டெஸ்ட் சிட்னியில் நடைபெற இருக்கிறது. அதன்பின் 4-வது மற்றும் கடைசி போட்டி பிரிஸ்பேனில் நடக்கிறது. பிரிஸ்பேன் மைதானம் உள்ள குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கொரோனா விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

    இதனால் மீண்டும் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடுமையான வகையில் கடைபிடிப்பது இயலாத காரியம். அதனால் பிரிஸ்பேன் செல்ல விருப்பம் இல்லை என்று இந்திய அணி வீரர்கள் கூறியதாக செய்திகள் வெளியானது.

    இதற்கு பதில் அளித்த குயின்ஸ்லாந்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஸ் பேட்ஸ் ‘‘இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு விளையாட தயாராக இல்லையென்றால் இங்கே வராதீர்கள்” என்றார்.

    இந்நிலையில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது கருத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். “அணியில் இடம் பிடித்து விளையாட தேர்வாகியிருந்தால் பயோ-பபுள் என்ற கடுமையான கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து, அதற்கு மதிப்பு கொடுத்துதான் இருக்க வேண்டும். அதற்கு தயாராக இருப்பவர்கள் மட்டுமே வரலாம். அப்படி இல்லையென்றால் தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு வரவே வேண்டாம். அப்படியே போய்விடலாம். அதைவிடுத்து இரண்டையும் எதிர்பார்க்க முடியாது” என சொல்லியுள்ளார்.

    இதற்கிடையில் ரோகித் சர்மா உள்பட ஐந்து இந்திய வீரர்கள் விதிமுறையை மீறியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
    பிக் பாஷ் டி20 லீக்கின் இன்றைய 2-வது ஆட்டத்தில் சிட்னி தண்டரை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பிரிஸ்பேன் ஹீட்.
    பிக் பாஷ் லீக் டி20 தொடரின் இன்றைய 2-வது ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் - சிட்னி தண்டர் அணிகள் பிரிஸ்பேனில் மோதின. டாஸ் வென்ற சிட்னி தண்டர் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர் கவாஜா டக்அவுட் ஆனாலும், மற்றொரு தொடக்க வீரர் ஹேல்ஸ் 26 பந்தில் 46 ரன்கள் விளாசினார். கேப்டன் பெர்குசன் 35 ரன்களும், பில்லிங்ஸ் 22 ரன்களும், டேனியல் சாம்ஸ் 18 பந்தில் 37 ரன்களும், கட்டிங் 15 பந்தில் 24 ரன்களும் அடிக்க சிட்னி தண்டர் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் அடித்தது.

    பின்னர் 175 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பிரிஸ்பேன் ஹீட் களம் இறங்கியது. ஜோ டென்லி 36 பந்தில் 50 ரன்களும், ஜோ பேர்ன்ஸ் 38 பந்தில் 52 ரன்களும் அடிக்க பிரிஸ்பேன் ஹீட் 19.1 ஓவரில் 175 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தி, இரண்டு கேட்ச் பிடித்த முஜீப் உர் ரஹ்மான ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
    சிட்னி டெஸ்டில் பேட்டிங் ஆர்டரை இந்த வரிசையில் தேர்வு செய்யுங்கள் என்று ரஹானேவுக்கு புதிர் மெஸேஜ் அனுப்பியுள்ளார் வாசிம் ஜாபர்.
    ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் வருகிற 7-ந்தேதி நடக்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் ஹனுமா விஹாரி, மயங்க் அகர்வால் ஆகியோர் சரியாக விளையாடவில்லை. ஷுப்மன் கில் அறிமுக போட்டிகள் நம்பிக்கையூட்டும் வகையில் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    ரோகித் சர்மா அணிக்கு திரும்பியுள்ளார். இந்த நிலையில் அணியின் பேட்டிங் ஆர்டர் எப்படி இருக்கும்? என ரசிர்கள் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இந்த நிலையில் வாசிம் ஜாபர் புதிர் மெஸேஜ் மூலம் ரகானேவுக்கு பேட்டிங் ஆர்டரை தேர்வு செய்யும்படி ஆலோசனை வழங்கியுள்ளார்.

