என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பியூர்டோ ரிகோ வீராங்கனை 12.37 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார்.
    டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 100மீ தடைதாண்டுதல் ஓட்டத்தின் இறுதிச்சுற்று இன்று நடைபெற்றது. இதில் 8 வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டி தொடங்கியதும் வீராங்கனைகள் சிட்டாக பறந்தனர். பியூர்டோ ரிகோ வீராங்கனை ஜேஸ்மின் கமாசோ குயின் தடைகளை தாண்டி பந்தய தூரத்தை 12.37 வினாடிகளில் கடந்த தங்கப்பதக்கம் வென்றார்.

    போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனைகள்

    அமெரிக்க வீராங்கனை கெண்ட்ரா ஹாரிஸ்சன் 12.52 வினாடிகளில் கடந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். ஜமைக்கா வீராங்கனை மேகன் டாப்பர் 12.55 வினாடிகளில் கடந்து வெண்கலப்பதக்கம் வென்றார்.
    2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் இறுதிப்போட்டிவரை முன்னேறி வெள்ளிப்பதக்கத்தை பெற்ற சிந்து இந்த முறை வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.
    டோக்கியோ:

    டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கத்தை சென் யூ பேவும் (சீனா), வெள்ளிப்பதக்கத்தை தாய் சு யிங்கும் (சீன தைபே), வெண்கலப்பதக்கத்தை பி.வி.சிந்துவும் (இந்தியா) வென்றனர்.

    அரைஇறுதியில் நேற்று முன்தினம் தாய் சு யிங்கிடம் தோல்வி அடைந்த சிந்து நேற்று நடந்த வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் 21-13, 21-15 என்ற நேர் செட்டில் சீனாவின் இடக்கை வீராங்கனையான ஹி பிங் ஜியாவை தோற்கடித்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.

    2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் இறுதிப்போட்டிவரை முன்னேறி வெள்ளிப்பதக்கத்தை பெற்ற சிந்து இந்த முறை வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.

    வெற்றிக்கு பிறகு 26 வயதான சிந்து கூறுகையில், ‘இந்த ஆட்டம் எனக்கு உணர்வுபூர்வமாக அமைந்தது. உணர்ச்சிப்பெருக்குடன் விளையாடி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். நாட்டுக்காக பதக்கம் வென்றதை நினைத்து பெருமிதம் அடைகிறேன்’ என்று குறிப்பிட்டார்.

    சிந்துவின் குடும்பம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வசிக்கிறது. அவரது தந்தை பி.வி.ரமணா முன்னாள் சர்வதேச கைப்பந்து வீரர். அர்ஜூனா விருது பெற்றவர். தாயார் பி.விஜயாவும் கைப்பந்து வீராங்கனை தான். விஜயா, விஜயவாடாவில் பிறந்தாலும் சில ஆண்டுகள் தனது குடும்பத்தினருடன் சென்னை தியாகராய நகரில் வசித்தார். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையிலேயே முடித்த விஜயா தமிழ்நாடு கைப்பந்து அணிக்காக விளையாடி இருக்கிறார்.

    தனது 8½ வயதில் பேட்மிண்டன் விளையாடத் தொடங்கிய சிந்து ஐதராபாத்தில் கோபிசந்த் அகாடமியில் சேர்ந்தார். அங்கு கோபிசந்தின் பயிற்சியின் கீழ் பட்டை தீட்டப்பட்ட சிந்து தேசிய போட்டிகள், சர்வதேச போட்டிகளில் வெற்றிகளை குவித்தார். உலக சாம்பியன்ஷிப்பில் 5 பதக்கமும் (ஒரு தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம்) ஒலிம்பிக்கில் 2 பதக்கமும் வென்று இந்திய பேட்மிண்டனை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

    சிந்துவின் தந்தை ரமணா கூறுகையில், ‘சிந்துவின் பயிற்சியாளர் பார்க் டா சாங்குக்கு (தென்கொரியா) நன்றி சொல்ல விரும்புகிறேன். இதே போல் சிந்துவுக்கு ஆதரவாக இருந்த மத்திய அரசு, பேட்மிண்டன் சம்மேளனம், ஊடகத்தினருக்கும் நன்றி. தேசத்துக்காக சிந்து பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அதுவும் அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் தொடர்ச்சியாக பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்பது பெருமையாக இருக்கிறது.

