என் மலர்
செய்திகள்

பதக்கம் வென்ற வீராங்கனைகள்
பெண்கள் 100மீ தடைதாண்டுதல் ஓட்டம்: அமெரிக்கா வெள்ளி, ஜமைக்கா வெண்கலம்
பியூர்டோ ரிகோ வீராங்கனை 12.37 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 100மீ தடைதாண்டுதல் ஓட்டத்தின் இறுதிச்சுற்று இன்று நடைபெற்றது. இதில் 8 வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டி தொடங்கியதும் வீராங்கனைகள் சிட்டாக பறந்தனர். பியூர்டோ ரிகோ வீராங்கனை ஜேஸ்மின் கமாசோ குயின் தடைகளை தாண்டி பந்தய தூரத்தை 12.37 வினாடிகளில் கடந்த தங்கப்பதக்கம் வென்றார்.

அமெரிக்க வீராங்கனை கெண்ட்ரா ஹாரிஸ்சன் 12.52 வினாடிகளில் கடந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். ஜமைக்கா வீராங்கனை மேகன் டாப்பர் 12.55 வினாடிகளில் கடந்து வெண்கலப்பதக்கம் வென்றார்.
Next Story






