என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜுன், முதன்முறையாக இன்று மும்பை அணிக்காக களம் இறங்கி ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
    கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர். இவரின் மகன் அர்ஜுன் (வயது 21). இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் மும்பை ஜூனியர் அணியில் இடம் பிடித்து விளையாடியிருக்கிறார்.

    தற்போது இந்தியாவின் உள்ளூர் டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதற்கான மும்பை அணியில் அர்ஜுன் இடம் பிடித்திருந்தார்.

    இன்றைய ஆட்டத்தில் மும்பை அணி ஹரியானாவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதன்முறையாக மும்பை சீனியர் அணியில் அர்ஜூன் தெண்டுல்கர் அறிமுகம் ஆனார்.

    முதலில் பேட்டிங் செய்த மும்பை 143 ரன்கள் அடித்தது. அர்ஜுன் தெண்டுல்கருக்கு பந்தை எதிர்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னர் 144 ரலன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹரியானா களம் இறங்கியது. அந்த அணி 17.4 ஓவரில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.

    அர்ஜுன் தெண்டுல்கர் அவர் வீசிய 2-வது ஓவரின் முதல் பந்தில் விக்கெட் சாய்த்தார். இறுதியா 3 ஓவரில் 34 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
    மும்பை அணிக்கெதிராக 197 இலக்கை வெற்றிகரமாக எட்டிய கேரளா, இன்றைய ஆட்டத்தில் டெல்லிக்கு எதிராக 213 இலக்கை சூப்பராக சேஸிங் செய்தது.
    சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் டெல்லி - கேரளா அணிகள் மோதின. முதலில் விளையாடிய டெல்லி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. தவான் அதிகபட்சமாக 48 பந்தில் 77 ரன்களும், லலித் யாதவ் ஆட்டமிழக்காமல் 25 பந்தில் 52 ரன்களும் விளாசினர்.

    பின்னர் 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கேரளா அணி களம் இறங்கியது. கடந்த போட்டியில் சதம் அடித்த முகமது அசாருதீன் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரர் ரபின் உத்தப்பா 54 பந்தில் 91 ரன்கள் விளாசினார். விஷ்னு வினோத் 38 பந்தில் 71 ரன்கள் விளாச கேரளா 19 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    கேரளா முந்தைய போட்டியில் மும்பை அணிக்கெதிராக 197 ரன் இலக்கை எளிதாக சேஸிங் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    காலேயில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் ஜோ ரூட் அபாரமாக விளையாடி 168 ரன்கள் விளாச இங்கிலாந்து 185 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
    இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 135 ரன்னில் சுருண்டது.

    பின்னர் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து 41 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்திருந்தது. பேர்ஸ்டோவ் 47 ரன்களுடனும், ஜோ ரூட் 66 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜோ ரூட், பேர்ஸ்டோவ் ஆட்டத்தை தொடர்ந்தனர். பேர்ஸ்டோவ் நேற்றைய 47 ரன்னிலேயே வெளியேறினார்.

    அடுத்து வந்த ஜோ ரூட் உடன் அறிமுக வீரர் டான் லாரன்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஜோ ரூட் 163 பந்தில் சதம் அடித்தார். மறுமுனையில் 95 பந்தில் அரைசதம் அடித்தார்.

    தொடர்ந்து விளையாடிய டான் லாரன்ஸ் 73 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் ஜோ ரூட் இரட்டை சதம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    இங்கிலாந்து அணி 94 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 320 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. அத்துடன் 2-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஜோ ரூட் 168 ரன்களுடனும், ஜோஸ்  பட்டர் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தற்போது வரை இங்கிலாந்து 185 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு டெஸ்டிலும் ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் மட்டுமே விளையாடியுள்ளனர். மற்றவர்கள் காயத்தால் நான்கிலும் விளையாடவில்லை.
    ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. அதில் இருந்து மீண்டு மெல்போர்ன் டெஸ்டில் அசத்தல் வெற்றி பெற்றது.

    இதனால் டெஸ்ட் தொடர் கடும் சவாலாக இருந்தது. ஆனால் இந்திய அணி, வீரர்கள் காயத்தால் சற்று நிலைகுலைந்து போனது. முதல் டெஸ்டில் முகமது ஷமி காயம் அடைந்தார். விராட் கோலி அடிலெய்டு டெஸ்ட் முடிந்த உடன் இந்தியா திரும்பினார்.

    2-வது டெஸ்டில் உமேஷ் யாதவ் காயம் அடைந்தார். அந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 3-வது டெஸ்டின்போது ஜடேஜா, ஹனுமா விஹாரி, அஸ்வின், பும்ரா ஆகியோர் காயம் அடைந்தனர். இதனால் டி நடராஜன், வாஷிங்டன் சுந்தர், மயங்க் அகர்வால், ஷர்துல் தாகூர் ஆகியோர் 4-வது டெஸ்டில் இடம் பிடித்தனர்.

