என் மலர்
விளையாட்டு
ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் இரண்டு முறை பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையுடன் டோக்கியோவில் இருந்து இந்தியா திரும்பிய பி.வி. சிந்துவுக்கு உற்சாக வரவேற்வு அளிக்கப்பட்டது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். 2016-ல் பிரேசில் நாட்டின் ரியோவில் நடந்த ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்ற வீராங்கனை என்ற சாதனையைப் படைத்த பி.வி. சிந்து, இன்று இந்தியா திரும்பினார். டெல்லி விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் உலகின் 9-ஆம் நிலை வீராங்கனையான சீனாவின் ஹி பிங் ஜியாவை 21-13, 21-15 என்ற செட்களில் வீழ்த்தினாா். முன்னதாக மல்யுத்த வீரா் சுஷீல் குமாா் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெள்ளியும், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலமும் வென்றார்.
இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் குரூப் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்திருந்த நிலையில் 19.99 மீட்டர் தூரத்தை எறிந்து 13-வது இடம் பிடித்து ஏமாற்றம் அடைந்தார்.
ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியின் தகுதிச்சுற்று இன்று நடைபெற்றது. முதலில் குரூப் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்தவர்களுக்கான தகுதி போட்டி நடைபெற்றது. இதில் 16 வீரர்கள் கலந்து கொண்டனர்.
இரண்டு குரூப்பிலும் சேர்த்து முதல் 12 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அல்லது 21.20 மீட்டருக்கு அதிகமான தூரத்திற்கு எறியும் வீரர்கள் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறுவார்கள்.
ஒவ்வொரு வீரருக்கும் தலா மூன்று வாய்ப்புகள் கொடுக்கப்படும். இந்திய வீரர் தஜிந்தர் சிங் டோர் முதல் வாய்ப்பில் 19.99 மீட்டர் தூரம் எறிந்தார். 2-வது மற்றும் 3-வது வாய்ப்புகள் பவுல் ஆனது. இதனால் 19.99 மீட்டர் அவரின் இலக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. அவர் எறிந்த தூரம் 13-வது இடத்தைப் பிடித்தது. இதனால் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்தார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் அமெரிக்கா 22 தங்கத்துடன் 66 பதக்கங்கள் பெற்று 2-வது இடத்தில் உள்ள நிலையில், சீனா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் சீனா, அமெரிக்கா வீரர்கள்- வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இரு நாடுகளும் போட்டியை நடத்தும் ஜப்பானை பின்னுக்குத்தள்ளி முறையே முதல் இரண்டு இடங்களை வகிக்கின்றன.
இன்று மதியம் 2 மணி நிலவரப்படி சீனா 31 தங்கம், 19 வெள்ளி, 16 வெண்கலப் பதக்கம் பெற்று முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா 22 தங்கம், 27 வெள்ளி, 17 வெண்கலப் பதக்கம் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. இதுவரைக்கும் பதக்க எண்ணிக்கையில் அமெரிக்கா முன்னிலையில் இருந்து வந்தது. தற்போது இரு நாடுகளும் தலா 66 பதக்கங்கள் வென்றுள்ளன.

ஜப்பான் 18 தங்கம், 6 வெள்ளி, 10 வெண்கலத்துடன் 3-வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா (14, 4, 15) 4-வது இடத்திலும், கிரேட் பிரிட்டன் (13, 13, 13) 5-வது இடத்திலும் உள்ளன. ரஷ்யா 12, 21, 17 என் அடிப்படையில் 6-வது இடத்தை பிடித்துள்ளது.
ஆண்களுக்கான 400மீ தடைதாண்டுதல் ஓட்டம் போட்டியில் நார்வே வீரர் 45.94 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 400மீ தடைதாண்டுதல் ஓட்டத்தின் இறுதிச்சுற்று இன்று நடைபெற்றது. இதில் 8 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் நார்வே வீரர் கார்ஸ்டன் வார்ஹோல்ம் பந்தய தூரத்தை 45.94 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.
அத்துடன் உலக சாதனையையும் படைத்தார். இதற்கு முன் கடந்த மாதம் இவர்தான் 46.70 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து உலக சாதனைப் படைத்திருந்தார். தற்போது அவரது சாதனையை அவரே முறியடித்துள்ளார்.
இந்திய அணி கடைசியாக இங்கிலாந்தில் 2007-ம் ஆண்டு 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
நாட்டிங்காம்:
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் உள்ள டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நாளை (4-ந்தேதி) தொடங்குகிறது.

