என் மலர்
செய்திகள்

மயங்க் அகர்வால்
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து மயங்க் அகர்வால் விலகல்
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் உள்ள டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.
லண்டன்:
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் ஆட்டத்திலிருந்து தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் விலகியுள்ளார்.
இந்திய அணியின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது பந்து அவரது ஹெல்மெட்டை தாக்கிய காரணத்தினால் முதல் போட்டியிலிருந்து விலகி உள்ளார்.
ஏற்கனவே தொடக்க வீரர் கில் இங்கிலாந்து தொடரிலிருந்து காயம் காரணமாக விலகி உள்ளார். தற்போது மயங்க் அகர்வாலுக்கு ஏற்பட்டுள்ள காயம் அணியில் மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






