என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆட்டத்தின் 22 வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை குர்ஜித் கவுர் கோல் அடித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.
    டோக்கியோ:

    ஜப்பான் தலைகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தியப் பெண்கள் ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவுடன் இரண்டாவது காலிறுதி போட்டியில் விளையாடியது.
    முதல் கால் பகுதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல்கள் அடிக்கவில்லை. அடுத்த கால் பகுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகள் அசத்தலாக விளையாடினர். குர்ஜித் கவுர் ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் அபாரமான கோலை அடித்தார். இதனால் இந்தியா 1-0 என்று முன்னிலையில் இருந்தது.

    போட்டி முடிவு வரை இதே நிலைத் தொடர இந்தியாவின் வெற்றி உறுதியானது. ஒலிம்பிக்கில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி, அரையிறுதிக்குள் நுழைவது இதுவே முதல்முறையாகும்.

     சோனி ஸ்போர்ட்ஸ் இந்தியா எனும் தொலைக்காட்சி இதை நேரலை செய்தபோது வர்ணனையாளர்கள் தங்களையும் மறந்து மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தக் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
    டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச்சுடுதல், பளுதூக்குதல் போட்டிகளில் சீனா தங்கம் வென்றது.
    டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 50மீ ரைபிள் 3 பொசிசன்ஸ் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் சீனா தங்கம் வென்றது. சீனாவின் சாங்ஹோங் ஷாங் 466 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். மேலும் 466 புள்ளிகளுடன் ஒலிம்பிக் மற்றும் உலக சாதனைப் படைத்து அசத்தினார். ரஷ்யா வீரர் செர்கே காமென்ஸ்கி 464.2 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். செர்பிய வீரர் மிலென்கோ செபிக் 448.2 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார்.

    பெண்களுக்கான 87 கிலோ எடைப்பிரிவு குரூப் ‘ஏ’ பளுதூக்குதல் போட்டியில் சீன வீராங்கனை வாங் ஸ்னாட்ச் முறையில் 120 கிலோ, க்ளீன் அண்டு ஜெர்க் முறையில் 150 கிலோ என மொத்தம் 270 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கம் வென்றார்.

    பளுதூக்கும் போட்டியில் பதக்கம் வென்றவர்கள்

    ஈகுவடார் வீராங்கனை யஜைரா தமரா 113+150 என 263 கிலோ எடையை தூக்கி வெள்ளிப்பதக்கம் வென்றார். டொமினிக்கன் ரிபப்ளிக் வீராங்கனை சான்டனா 116+140 என 256 கிலோ எடையை தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.
    டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள், பெண்கள் ஆக்கி அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    பி.வி.சிந்து தகுதியான பதக்கத்தை வென்றுள்ளது மட்டுமல்லாமல் ஒலிம்பிக்கில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி அணிகளின் வரலாற்று முயற்சிகளையும் பார்த்தோம். இது பாராட்டத்தக்கதாகும்.

    வெற்றி மகிழ்ச்சியில் இந்திய வீராங்கனைகள்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 21-வது இடத்தையும், சஞ்சீவ் ராஜ்புட் 32-வது இடத்தையும் பிடித்து இறுதிச்சுற்றுக்கான வாய்ப்பை இழந்தனர்.
    துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் ஆண்களுக்கான 50மீ ரைபிள் 3 பொசிசன்ஸ் பிரிவு தகுதிச்சுற்று இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், சஞ்சீவ் ராஜ்புட் உள்பட 39 வீரர்கள் பங்கேற்றனர். இதில் சிறப்பாக செயல்படும் 8 வீரர்கள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவார்கள்.

    இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் நீலிங் (Kneeling) முறை சுடுதலில் 397 புள்ளிகளும், ப்ரோன் (Prone) முறை சுடுதலில் 391 புள்ளிகளும், ஸ்டேண்டிங் (Standing) முறை சுடுதலில் 379 புள்ளிகளும் என மொத்தம் 1167-63x புள்ளிகள் பெற்று 21-வது இடத்தை பிடித்து இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்தார்.

    சஞ்சீவ் ராஜ்புட்

    மற்றொரு இந்திய வீரர் சஞ்ஜீவ் ராஜ்புட்  நீலிங் (Kneeling) முறை சுடுதலில் 387 புள்ளிகளும், ப்ரோன் (Prone) முறை சுடுதலில் 393 புள்ளிகளும், ஸ்டேண்டிங் (Standing) முறை சுடுதலில் 377 புள்ளிகளும் என மொத்தம் 1157-55x புள்ளிகள் பெற்று 32-வது இடத்தை பிடித்து இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்தார்.
    எந்தவித நெருக்கடியிலும் எனது திறமையை வெளிப்படுத்த முடியும் என சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் சாய் கிஷோர் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 24 ரன் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தியது.