இந்த போட்டிக்கான 11 வீரர்களை தேர்வு செய்வதில் கேப்டன் விராட் கோலிக்கு சவால் காத்திருக்கிறது. சுப்மன்கில் காயம் அடைந்ததால் அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் ரோகித்சர்மாவுடன் தொடக்க வீரராக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பயிற்சியின் போது அகர்வால் ஹெல்மட்டில் பந்து தாக்கியது. இதனால் அவர் ஆடமாட்டார். எனவே கே.எல்.ராகுல் தொடக்க வீரராக விளையாடலாம்.
மிடில் ஆர்டர் வரிசையில் புஜாரா, கோலி, ரகானே, ரிஷப்பண்ட் உள்ளனர். புஜாராவின் ஆட்டம் சமீப காலமாக மோசமாக உள்ளது. இதேபோல ரகானே உடல் தகுதியுடன் இருக்கிறாரா என்பது சந்தேகம். அவர் விளையாடாவிட்டால் விகாரிக்கு வாய்ப்பு கிடைக்கும்.
சுழற்பந்து வீரர்களில் அஸ்வின், ஜடேஜா ஆகியோரும், வேகப்பந்து வீரர்களில் பும்ரா, முகமது ஷமி, இசாந்த் சர்மா ஆகியோரும் இடம் பெறுவார்கள். முகமது சிரா ஜுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினமே.
இந்திய அணி கடைசியாக இங்கிலாந்தில் 2007-ம் ஆண்டு 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதன் பிறகு ஆடிய 3 தொடரிலும் தோற்றது. கடைசியாக 2018-ல் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்தது. 14 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு தொடரை வெல்லுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி பிப்ரவரி- மார்ச் மாதம் சொந்த மண்ணில் இங்கிலாந்தை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி இருந்தது.
ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி அதன் சொந்த மண்ணில் ஆடுவது கூடுதல் பலமே. ஆனால் அந்த அணி சமீபத்தில் நியூசிலாந்திடம் தொடரை இழந்து இருந்தது. மேலும் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்சும் ஆடவில்லை.
இரு அணிகளும் நாளை மோதுவது 127-வது டெஸ்ட் ஆகும். இதுவரை நடந்த 126 போட்டியில் இந்தியா29-ல், இங்கிலாந்து 48-ல் வெற்றி பெற்றுள்ளன. 49 டெஸ்ட் ‘டிரா’ ஆனது.
இந்த டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி-டென் டெலிவிஷன் சேனல்களில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் உள்ள டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நாளை (4-ந்தேதி) தொடங்குகிறது.
இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் தோற்றது. இதனால் இங்கிலாந்துக்கு எதிராக திறமையுடன் ஆட வேண்டிய நிலை உள்ளது.

ஆனால் பயிற்சியின் போது அகர்வால் ஹெல்மட்டில் பந்து தாக்கியது. இதனால் அவர் ஆடமாட்டார். எனவே கே.எல்.ராகுல் தொடக்க வீரராக விளையாடலாம்.
மிடில் ஆர்டர் வரிசையில் புஜாரா, கோலி, ரகானே, ரிஷப்பண்ட் உள்ளனர். புஜாராவின் ஆட்டம் சமீப காலமாக மோசமாக உள்ளது. இதேபோல ரகானே உடல் தகுதியுடன் இருக்கிறாரா என்பது சந்தேகம். அவர் விளையாடாவிட்டால் விகாரிக்கு வாய்ப்பு கிடைக்கும்.
சுழற்பந்து வீரர்களில் அஸ்வின், ஜடேஜா ஆகியோரும், வேகப்பந்து வீரர்களில் பும்ரா, முகமது ஷமி, இசாந்த் சர்மா ஆகியோரும் இடம் பெறுவார்கள். முகமது சிரா ஜுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினமே.
இந்திய அணி கடைசியாக இங்கிலாந்தில் 2007-ம் ஆண்டு 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதன் பிறகு ஆடிய 3 தொடரிலும் தோற்றது. கடைசியாக 2018-ல் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்தது. 14 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு தொடரை வெல்லுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி பிப்ரவரி- மார்ச் மாதம் சொந்த மண்ணில் இங்கிலாந்தை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி இருந்தது.
ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி அதன் சொந்த மண்ணில் ஆடுவது கூடுதல் பலமே. ஆனால் அந்த அணி சமீபத்தில் நியூசிலாந்திடம் தொடரை இழந்து இருந்தது. மேலும் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்சும் ஆடவில்லை.
இரு அணிகளும் நாளை மோதுவது 127-வது டெஸ்ட் ஆகும். இதுவரை நடந்த 126 போட்டியில் இந்தியா29-ல், இங்கிலாந்து 48-ல் வெற்றி பெற்றுள்ளன. 49 டெஸ்ட் ‘டிரா’ ஆனது.
