என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • அதிகாரிகளை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வரவழைத்து வெள்ளநீர் வடிவதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்து கொடுத்தார்.
    • உதவி பொறியாளர் சத்திய நாராயணன் மற்றும் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.

    புதுச்சேரி:

    புயல்மழை காரணமாக வில்லியனூர் பாண்டியன் நகர், ஓம்சக்தி நகர், மூர்த்தி நகர், பட்டானிக்களம் உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

    இதனை அறிந்த எதிர்க்கட்சி தலைவருமான. சிவா நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வரவழைத்து வெள்ளநீர் வடிவதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்து கொடுத்தார்.

    ஆய்வின்போது வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், செயற்பொறி யாளர் திருநாவுக்கரசு, உதவி பொறியாளர் சத்திய நாராயணன் மற்றும் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
    • கார்த்திகை மாதங்களில் வரும் திங்கட்கிழமைகளில் (சோமவாரம்) சிவனுக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    சிவன் கோவில்களில் கார்த்திகை சோமவாரத்தின் போது சிவனுக்கு சங்காபிஷேகம் செய்தால் நற்பலன்கள் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    அதன்படி கார்த்திகை மாதங்களில் வரும் திங்கட்கிழமைகளில் (சோமவாரம்) சிவனுக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.

    இன்று கார்த்திகை 3-வது சோமவாரத்தை முன்னிட்டு பழமையான பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் கோவிலில் 1,008 சங்குகள் வைத்து சங்காபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை யொட்டி காலை 6 மணிக்கு, பால விநாயகர், வேதாம்பிகை, முருகர், சண்டிகேஸ்வ ரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து காலை 9.30 மணிக்கு யாக சாலை பூஜையும், காலை 10.30 மணிக்கு மூலநாதர் சுவாமிக்கு 1,008 சங்குகளால் அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனையும் நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிரவாக அதிகாரி பாலமுருகன், அர்ச்சகர்கள் சங்கர், பாபு ஆகியோர் செய்து இருந்தனர்.

    • காங்கிரஸ் தொண்டர்களுக்கும், ப.கண்ணன் மகன் விக்னேஷ் கண்ணனுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
    • அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஜோஸ்வா ஜெரார்டு, இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு நடராஜன் ஆகியோருக்கும் நன்றி.

    புதுச்சேரி, டிச.4-

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் பி.கே.தேவதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    புதுவை பிரதேச இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடந்த முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் புகழஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்களுக்கும், ப.கண்ணன் மகன் விக்னேஷ் கண்ணனுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    முன்னாள் முதல்-அமைச்சர் டி.ராமச்சந்தி ரனின் புகழஞ்சலி அறிக்கைக்கும் நன்றி தெரிவிக்கிறேன். விழாவில் கலந்துகொண்டு சிற்ப்பித்த பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் வைத்தியநாதன், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஜோஸ்வா ஜெரார்டு, இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு நடராஜன் ஆகியோருக்கும் நன்றி.

    விழா சிறப்பாக நடத்தி வெற்றி பெற ஒத்துழைப்பு அளித்த வக்கீல்கள் பிரிவு தலைவர் மருதுபாண்டியன், பொதுச் செயலாளர் திருமுருகன், இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகமது இர்ஷாத், வட்டார த லைவர் ஆறுமுகம், பிரதீஷ், தொகுத்து வழங்கிய புலவர் கோவிந்தராஜ், தொழிலதிபர் பரந்தாமன் ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

    • முன்னாள் எம்.பி. ராமதாஸ் கருத்து
    • நிதி பற்றிய 2 விதிமுறைகள் புதுவை பிரதேச மக்களுக்கு மீண்டும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மக்கள் முன்னேற்றக்கழக நிறுவனரும், முன்னாள் எம்.பி.யுமான பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 16-வது நிதிக் குழுவின் பணிகள் பற்றிய விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் நிதி பற்றிய 2 விதிமுறைகள் புதுவை பிரதேச மக்களுக்கு மீண்டும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த விதிகளால் புதுவைக்கு தேவையான நிதியை பெற முடியாது.

    புதுவை மாநிலமாக இல்லாவிட்டாலும் 16-வது நிதிக்குழுவில் சேர்க்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரதமர், நிதித்துறை மந்திரியை சந்தித்து இதை வலியுறுத்தியிருந்தால் 16-வது நிதிக்குழுவில் புதுவை சேர்க்கப்பட்டிருக்கும்.

    இதை செய்ய தவறியதால் புதுவை மாநிலமாகும் வரை நிதிக்குழுவின் வரை யறைக்குள் செல்ல முடியாது. இதனால் மத்திய அரசின் வரி வருவாயில் புதுவைக்கு பங்கு கிடைக்காது.

    அரசியல் சட்ட விதி எண் 275-ன் கீழ் வழங்கப்படும் மானிய உதவி வழங்கப்படாது. உள்ளாட்சி அமைப்பு களுக்கான நிதி, கடன் நிவாரணம், இயற்கை சீற்ற நிதி, புனரமைப்பு மானியங்கள், கல்வி மானியம் மாநில சிறப்பு தேவைகளுக்கான நிதி, திட்ட உதவி எதுவும் கிடைக்காது.