    முதலில் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன் எடுத்தது. கேப்டன் கவுசிக் காந்தி 31 பந்தில் 45 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), ஜெகதீசன் 27 பந்தில் 40 ரன்னும் (3 பவுண்டரி ) எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய திண்டுக்கல் அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்னே எடுக்க முடிந்தது. கேப்டன் ஹரி நிஷாந்த் அதிகபட்சமாக 39 ரன் எடுத்தார்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றிக்கு சாய்கிஷோரின் பந்துவீச்சு முக்கிய காரணமாக இருந்தது. இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்கு வலைப்பயிற்சி பவுலராக சென்று நாடு திரும்பிய அவர் தனது முதல் ஆட்டத்தில் 30 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி முத்திரை பதித்தார். இது தொடர்பாக சாய் கிஷோர் கூறியதாவது:-

    எனது பந்துவீச்சு சிறப்பாக இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இன்னும் இதை விட சிறப்பாக பந்து வீச வேண்டும் என்று தோன்றுகிறது. எந்தவித நெருக்கடியிலும் எனது திறமையை வெளிப்படுத்த முடியும். இந்த ஆடுகளம் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. அதை நான் சரியாக பயன்படுத்திக் கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பெற்ற 2-வது வெற்றியாகும். அந்த அணி 5 புள்ளியுடன் 3-வது இடத்தில் உள்ளது. திண்டுக்கல் 2-வது தோல்வியை தழுவியது. அந்த அணி 6 புள்ளியுடன் 2-வது இடத்தில் இருக்கிறது.

    நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்டன்சை வீழ்த்தி 4-வதுவெற்றியை (8 புள்ளிகள்) பெற்றது.

    15-வது நாளான இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் -மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    திருப்பூர் 2 வெற்றி, 2 தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 5 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 3-வது வெற்றி ஆர்வத்தில் இருக்கிறது.

    முன்னாள் சாம்பியனான மதுரை ஒரு வெற்றி, 2 தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 3 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. 2-வது வெற்றிக்காக அந்த அணிகாத்திருக்கிறது.
    டோக்கியோ ஒலிம்பிக்கில் வெனிசுலா வீராங்கனை யுலிமார் ரோஜாஸ் 15.67 (+0.7) மீட்டர் தூரம் தாண்டி உலக சாதனையுடன் தங்கம் வென்றார்.
    டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான லாங்க் ஜம்ப் போட்டி நேற்று நடைபெற்றது. இறுதிச் சுற்றில் 12 வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு வீராங்கனைகளுக்கும்  6 வாய்ப்புகள் வழங்கப்படும். இதில் எது அவர்களுடைய சிறப்பான தாண்டுதலோ, அது போட்டி முடிவுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

    அதன்படி வெனிசுலாவின் யுலிமார் ரோஜாஸ் 6-வது வாய்ப்பில் 15.67 (+0.7) மீட்டர் தூரத்திற்கு தாண்டினார். மற்ற வீராங்கனைகள் இந்த தூரத்தை விட குறைவாகவே தாண்டியதால் யுலிமார் ரோஜாஸ் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.

    ரோஜாஸ்

    இவர் தாண்டியது உலக சாதனையாகும். அத்துடன் வெனிசுலாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை வாங்கிக் கொடுத்துள்ளார்.
    வட்டு எறியும் இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு 4-வது பதக்கத்தை கமல்பிரீத் கவூர் பெற்றுக்கொடுப்பாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
    டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை 3 பதக்கங்களை பெற்று உள்ளது. பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு வெள்ளி பதக்கம் பெற்றார். குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா அரை இறுதிக்கு நுழைந்ததன் மூலம் வெண்கல பதக்கத்தை உறுதி செய்தார். பேட்மிண்டனில் பி.வி.சிந்து வெண்கல பதக்கம் பெற்று கொடுத்து பெருமை சேர்த்தார்.

    இந்தியாவுக்கு 4-வது பதக்கத்தை தடகள வீராங்கனை கமல்பிரீத் கவூர் பெற்றுக்கொடுப்பாரா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    வட்டு எறியும் வீராங்கனையான அவர் தகுதி சுற்றில் சிறப்பாக செயல்பட்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அவர் பங்கேற்கும் இறுதிப்போட்டி இன்று மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.

    கமல்பிரீத் கவூர் தகுதிச் சுற்றில் 64 மீட்டர் தூரம் வட்டு எறிந்தார். இதேநிலையை அவர் இறுதிப்போட்டியில் செயல்படுத்தினால் பதக்க வாய்ப்பு கிடைக்கும்.