இந்த டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி-டென் டெலிவிஷன் சேனல்களில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
பெல்ஜியத்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியின் முதல் கால் பகுதியில் அடுத்தடுத்த நிமிடங்களில் இந்திய வீரர்கள் கோல் அடித்து அசத்தினர்.
டோக்கியோ:
டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-பெல்ஜியம் அணிகள் இன்று மோதின.
ஹர்மன்பிரீத் சிங் 7வது நிமிடத்திலும், மந்தீப் சிங் 8வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் முதல் கால் பாதியில் இந்தியா 2-1 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது கால் பாதியில் பெல்ஜியம் அணி ஒரு கோல் அடித்தது. இதனால் 2-2 என சமனிலை வகித்தது. மூன்றாவது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
நான்காவது கால் பாதியில் பெல்ஜியம் அணி 3 கோல்கள் அடித்தது.
இறுதியில், பெல்ஜியம் அணி 5-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
டோக்கியோ ஒலிம்பிக்கின் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் அன்னு ராணி 14வது இடத்தைப் பிடித்தார்.
டோக்கியோ:
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இன்று காலை பெண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது. இதில் 15 வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்தியா சார்பில் அன்னு ராணி கலந்து கொண்டார். அவர் தனது முதல் வாய்ப்பில் 50.35 மீ தூரம் எறிந்தார். இரண்டாவது வாய்ப்பில் 53.19 மீ தூரம் எறிந்தார். மூன்றாவது மற்றும் கடைசி வாய்ப்பில் 54.04 மீ தூரம் எறிந்தார். இறுதியில் 14வது இடம் பிடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் உள்ள டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.
லண்டன்:
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் ஆட்டத்திலிருந்து தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் விலகியுள்ளார்.
இந்திய அணியின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது பந்து அவரது ஹெல்மெட்டை தாக்கிய காரணத்தினால் முதல் போட்டியிலிருந்து விலகி உள்ளார்.
ஏற்கனவே தொடக்க வீரர் கில் இங்கிலாந்து தொடரிலிருந்து காயம் காரணமாக விலகி உள்ளார். தற்போது மயங்க் அகர்வாலுக்கு ஏற்பட்டுள்ள காயம் அணியில் மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் அணிக்கு எதிராக ஆடிய மதுரை அணியின் ஜெகதீசன் கவுசிக், சதுர்வேத் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்தது.
சென்னை:
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 20வது ஆட்டம் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் மதுரை பாந்தர்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த மதுரை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது.
சுகேந்திரன் 20 ரன்னிலும், பிரவீன் குமார் 35 ரன்னிலும், அனிருத் 33 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின், அதிரடியாக ஆடிய ஜெகதீசன் கவுசிக் 40 ரன்களும், சதுர்வேத் 41 ரன்களும் (நாட் அவுட்), அருண் கார்த்திக் 11 ரன்களும் (நாட் அவுட்) எடுத்தனர்.
திருப்பூர் தரப்பில் முகமது 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கியது. மதுரை பாந்தர்ஸ் அணியின் நேர்த்தியான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தது.
இறுதியில், திருப்பூர் அணி 103 ரன்களில் ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ராஜ்குமார் 42 ரன் எடுத்து அவுட்டானார். இதன்மூலம் மதுரை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மதுரை அணி சார்பில் சிலம்பரசன், கவுதம், ஆஷிக் ஸ்ரீனிவாஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
டிஎன்பிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
சென்னை:
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 20வது ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் மதுரை பாந்தர்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த மதுரை அணியின் பேட்ஸ்மேன்கள் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். துவக்க வீரர் சுகேந்திரன் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் பிரவீன் குமார்-அனிருத் சீதா ராம் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பிரவீன் குமார் 35 ரன்களும், அனிருத் 33 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இருவரும் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டை இழந்தனர். அப்போது அணியின் ஸ்கோர் 89 ரன்கள்.
அதன்பின்னர், அதிரடியாக ஆடிய ஜெகதீசன் கவுசிக் 40 ரன்களும், சதுர்வேத் 41 ரன்களும் (நாட் அவுட்), அருண் கார்த்திக் 11 ரன்களும் (நாட் அவுட்) எடுக்க, மதுரை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. திருப்பூர் தரப்பில் முகமது 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கியது.

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 20வது ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் மதுரை பாந்தர்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி மதுரை அணி முதலில் பேட்டிங் செய்கிறது. துவக்க வீரர்களாக பிரவீன் குமார், சுகேந்திரன் களமிறங்கினர்.