    சிந்து அரைஇறுதியில் தோல்வி அடைந்ததும் வேதனையில் கண் கலங்கினார். அவருக்கு போன் செய்து ஆறுதல் கூறினேன். மனம் தளரக்கூடாது. அடுத்த போட்டியில் எனக்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்று அவரிடம் சொன்னேன். சீன வீராங்கனை ஹி பிங் ஜியாவின் ஆட்ட நுணுக்கங்கள் குறித்து சில விஷயங்களை பகிர்ந்தேன். அத்துடன் அவரது ஆட்ட வீடியோ காட்சிகளையும் அனுப்பி வைத்தேன்.

    சிந்து 3-ந்தேதி (நாளை) டெல்லி திரும்புகிறார். அவரை வரவேற்க நான் டெல்லி செல்ல உள்ளேன். அடுத்த ஒலிம்பிக்கிலும் சிந்து விளையாடுவார் என்று நம்புகிறேன். அவர் தொடர்ந்து உற்சாகமாக விளையாடி வருகிறார்’ என்றார்.

    ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் கியூபா வீரர்கள் வெள்ளி, வெண்கலப்பதக்கம் வென்றனர்.
    டோக்கியோ ஒலிம்பிக்கில் தற்போது தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டி நடைபெற்றது. இதில் கிரீஸ் வீரர் மில்டியாடிஸ் 8.41 (+0.1) மீட்டர் தூரம் கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.

    மில்டியாடிஸ்

    கியூபா வீரர் ஜுயன் முகுயெல் 8.41 (+0.2) மீட்டர் தூரம் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். மற்றொரு கியூபா வீரர் மேகெல் 8.21 (+0.4) மீர் தூரம் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
    டோக்கியோ ஒலிம்பிக்கில் தகுதிச் சுற்றுக்கான ஹீட் 4 பிரிவில் டுட்டி சந்த் 7வது இடம் பிடித்துள்ளார்.
    டோக்கியோ:

    டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 200 மீட்டர் ஒட்டப்பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை டுட்டி சந்த் கலந்து கொண்டார்.

    தகுதிச் சுற்றுக்கான ஹீட் 4 பிரிவில் டுட்டி சந்த் 7-வது இடத்தையே பிடிக்க நேர்ந்தது. இதனால் டுட்டி சந்த்தின் பதக்க கனவு முடிவுக்கு வந்தது.
    திண்டுக்கல் அணிக்கு எதிரான போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீசின் ஜெகதீசன், கவுசிக் காந்தி ஜோடி முதல் விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்தது.
    சென்னை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
     
    முதலில் பேட் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது.

    தொடக்க வீரர்கள் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கவுசிக் காந்தி 45 ரன்னும், ஜெகதீசன் 40 ரன்னும் எடுத்தனர்.

    அதிரடி காட்டிய கவுசிக் காந்தி

    திண்டுக்கல் சார்பில் சிலம்பரசன் 2 விக்கெட், ரங்கராஜ் சுதேஷ், விக்னேஷ், ஹரிஹரன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஹரி நிஷாந்த் 39 ரன்னில் அவுட்டானார். ராஜாமணி சீனிவாசன் 24 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், திண்டுக்கல் அணி 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள்மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சேப்பாக் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது சேப்பாக் அணி பெற்ற 2வது வெற்றி ஆகும். 

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சார்பில் சாய் கிஷோர் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். 
    அதிரடியாக ஆடிய கவுசிக் காந்தி 31 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 45 ரன்கள் விளாசினார்.
    சென்னை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் கவுசிக் காந்தி, விக்கெட் கீப்பர் ஜெகதீசன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை அளித்தனர். கவுசிக் காந்தி 31 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 45 ரன்கள் விளாசினார். இதேபோல் ஜெகதீசன் 27 பந்துகளை எதிர்கொண்டு 3 சிக்சர்களுடன் 40 ரன்கள் குவித்தார்.