    மயங்க் அகர்வால் 2-வது மற்றும் 3-வது டெஸ்டில் விளையாடவில்லை. ரோகித் சர்மா முதல் இரண்டு டெஸ்டில் விளையாடவில்லை. இந்த வகையில் ரஹானே, புஜாரா ஆகியோர் மட்டுமே நான்கு டெஸ்டிலும் இடம் பிடித்துள்ளனர்.
    ஆஸ்திரேலியா தொடரில் ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டி என மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் அறிமுகமாகி டி நடராஜன் சாதனைப் படைத்துள்ளார்.
    தமிழகத்தைச் சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன். இவர் ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாட ஆஸ்திரேலியா தொடருக்கான டி20 இந்திய அணியில் இடம்பிடித்தார். முதலில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் களம் இறங்காத டி. நடராஜன் 3-வது ஒருநாள் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டார்.

    இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகம் ஆனார். முதல் போட்டியிலேயே சிறப்பாக பந்து வீச, அடுத்து நடந்த டி20 கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். இவரது சிறப்பான பந்து வீச்சால் இந்தியா டி20 தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.

    டி நடராஜன்

    அதன்பின் டெஸ்ட் போட்டிக்கான வலைப்பயிற்சி வீரராக அணியுடன் அங்கேயே தங்கினார். வேகப்பந்து வீச்சாளர்கள் பலர் காயம் அடைய இன்று பிரிஸ்பேனில் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். முதல் போட்டியிலேயே லாபஸ்சேன், மேத்யூ வடே விக்கெட்டுகளை சாயத்தார்.

    இதன்மூலம் ஒரே பயணத்தில் மூன்று வடிவிலான கிரிக்கெட்லும் அறிமுகம் ஆன ஒரே இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
    இந்தியாவுக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்டில் லாபஸ்சேன் சதம் அடிக்க, ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் அடித்துள்ளது.
    ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் டி நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அறிமுகம் ஆனார்கள். மயங்க் அகர்வால், ஷர்துல் தாகூர் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.

    வார்னர், மார்கஸ் ஹாரிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரின் கடைசி பந்திலேயே முகமது சிரஜ் வார்னரை சாய்த்தார். 1 ரன்னில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வார்னர் ஏமாற்றம் அடைந்தார்.

    மற்றொரு தொடக்க வீரரான மார்கஸ் ஹாரிஸ் 5 ரன் எடுத்த நிலையில் ஷர்துல் தாகூர் பந்தில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு லாபஸ்சேன் உடன் ஸ்டீவ் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது.

    ஸ்டீவ் 36 ரன்கள் எடுத்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்தில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு லாபஸ்சேன் உடன் மேத்யூ வடே ஜோடி சேர்ந்தார். லாபஸ்சேன் 37 ரன்கள் எடுத்த நிலையில் நவ்தீப் சைனி பந்தில் ராஹேனியுடம் கேட்ச் வாய்ப்பை கொடுத்தார். ரஹானே அந்த வாய்பை தவறவிட்டார்.

    அதனால் அரைசதம் அடித்த லாபஸ்சேன், அரை சதமாக மாற்றினார். மறுமுனையில் மேத்யூ வடே 45 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சதம் அடித்த லாபஸ்சேன் 108 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி டி நடராஜன் அசத்தினார். இந்த ஜோடி 113 ரன்கள் விளாசியது ஆஸ்திரேலியாவுக்கு பூஸ்டாக அமைந்தது.

    லாபஸ்சேன் ஆட்டமிழக்கும்போது ஆஸ்திரேலியா 65.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்திருந்தது.

    6-வது விக்கெட்டுக்கு டிம் பெய்ன் உடன் கேமரூன் க்ரீன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இன்றைய முதல்நாள் ஆட்டம் முடியும் வரை ஆட்டமிழக்காமல் இருந்தது. இதனால் ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் அடித்துள்ளது. கேமரூன் க்ரீன் 28 ரன்களுடனும், டிம் பெய்ன் 38 ரன்களுடனும்  களத்தில் உள்ளனர்.

    இந்திய  அணி தரப்பில் டி நடராஜன் அதிகபட்சமாக 2 விக்கெட் வீழ்த்தினார்.
    இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் நீடிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணி பந்து வீச்சைத் துவங்கியது.

    போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா, சுப்மான் கில், புஜாரா, அஜிங்யா ரஹானே (கேப்டன்), மயங்க் அகர்வால், ரிஷாப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர்,  நவ்தீப் சைனி, முகமது சிராஜ், டி.நடராஜன்.

    ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், புகோவ்ஸ்கி அல்லது மார்கஸ் ஹாரிஸ், லபுஸ்சேன், ஸ்டீவன் சுமித், மேத்யூ வேட், டிம் பெய்ன் (கேப்டன்), கேமரூன் கிரீன், கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஹேசில்வுட்.
    பிரிஸ்பென் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் அறிமுக வீரராக களம் இறங்க உள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையில் நான்கு போட்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றது. 3-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.