மதுரை அணி: பிரவீன் குமார் (விக்கெட் கீப்பர்), அருண் கார்த்திக், அனிருத் சீதா ராம், என்எஸ் சதுர்வேத் (கேப்டன்), ஜெகதீசன் கவுசிக், சுகேந்திரன், கே.தீபன் லிங்கேஷ், ஆஷிக் ஸ்ரீனிவாஸ், ஆர்.சிலம்பரசன், வி.கவுதம், பி.ராக்கி.
ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி: எஸ்.தினேஷ், எஸ்.அரவிந்த், துஷார் ரஹேஜா (விக்கெட் கீப்பர்), மான் பஃப்னா, பி.பிரான்சிஸ் ரோகின்ஸ், எம்.முகமது (கேப்டன்), ஆர்.ராஜ்குமார், அஃபான் காதர், அல்லிராஜ் கருப்புசாமி, அஸ்வின் கிறிஸ்ட், எஸ்.மோகன் பிரசாத்.

பெண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை கமல்ப்ரீத் கவுர் 6-வது இடத்தை பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான வட்டு எறிதல் போட்டியின் இறுதிச்சுற்று இன்று நடைபெற்றது. இதில் 12 வீராங்கனைகள் பங்கேற்றனர். ஒவ்வொரு வீராங்கனைகளுக்கும் 8 வாய்ப்புகள் வழங்கப்படும். இதில் எந்த வாய்ப்பில் அதிக தூரம் எறிகிறார்களோ, அந்த வாய்ப்பு அவருக்கான சிறந்த எறிதலாக எடுத்துக் கொள்ளப்படும்.
முதல் மூன்று வாய்ப்புகள் முடிவில் முதல் 8 இடங்களை பிடித்த வீராங்கனைகள் மேலும் மூன்று வாய்ப்புகள் எறிய அனுமதிக்கப்பட்டனர். அதில் இந்திய வீராங்கனை கமல்ப்ரீத் கவுர் 63.70 மீட்டர் தூரம் எறிந்து 6-வது இடத்தை பிடித்தார். ஜெர்மனி, சீனா, பிரேசில், இத்தாலி வீராங்கனைகள் கடைசி நான்கு இடங்களை பிடித்து வெளியேறினர்.
முதல் மூன்று வாய்ப்புகளில் அமெரிக்க வீராங்கனை வலாரி அல்மான் அதிகபட்சமாக 68.98 மீட்டர் தூரத்திற்கு வட்டை எறிந்து முதல் இடம் பிடித்தார். கியூபா வீராங்கனை ஒய்மே பெரேஸ் 65.72 மீட்டர் தூரம் வீசி 2-வது இடம் பிடித்தார். ஜெர்மனி வீராங்கனை கிறிஸ்டின் புடேன்ஸ் 65.34 மீட்டர் தூரம் எறிந்து 3-வது இடம் பிடித்தார்.
போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மழை பெய்ததால், 3-வது சுற்றில் இருந்து வீராங்கனைகள் வட்டை எறிவதற்கு சிரமப்பட்டனர். அவர்கள் கையில் இருந்து வட்டு வழுக்கிச் சென்றது. கடைசி மூன்று வாய்ப்புகளிலும் 8 வீராங்கனைகளும் சிறப்பாக செயல்பட திணறினர். ஆனால் ஜெர்மனி வீராங்கனை புடேன்ஸ் மட்டும் 5-வது வாய்ப்பில் 66.86 மீட்டர் தூரத்திற்கு வட்டை எறிந்தார்.
ஆறு வாய்ப்புகள் முடிவில், அமெரிக்க வீராங்கனை வலாரி அல்மான் தனது முதல் வாய்ப்பில் வீசிய 68.98 மீட்டர் தூரம் அதிகபட்ச தூரமாக இருந்தது. அதனால் அமெரிக்கா வீராங்கனை முதல் இடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். ஜெர்மனி வீராங்கனை புடேன்ஸ் 5-வது வாய்ப்பில் 66.86 மீட்டர் தூரம் வீசியது 2-வது அதிகபட்ச தூரமாக இருந்தது. இதனால் வெள்ளிப் பதக்கம் வென்றார். கியூபா வீராங்கனை முதல் வாய்ப்பில் 65.72 மீட்டர் தூரம் வீசியது 3-வது அதிகபட்சமாக இருந்தது. இதனால் வெண்கலப்பதக்கம் வென்றார்.
இந்திய வீராங்கனை 63.70 மீட்டர் தூரம் வீசி 6-வது இடத்திற்கு பின்தங்கினார்.