    சோனு யாதவ் (6), ராஜகோபால் சதீஷ் (11), ஹரிஷ் குமார் (6), ஜெகநாத் ஸ்ரீனிவாஸ் (0) ஆகியோர் விரைவில் ஆட்டமிழக்க, சேப்பாக் சூப்பர் கில்லீஸ், 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது.

    திண்டுக்கல் தரப்பில் எம்.சிலம்பரசன் 2 விக்கெட் வீழ்த்தினார். ரங்கராஜ் சுதேஷ், விக்னேஷ், ஹரிஹரன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.  இதையடுத்து 160 ரன்கள் என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது.
    டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிராக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
    சென்னை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்று இரவு நடைபெறும் 19வது ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற  திண்டுக்கல் டிராகன்ஸ் பீல்டிங் செய்ய முடிவு செய்தது.  

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: கவுசிக் காந்தி, ஜெகதீசன், சுஜய், ராஜகோபால் சதீஷ், உதிரசாமி சசிதேவ், சோனு யாதவ், ராதாகிருஷ்ணன், ஹரிஷ் குமார், ஜெகனாத் ஸ்ரீனிவாஸ், மணிமாறன் சித்தார்த், அலேக்ஸாண்டர்.

    திண்டுக்கல் அணி வீரர்கள்;- அருண், நிஷாந்த், மணிபாரதி, மோஹித், விவேக், விக்னேஷ், லோகேஷ்வர், குர்ஜப்நீத், சுதீஷ், சுவாமிநாதன், சிலம்பரசன்.
    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்தது.
    சென்னை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 18வது ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ், ரூபி திருச்சி வாரியார்ஸ் அணிகள் விளையாடின. இப்போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக முருகன் அஸ்வின் 21 ரன்கள் எடுத்தார். அக்சய் சீனிவாசன் 19 ரன்களும்,  அபிஷேக் 14 ரன்களும், கேப்டன் டேரில் பெராரியோ 14 ரன்களும் எடுத்தனர்.

    இதையடுத்து 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிங்கிய திருச்சி அணி, 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 120 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    துவக்க வீரர்கள் சந்தோஷ் ஷிவ் (6), அமித் சாத்விக் (18) ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்தனர். முகமது அத்னன் கான் 13 ரன்களிலும், நிதிஷ்  ராஜகோபால் 22 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின்னர் 5வது விக்கெட்டுக்கு இணைந்த ஆதித்ய கணேஷ் (28), அந்தோணி தாஸ் (24) கடைசி வரை நின்று அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இதனால் திருச்சி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சேலம் தரப்பில் பெரியசாமி 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். திருச்சி அணி கேப்டன் ரகில் ஷா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    திருச்சி அணி  இதுவரை 6 லீக் போட்டிகளில்  விளையாடி உள்ளது. இதில் 4 வெற்றி, 2 தோல்வி என மொத்தம் 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
    இங்கிலாந்துக்கு எதிராக மூன்று கால் பகுதி ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்ட இந்திய ஹாக்கி அணி, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
    டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியில் இன்று காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. 4-வது காலிறுதி ஆட்டத்தில் இந்தியா- கிரேட் பிரிட்டன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    41 ஆண்டுகளுக்குப்பின் அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்ற துடிப்புடன் இந்திய வீரர்கள் களம் இறங்கினா். முதல் கால்பகுதி (15 நிமிடம்) ஆட்டம் தொடங்கியதும், ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் இந்திய வீரர் தில்ப்ரீத் சிங் கோல் அடித்தார். இதனால் இந்தியா 1-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.

    2-வது கால்பகுதி ஆட்டம் தொடங்கியதும், 16-வது நிமிடத்தில் இந்தியா மேலும் ஒரு கோல் அடித்தது. இந்த முறை குர்ஜந்த் சிங் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேர (30 நிமிடம்) ஆட்டத்தில் இந்தியா 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.