    மேலும் அவர் 66.59 மீட்டர் தூரம் எறிந்ததே சிறந்த நிலையாகும். இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. கமல்பிரீத் கவூர் தர வரிசையில் 32-வது இடத்தில் உள்ளார்.
    பெல்ஜியம் அணியுடனான அரையிறுதியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு பதக்கத்தை உறுதி செய்யுமா? என்பது ரசிகர்களின் உச்ச கட்ட எதிர்பார்ப்பாக இருக்கிறது.
    டோக்கியோ:

    மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஆண்கள் ஆக்கி அணி 49 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் அரைஇறுதிக்கு முன்னேறி சாதித்துள்ளது. நேற்று நடந்த கால்இறுதியில் 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

    ஒலிம்பிக்கில் 8 முறை சாம்பியனான இந்திய ஆக்கி அணி கடைசியாக 1980-ல் தங்கப்பதக்கம் பெற்றது. அதன் பிறகு 1984 ஒலிம்பிக்கில் 5-வது இடத்தைப் பிடித்ததே சிறந்த நிலையாக இருந்தது. 2008-ல் தகுதி பெற முடியாத நிலை ஏற்பட்டது.

    தற்போது டோக்கியோ ஒலிம்பிக்கில் தான் இந்திய ஆக்கி அணி சிறப்பான நிலையை எட்டி அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது.

    இந்திய அணி அரை இறுதியில் பெல்ஜியத்தை நாளை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு இந்தப்போட்டி தொடங்குகிறது.

    உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள பெல்ஜியத்தை வீழ்த்தி 3-ம் நிலையில் உள்ள இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா ? என்று அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்தை 3-2 என்ற கணக்கில் தோற்கடித்தது. ஆனால் 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 1-7 என்ற கோல் கணக்கில் மோசமாக தோற்றது.

    இதனால் வழக்கமான நிலை ஏற்படும் என்று கருதப்பட்டது. அதன் பிறகு இந்திய அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் எழுச்சி பெற்றது. தொடர்ச்சியாக ஸ்பெயின் (3-0), அர்ஜென்டினா (3-1), ஜப்பான் (5-3) அணிகளை வீழ்த்தியது.

    நாளைய அரையிறுதியிலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு பதக்கத்தை உறுதி செய்யுமா? என்பது ரசிகர்களின் உச்ச கட்ட எதிர்பார்ப்பாக இருக்கிறது.
    100மீ ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற ஜமைக்கா வீராங்கனை ஜேக்சன், 200மீ ஓட்டத்திற்கான தகுதிச்சுற்றில் பின்தங்கி அரையிறுதி வாய்ப்பை இழந்தார்.
    ஒலிம்பிக் போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்படுவது 100மீ, 200மீ ஓட்டப் பதந்தயங்கள். இதில் யார் வெற்றி பெறுகிறார்களோ? அவர்கள் உலகின் அதிவேக வீரர்/வீராங்கனைகள் என அழைக்கப்படுவார்கள்.

    ஜமைக்கா, அமெரிக்க வீரர்கள்/வீராங்கனைகள் இதில் ஆதிக்கம் செலுத்துவார்கள். பெண்களுக்கான 100மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஜமைக்கா வீராங்கனைகள் மூன்று பதக்கங்களையும் வென்றனர். ஷெரிக்கா ஜேக்சன் வெண்கலப் பதக்கம் வென்றார். 

    இன்று பெண்களுக்கான 200மீ ஓட்டப் பந்தயத்தின் தகுதிச்சுற்று நடைபெற்றது. ஷெரிக்கா ஜேக்சன் ஹீட்ஸ் 5-ல் ஓடினார். அவருடன் மேலும் ஐந்து வீராங்கனைகள் பங்கேற்றனர். பந்தயத்தில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள்.

    இதில் ஷெரிக்கா ஜேக்சன், இத்தாலியின்  டலியா கட்டாரியா ஆகியோர் பந்தய தூரத்தை 23.26 வினாடிகளில் கடந்தனர். மில்லி செகண்ட் அடிப்படையில் டலியா கட்டாரியா (.251) 3-வது இடத்தை பிடித்தார். ஜேக்சன் (.255) .004 மில்லி செகண்ட் வித்தியாசத்தில் பின்தங்கி அரையிறுதி வாய்ப்பை இழந்தார்.
    ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் 2 பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய வரலாற்றை அவர் படைத்தார்.
    இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து. 26 வயதான இவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார்.

