என் மலர்
செய்திகள்

ஆக்ரோஷமாக பந்து வீசும் மதிவண்ணன்
டிஎன்பிஎல் கிரிக்கெட்- சேலம் அணியை 116 ரன்களில் கட்டுப்படுத்தியது திருச்சி
சேலம் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது.
சென்னை:
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. பிற்பகல் தொடங்கிய ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ், ரூபி திருச்சி வாரியார்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி, திருச்சி பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினர். துவக்க வீரர்கள் அக்சய் சீனிவாசன் 19 ரன்களும், அபிஷேக் 14 ரன்களும் சேர்த்தனர். உமா சங்கர் 11 ரன்னள், கேப்டன் டேரில் பெராரியோ 14 ரன்கள், முருகன் அஸ்வின் 21 ரன்கள், ரத்னம் 12 ரன்கள் (நாட் அவுட்) எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால், 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்தது.
திருச்சி தரப்பில் சரவண குமார், பொய்யாமொழி ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது.

Next Story