    அவரது டுவிட்டர் புதிருக்கு டுவிட்டவாசிகள் பதில் அளித்து வருகிறார்கள்.

    மெல்போர்ன் போட்டிக்கு முன் கேஎல் ராகுல், ஷுப்மன் கில் ஆகியோரை எடுங்கள் என இதுபோன்று புதிராக ரகானேவுக்கு மெஸேஜ் அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஒரு வருட தடைக்காலம் முடிந்துள்ளதால், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான வங்காளதேச உத்தேச அணியில் ஷாகிப் அல் ஹசன் இடம் பிடித்துள்ளார்.
    வங்காளதேச அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன். சூதாட்ட தரகர்கள் அவரை தொடர்பு கொண்டதை மறைத்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு உண்மை என்பதை ஒப்புக்கொண்டார். இதனால் ஒருவருடம் தடைவிதிக்கப்பட்டது.

    சமீபத்தில் அவரது தடைக்காலம் முடிவுக்கு வந்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான வங்காளதேச உத்தேச அணியில் இடம் பிடித்துள்ளார். அதேவேளையில் முன்னாள் கேப்டன் மோர்தசாவுக்கு இடம் கிடைக்கவில்லை.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 20-ந்தேதி தொடங்குகிறது. அதன்பின் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது.

    வங்காளதேச அணி கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பின் விளையாடும் முதல் சர்வதேச தொடர் இதுவாகும்.
    இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை வந்துள்ள இங்கிலாந்து அணியில் மொயீன் அலிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகளில் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதற்காக இங்கிலாந்து அணி வீரர்கள் இன்று இலங்கை வந்தடைந்தனர். அப்போது விமான நிலையத்தில் வைத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    அதில் மொயீன் அலிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் இலங்கை அரசின் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைப்படி 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட இருக்கிறார். அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த கிறிஸ் வோக்ஸ் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்கிறார்.
    ஹோபர்ட்டில் நடைபெற்ற பிக் பாஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியை 10 ரன்னில் வீழ்த்தியது மெல்போர்ன் ஸ்டார்ஸ்.
    ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ்- மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதின.

    ஹோபர்ட் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆட்டமிழக்காமல் 55 பந்தில் தலா 7 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 97 ரன்கள் விளாச மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது.

    பின்னர் 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் பென் மெக்டெர்போட் அபாரமாக விளையாடினார். அவர் 58 பந்தில் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களே அடிக்க முடிந்தது.

    இதனால் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    செஞ்சூரியனில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னங்சில் 302 ரன்கள் குவித்தது.
    தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் நேற்று செஞ்சூரியனில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்ஜேயின் (6 விக்கெட்) சிறப்பான பந்து வீச்சால் இலங்கை அணி 157 ரன்னில் சுருண்டது. தொடக்க வீர்ர குசால் பெரேரா அதிகபட்சமாக 60 ரன்கள் விளாசினார்.

    பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. டீன் எல்கரின் சிறப்பான பேட்டிங்கால் தென்ஆப்பிரிக்கா முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் விளாசியது. எல்கர் 92 ரன்களுடனும், டுஸ்சென் 40 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. டீன் எல்கர் சதம் அடித்து 127 ரன்னில் வெளியேறினார். டுஸ்சென் அரைசதம் அடித்து 67 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அதன்பின் வந்த டு பிளிஸ்சிஸ் (8), டி காக் (10), டெம்பா பவுமா (19) சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 302 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

    இலங்கை அணி தரப்பில் விஷ்பா பெர்னாண்டோ 5 விக்கெட் சாய்த்தார். 145 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
    நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சவுரவ் கங்குலி நாளைமறுதினம் டிஸ்சார்ஜ் ஆக வாய்ப்புள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவரான சவுரவ் கங்குலிக்கு நேற்று முன்தினம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 48 வயதான அவருக்கு இரண்டு அடைப்புகள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவனை டாக்டர்கள் தெரிவித்தனர்.

    ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையின் மூலம் ஒரு அடைப்பு சரிசெய்யப்பட்டது. 2-வது அடைப்பும் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மூலம் சரிசெய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2-வது ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், நாளைமறுதினம் (புதன்கிழமை) டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் எந்தவொரு இளைஞருக்கும் உண்மையான முன்மாதிரி என்று லட்சுமண் புகழாரம் சூட்டியுள்ளார்.
    நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் இந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேனாக கருதப்படுகிறார். கொரோனா காலத்திற்குப் பிறகு போட்டி தொடங்கியபின் கேன் வில்லியம்சன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இரட்டை சதம் அடித்தார். 2-வது டெஸ்ட் போட்டியில் மனைவிக்கு குழந்தை பிறந்ததால் விளையாடவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த நிலையில், 3-வது டெஸ்டிலும் சதம் விளாசினார்.

    இந்த சீசனில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் சதம் கண்டுள்ளார். இந்த நிலையில் கேன் வில்லியம்சன் எந்தவொரு இளைஞருக்கும் உண்மையான முன்மாதிரி என்று இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் வீரர் லட்சுமண் புகழாரம் சூட்டியுள்ளார்.

    மேலும், கேன் வில்லியம்சன் இதுகுறித்து கூறுகையில் ‘‘தொடர்ச்சியாக கேன் வில்லியம்சன் சதம் அடிப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. ஒர்க் எத்திக்ஸ் நம்பமுடியாத வகையில் உள்ளது. அவருடைய வெற்றிக்கு பின்னால், எந்தவொரு போட்டிக்கும் அவர் தயார் ஆகுவதுதான் முக்கிய காரணமாக உள்ளது. எந்தவொரு இளைஞருக்கும் உண்மையான முன்மாதிரியாக உள்ளார்’’ என்றார்.
    பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆசிஃப் பந்தை எதிர்கொள்ளும்போது பேட்ஸ்மேன்கள் கண்ணீர் விட்டதை நான் பார்த்தேன் என சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
    பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் முகமது ஆசிஃப். துல்லியமான வகையில் பந்து வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தினார். இதனால் அடுத்த மெக்ராத் என எதிர்பார்க்கப்பட்டார். அந்த நேரத்தில்தான் 2010-ல் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மேட்ச் பிக்சிங்சில் ஈடுபட்டார்.

    இதனால் ஐந்தாண்டு தடைபெற்றார். அதன்பின் முகமது ஆசிஃபால் பாகிஸ்தான் தேசிய அணிக்கு அவரால் திரும்பமுடியவில்லை.

    இந்த நிலையில் முகமது ஆசிஃப் பந்தை எதிர்கொள்ளும்போது எதிரணி பேட்ஸ்மேன்கள் அழுதார்கள். அதை நான் பார்த்தேன் என்று சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சோயிப் அக்தர் கூறுகையில் ‘‘முகமது ஆசிஃப் பந்து வீச்சை நான் பார்த்தவகையில், வாசிம் அக்ரமை விட சிறந்தவராக இருந்தார். அவரது பந்து வீச்சை பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ளும்போது கண்ணீர் விட்டதை பார்த்தேன். லட்சுமண் கூட ஒருமுறை, முகமது ஆசிஃபின் பந்து வீச்சை எதிர்கொள்வது எப்படி எனச் சொன்னார். ஆசியா டெஸ்ட் சாம்பியன்சிப்பில் ஏபி டி வில்லியர்ஸ் அழ ஆரம்பித்தார்.

    அவருக்குப்பின் தற்போது பும்ரா புத்திசாலியான பந்து வீச்சாளராக திகழ்கிறார். டெஸ்ட் போட்டியில் அவரது உடற்தகுதி குறித்து சந்தேகம் எழுப்பினர். நான் கூட அவரை நெருக்கமாக பார்க்கும்போது அப்படித்தான் தோன்றியது’’ என்றார்.

    முகமது ஆசிஃப் 23 டெஸ்ட் போட்டிகளில் 106 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார்.
    ×