search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய ஆக்கி அணி வீரர்கள்
    X
    இந்திய ஆக்கி அணி வீரர்கள்

    பெல்ஜியத்துடன் நாளை மோதல்: இந்திய ஆக்கி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா?

    பெல்ஜியம் அணியுடனான அரையிறுதியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு பதக்கத்தை உறுதி செய்யுமா? என்பது ரசிகர்களின் உச்ச கட்ட எதிர்பார்ப்பாக இருக்கிறது.
    டோக்கியோ:

    மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஆண்கள் ஆக்கி அணி 49 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் அரைஇறுதிக்கு முன்னேறி சாதித்துள்ளது. நேற்று நடந்த கால்இறுதியில் 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

    ஒலிம்பிக்கில் 8 முறை சாம்பியனான இந்திய ஆக்கி அணி கடைசியாக 1980-ல் தங்கப்பதக்கம் பெற்றது. அதன் பிறகு 1984 ஒலிம்பிக்கில் 5-வது இடத்தைப் பிடித்ததே சிறந்த நிலையாக இருந்தது. 2008-ல் தகுதி பெற முடியாத நிலை ஏற்பட்டது.

    தற்போது டோக்கியோ ஒலிம்பிக்கில் தான் இந்திய ஆக்கி அணி சிறப்பான நிலையை எட்டி அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது.

    இந்திய அணி அரை இறுதியில் பெல்ஜியத்தை நாளை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு இந்தப்போட்டி தொடங்குகிறது.

    உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள பெல்ஜியத்தை வீழ்த்தி 3-ம் நிலையில் உள்ள இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா ? என்று அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்தை 3-2 என்ற கணக்கில் தோற்கடித்தது. ஆனால் 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 1-7 என்ற கோல் கணக்கில் மோசமாக தோற்றது.

    இதனால் வழக்கமான நிலை ஏற்படும் என்று கருதப்பட்டது. அதன் பிறகு இந்திய அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் எழுச்சி பெற்றது. தொடர்ச்சியாக ஸ்பெயின் (3-0), அர்ஜென்டினா (3-1), ஜப்பான் (5-3) அணிகளை வீழ்த்தியது.

    நாளைய அரையிறுதியிலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு பதக்கத்தை உறுதி செய்யுமா? என்பது ரசிகர்களின் உச்ச கட்ட எதிர்பார்ப்பாக இருக்கிறது.
    Next Story
    ×