    3-வது கால் பகுதி ஆட்டத்தில் கிரேட் பிரிட்டன் வீரர்களை கோல் அடிக்க விடாமல் இந்திய வீரர்கள் சிறப்பான வகையில் தடுத்தனர். ஆட்டத்தின் 45-வது நிமிடத்தில் கிரேட் பிரிட்டனுக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி அந்த அணியின் வார்டு கோல் அடித்தார். இதனால் 3-வது கால் பகுதி (45 நிமிடம்) ஆட்ட முடிவில் இந்தியா 2-1 என முன்னிலைப் பெற்றிருந்தது.

    பந்தை கடத்தும் இந்திய வீரர்

    4-வது கால் பகுதி ஆட்டத்தில் எப்படியாவது கோல் அடித்துவிட வேண்டும் என்று கிரேட் பிரிட்டன் விளையாடியது. அதேவேளையில் தடுப்பு ஆட்டத்துடன் மேலும் கோல் அடிக்கும் நோக்கத்துடன் இந்திய வீரர்கள் விளையாடினர்.

    ஆட்டத்தின் 57-வது நிமிடத்தில் இந்தியாவின் ஹர்திக் சிங் கோல் அடிக்க இந்தியா 3-1 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் கிரேட் பிரிட்டன் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் இந்தியா ஆட்ட முடிவில் (60 நிமிடம்) 3-2 என வெற்றி பெற்று 41 ஆண்டுகளுக்குப்பின் ஒலிம்பிக்கில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
    ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றதையடுத்து, அவரது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
    புதுடெல்லி:

    டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியின் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம், ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் 2 பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    ஒலிம்பிக்கில் சாதனை படைத்த பி.வி. சிந்துவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல், மன்சுக் மாண்டவியா, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, தமிழக முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் பல்வேறு தலைவர்கள், விளையாட்டு பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

    ரசிகர்கள் பி.வி.சிந்துவின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திவருகின்றனர். பி.வி.சிந்து இந்தியாவின் பெருமை என பாராட்டுகின்றனர்.
    இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, அடுத்தடுத்து இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
    டோக்கியோ :

    ஒலிம்பிக் போட்டியின் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்து அரையிறுதி வரை முன்னேறினார். ஆனால், அரையிறுதியில் சீன தைபேய் வீராங்கனை தை சூ-யிங்கிடம் அதிர்ச்சிகரமாக தோல்வியடைந்தார்.

    இதையடுத்து மற்றொரு அரையிறுதியில் தோல்வி அடைந்த சீன வீராங்கனை ஹி பிங் ஜியாவோவை வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இன்று எதிர்கொண்டார் சிந்து. துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய பி.வி.சிந்து, முதல் செட்டை 21-13 என வசமாக்கினார். அடுத்த செட்டில் சீன வீராங்கனை சற்று நெருக்கடி அளித்தார். எனினும், சுதாரித்து ஆடிய சிந்து, அந்த செட்டை 21-15 என கைப்பற்றினார்.

    தடுமாறி விழுந்த சீன வீராங்கனை ஹி பிங் ஜியாவோ

    இதனால் 21-13, 21-15 என்ற நேர் செட்களில் பி.வி.சிந்து வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை தனதாக்கினார். இதன்மூலம், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

    இந்த வெற்றியின்மூலம் அடுத்தடுத்து இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் சிந்து. ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதற்கு முன்பு, 2016ல் பிரேசில் நாட்டில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
    சேலம் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது.
    சென்னை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. பிற்பகல் தொடங்கிய ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ், ரூபி திருச்சி வாரியார்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி, திருச்சி பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினர். துவக்க வீரர்கள் அக்சய் சீனிவாசன் 19 ரன்களும்,  அபிஷேக் 14 ரன்களும் சேர்த்தனர். உமா சங்கர் 11 ரன்னள், கேப்டன் டேரில் பெராரியோ 14 ரன்கள், முருகன் அஸ்வின் 21 ரன்கள், ரத்னம் 12 ரன்கள் (நாட் அவுட்) எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால், 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்தது.

    திருச்சி தரப்பில் சரவண குமார், பொய்யாமொழி ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.  இதையடுத்து 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது.
    ×