    4-வது மற்றும் கடைசி டெஸ்ட் பிரிஸ்பேன் நகரில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும். பிரிஸ்பேன் கபா மைதானத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல.

    பொதுவாக போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே இரு அணிகளும் ஆடும் லெவன் அணியை அறிவித்துவிடும்.

    இந்திய அணியில் விஹாரி, ஜடேஜா விளையாடாதது உறுதி செய்யப்பட்ட ஒன்று. ஆனால் பும்ரா, அஸ்வின் ஆகியோரும் இடம்பெறுவார்களா? என்பதுதான் கேள்வியாக இருந்தது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் களம் இறங்குகிறார்.  மேலும் சுழற்பந்து வீச்சாளராக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் கடைசி டெஸ்ட் போட்டியில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லாவுக்கு எதிராக இரட்டை ஆதாய புகார் கொடுக்கப்பட்டதால் விளக்கம் அளிக்க கேட்கப்பட்டுள்ளது.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கீழ் இருப்பவர்கள் பிசிசிஐ-யுடன் தொடர்புடைய மற்ற தொழில்களில் தங்களை ஈடுபடுத்தக்கூடாது. அப்படி ஈடுபடுத்தினால் இரட்டை ஆதாயம் (conflict of interest) பெறும் வகையில் ஈடுபட்டதாக கருதப்படும்.

    விராட் கோலி, பிசிசிஐ தலைவர் கங்குலி உள்பட பலர் இந்த விவகாரத்தில் சிக்கியுள்ளனர். இந்த நிலையில் பிசிசிஐ-யின் துணைத் தலைவராக இருக்கும் ராஜீவ் சுக்லா மீதும் இரட்டை ஆதாய புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இதுபோன்ற வழக்குகளை விசாரிக்க நெறிமுறை அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பிசிசிஐ மற்றும் ராஜீவ் சுக்லா ஆகியோருக்கு இன்னும் இரண்டு வாரங்களில் புகார் குறித்து விளக்கம் அளிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
    பிரிஸ்பென் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரர் வில் புகோவ்ஸ்கி காயம் காரணமாக இடம்பெறமாட்டார் என டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையில் நான்கு போட்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றது. 3-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.

    4-வது மற்றும் கடைசி டெஸ்ட் பிரிஸ்பேன் நகரில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும். பிரிஸ்பேன் கபா மைதானத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல.

    பொதுவாக போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே இரு அணிகளும் ஆடும் லெவன் அணியை அறிவித்துவிடும். ஆஸ்திரேலியா அணியில் வில் புகோவ்ஸ்கி கடந்த சிட்னி டெஸ்டில் அறிமுகம் ஆனார். முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்தார்.

    பீல்டிங் செய்யும்போது அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் நாளைய பிரிஸ்பேன் டெஸ்டில் அவர் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக மார்கஸ் ஹாரிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றபடி அணியில் மாற்றம் இல்லை.

    இந்திய அணியில் விஹாரி, ஜடேஜா விளையாடாதது உறுதி செய்யப்பட்ட ஒன்று. ஆனால் பும்ரா, அஸ்வின் ஆகியோரும் இடம்பெறுவார்களா? என்பதுதான் கேள்வி. இதனால் இந்தியாவுக்கான ஆடும் லெவன் அணி அறிவிக்கப்படவில்லை. நாளை காலை வரை வீரர்களின் உடற்தகுதியை பார்த்த பின் அறிவிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    காலே மைதானத்தில் இன்று தொடங்கிய டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 135 ரன்னில் சுருண்டது.
    இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் காலோ மைதானத்தில் இன்று தெடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர் திரிமானே 4 ரன்னிலும், குசால் பெரேரா 20 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த குசால் மெண்டிஸ் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அனுபவ மேத்யூ 27 ரன்களும், சண்டிமல் 28 ரன்களும் எடுத்தனர். ஆனால் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் டாம் பெஸ் விக்கெட்டுகளாக சரிக்க இலங்கை அணி 135 ரன்னில் சுருண்டது. அந்த அணியால் 46.1 ஓவர்கள் மட்டுமே சந்திக்க முடிந்தது.

    இங்கிலாந்து அணி சார்பில் டாம் பெஸ் 10.1 ஓவரில் 30 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கட் வீழ்த்தினார். ஸ்டூவர்ட் பிராட் 9 ஓவரில் 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
    இந்தியன் சூப்பர் லீக் 57-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஒடிசா எப்.சி.யை வீழ்த்தியது
    கோவா:

    7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 57-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஒடிசா எப்.சி.யை வீழ்த்தியது. சென்னை அணியில் இஸ்மாயில் கோன்கால்வ்ஸ் 15 மற்றும் 21-வது நிமிடங்களில் கோல் அடித்தார்.

    11-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி 3 வெற்றி, 5 டிரா, 3 தோல்வி என்று 14 புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு முன்னேறியது. ஒடிசாவுக்கு இது 7-வது தோல்வியாகும். இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் எப்.சி.கோவா-ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதுகின்றன.

    ×