    டோக்கியோ ஒலிம்பிக்கில் இதன் மூலம் இந்தியாவுக்கு 2-வது பதக்கம் கிடைத்தது. பளு தூக்கம் வீராங்கனை மிராபாய் சானு முதலில் வெள்ளி பதக்கம் வென்றார். அதைத் தொடர்ந்து குத்துச் சண்டை வீராங்கனை லவ்லினா வெண்கல பதக்கத்தை உறுதி செய்துள்ளார். அரை இறுதிக்கு நுழைந்ததன் மூலம் பதக்கம் உறுதியானது.

    தற்போது பி.வி.சிந்து வெண்கல பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். அவர் 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்றார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் 2 பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய வரலாற்றை அவர் படைத் தார்.

    வீரர்களை பொறுத்தவரை சுஷில்குமார் (மல்யுத் தம்) மட்டும் 2 பதக்கம் கைப்பற்றி உள்ளார். இவர் 2008 ஒலிம்பிக்கில் வெண்கலமும், 2012 ஒலிம்பிக்கில் வெள்ளியும் பெற்றார்.

    புதிய சாதனை நிகழ்த்திய உலக சாம்பியனான பி.வி. சிந்து கூறியதாவது:-

    கடந்த ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் பெற்று தற்போது அதைவிட சிறந்த நிலையை பெற முடியாமல் போனது சிறிய வருத்தத்தை அளிக்கிறது. ஆனாலும் ஏமாற்றம் இல்லை. டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கத்தை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இந்த பதக்கம் மூலம் பேட்மிண்டனில் புதிய தலைமுறை வீரர்-வீராங்கனைகளை உருவாக்க முடியும் என்று நம்புகிறேன். நிறையபேர் கடினமாக உழைப்பார்கள்.

    நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் நன்றாக செயல்பட்டு இருக்கிறேன் என்று நினைக்கிறேன். நாட்டுக்காக ஒரு பதக்கம் பெறுவது நிச்சயமாக பெருமை அளிப்பதாகும்.

    2024-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டி நிச்சயமாக ஒரு சவாலாக இருக்கும். எனது ஆட்டத்திறன் தொடர்ந்து மேம்பட்டுள்ளது. ஒவ்வொருமுறை நான் வெற்றி பெறும்போது முன்னேற்றம் அடைந்ததாக கருதுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பெண்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்திய வீராங்கனை குர்ஜித் கவுர் 22-வது நிமிடத்தில் கோல் அடிக்க ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது.
    டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான ஹாக்கி போட்டியில் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. 2-வது காலிறுதி ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.

    முதல் கால் பகுதி (15 நிமிடம்) ஆட்டத்தில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது கால் பகுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகள் அபாரமாக விளையாடினார்கள். ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி குர்ஜித் கவுர் கோல் அடித்தார். இதனால் இந்தியா 1-0 என முன்னிலைப் பெற்றது.

    3-வது மற்றும் 4-வது கால் பகுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் கோல் அடிக்க முயற்சி செய்தனர். பல வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைத்தன. ஆனால் ஆஸ்திரேலிய வீராங்கனைகளால் அதை கோலாக மாற்ற முடியவில்லை.

    பந்தை கடத்திச் செல்லும் இந்திய வீராங்கனை

    இதனால் கடைசி இரண்டு கால் பகுதி ஆட்டங்களில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. ஆகவே இந்தியா 1-0 என ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
    டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் சீனா 24 தங்கப்பதக்கத்துடன் முதல் இடத்தில் நீடிக்கும் நிலையில் அமெரிக்கா 2-வது இடத்தில் உள்ளது.
    டோக்கியோ ஒலிம்பிக்கில் சீனா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலிய நாடுகள் தங்கப்பதக்கங்களை குவித்து வருகின்றன. சீனா 24 தங்கம், 14, வெள்ளி, 13 வெண்கலப் பதக்கங்களுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. அமெரிக்கா 20 தங்கம், 24 வெள்ளி, 16 வெண்கலப் பதக்கங்களுடன் 2-வது இடத்தில் உள்ளது.

    போட்டியை நடத்தும் ஜப்பான் 17 தங்கம், 5 வெள்ளி, 9 வெண்கலப் பதக்கத்துடன் 3-வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 14 தங்கம், 3 வெள்ளி, 14 வெண்கலப் பதக்கத்துடன் 4-வது இடத்தில் உள்ளது.

    ரஷ்யா 12 தங்கத்துடன் 5-வது இடத்திலும், கிரேட் பிரிட்டன் 10 தங்கத்துடன் 6-வது இடத்திலும் உள்ளது. இந்தியா தலா ஒரு வெள்ளி, வெண்கலப் பதக்கங்களுடன் 61-வது இடத்தை பிடித்துள்ளது.
    ×