search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சஞ்சய் மஞ்ச்ரேக்கர்
    X
    சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

    பயோ-செக்யூர் விதிமுறையை கடைபிடித்துதான் ஆக வேண்டும்: சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

    அணியில் இடம் பிடித்து விளையாட தேர்வாகியிருந்தால் பயோ-பபுளில்தான் இருக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணி வீரர்கள்  ஆஸ்திரேலியா சென்ற போது 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டனர். 3-வது டெஸ்ட் சிட்னியில் நடைபெற இருக்கிறது. அதன்பின் 4-வது மற்றும் கடைசி போட்டி பிரிஸ்பேனில் நடக்கிறது. பிரிஸ்பேன் மைதானம் உள்ள குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கொரோனா விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

    இதனால் மீண்டும் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடுமையான வகையில் கடைபிடிப்பது இயலாத காரியம். அதனால் பிரிஸ்பேன் செல்ல விருப்பம் இல்லை என்று இந்திய அணி வீரர்கள் கூறியதாக செய்திகள் வெளியானது.

    இதற்கு பதில் அளித்த குயின்ஸ்லாந்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஸ் பேட்ஸ் ‘‘இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு விளையாட தயாராக இல்லையென்றால் இங்கே வராதீர்கள்” என்றார்.

    இந்நிலையில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது கருத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். “அணியில் இடம் பிடித்து விளையாட தேர்வாகியிருந்தால் பயோ-பபுள் என்ற கடுமையான கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து, அதற்கு மதிப்பு கொடுத்துதான் இருக்க வேண்டும். அதற்கு தயாராக இருப்பவர்கள் மட்டுமே வரலாம். அப்படி இல்லையென்றால் தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு வரவே வேண்டாம். அப்படியே போய்விடலாம். அதைவிடுத்து இரண்டையும் எதிர்பார்க்க முடியாது” என சொல்லியுள்ளார்.

    இதற்கிடையில் ரோகித் சர்மா உள்பட ஐந்து இந்திய வீரர்கள் விதிமுறையை மீறியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
    Next Story
    ×