    இது புதுவைக்கு பெரிய நிதி இழப்பை ஏற்படுத்தும். புதுவை பொருளாதார வளர்ச்சியையும் வேலை வாய்ப்பையும் இழந்து நிற்கப் போகிறது. இதற்கு முதல்-அமைச்சரும், கவர்னரும்தான் பொறுப்பேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • புதுவை பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில் நுட்பப் கல்லூரியின் டீன் டாக்டர் சிவசத்யா தொடக்க உரையாற்றினார்.
    • புதுச்சேரி மாநில மையத்தின் கவுரவ செயலாளர் டாக்டர் கணேசன் என்ற சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

     புதுச்சேரி:

    புதுவை கலிதீர் தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட்ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி. கல்லூரி), தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ் (இந்தியா), புதுச்சேரி மாநில மையத்துடன் இணைந்து, கணினி அறிவியல் பொறியியல் பிரிவு வாரியம் கீழ் "இயந்திர கற்றல் கருத்துக்கள் மற்றும்பயன்பாடுகள்", என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடத்தியது.

    பயிலரங்கில் தலைமை விருந்தினராக புதுவை பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில் நுட்பப் கல்லூரியின் டீன் டாக்டர் சிவசத்யா தொடக்க உரையாற்றினார். நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் மற்றும்பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். எம்.ஐ.டி. கல்லூரி முதல்வர் மலர்க்கண், தலைமையுரை ஆற்றினார்.

    புதுச்சேரி மாநில மையத்தின் தலைவர் திருஞானம் வரவேற்பு ரையாற்றினார்.

    எம்.ஐ.டி. கல்லூரி இயந்திரவியல் துறை தலைவரும் புதுச்சேரி மாநில மையத்தின் கவுன்சில் உறுப்பினருமான ராஜாராம் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக தகவல் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் சிவக்குமார் பயிலரங்கம் பற்றிய அறிமுக உரையாற்றினார்.

    முடிவில் புதுச்சேரி மாநில மையத்தின் கவுரவ செயலாளர் டாக்டர் கணேசன் என்ற சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    • அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவு
    • சேதமடைந்த மின்கம்பி, மின்மாற்றிகளை உடனே சீரமைத்து மின் இணைப்பை உடனுக்குடன் வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    வங்கக்கடலில் அந்தமான் அருகில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளது.

    இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக உருவெடுக்கும். இந்த புயலுக்கு மியான்மர் நாடு மிக்ஜம் என்று பெயர் வைத்துள்ளது.

    இந்த புயல் தெற்கு ஆந்திர கடற்கரையில் நெல்லூருக்கும் –மசூலிப்பட்டினத்திற்கும் இடையில் கரையை கடக்கும் போது சூறாவளி காற்றுடன் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

    கரையை கடக்கும் முன் தமிழகம் மற்றும் புதுவையில் கடுமையான மழை பெய்யும் என்றும் எச்சரிச்கை விடப்பட்டுள்ளது. புயல், மழை எச்சரிக்கை காரணமாக புதுவையில் அரசு, பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) விடுமுறை அறிவித்துள்ளது.

    புயலை எதிர்கொள்ள அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கனமழையால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க 211 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. 2 தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் புதுவை வந்துள்ளனர். அதில் ஒரு குழு காரைக்காலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    மற்றொரு குழுவினர் புதுவை கோரிமேட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று முதல் 3 நாள் பணியில் ஈடுபட உள்ளனர். அரசின் அனைத்து துறைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    பணியில் ஈடுபடக் கூடிய அரசுத் துறை ஊழியர்களுக்கு மறு அறிவிப்பு வரும்வரை விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    12 அரசு துறை கட்டுப்பாட்டு அறைகளும் திறக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில், நேற்று இரவு முதல் புதுவையில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்தது. அதிக அளவில் காற்று வீசியது.இன்று அதிகாலை முதல் வானம் இருண்டு காணப்பட்டது. குளிர்ந்த காற்று வீசி வருகிறது. அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தது.

    புயலை எதிர்கொள்ள ஏற்கனவே தலைமை செயலர் தலைமையில் அனைத்து அரசு அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமையில் அரசு துறை அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முதல்- அமைச்சர் ரங்கசாமி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து பேசியதாவது:-

    மோட்டார் மூலம் வெளியேற்றம்

    தாழ்வான குடியிருப்பு பகுதிகள் சாலைகள் தேங்கும் மழை நீரை மோட்டார் மூலம் உடனுக்குடன் வெளியேற்ற வேண்டும். மழை நீர் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த மின்கம்பி, மின்மாற்றிகளை உடனே சீரமைத்து மின் இணைப்பை உடனுக்குடன் வழங்க வேண்டும்.

    சாலையில் முறிந்து விழும் மரங்களை உடனுக்குடன் அகற்ற வேண்டும். அவசரகால மையம், கட்டுப்பாட்டு அறைகள் 24 மணிநேரமும் இயங்க வேண்டும்.

    வீடுர், சாத்தனூர் அணை திறப்பால் சங்கராபரணி, தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட வேண்டும், கடலுக்குள் சென்றுள்ள மீனவர்கள் அனைவரும் கரைக்கு திரும்பியதை மீன்வளத்துறை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

    இதனிடையே, புதுவை துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காற்றோடு மழை பெய்யும் வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்பதை இந்த கூண்டு எடுத்துக் காட்டுகிறது.

    புதுவை தேங்காய் திட்டு மீன் பிடி துறைமுகத்தில் முதலியார்பேட்டை போலீசார் மைக் மூலம் கரையோர பகுதியில் கட்டுமரத்தில் மீன் பிடித்த மீனவர்களை கரைக்கு வருமாறு எச்சரிக்கை விடுத்தனர்.

    தி.மு.க., பல்வேறு அணி நிர்வாகிகள், மாநில, தொகுதி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு ராமநாதனின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் சபாநாயகர் மற்றும் முன்னாள் எம்.பியுமான ராதாக்கிருஷ்ணன், பாகூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஆகியோரின் தந்தையான முன்னாள்

    எம்.எல்.ஏ. ராமநாதன் மறைவையொட்டி, 4-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பாகூர் தொகுதியில் பல்வேறு கிராமங்களில் நடைபெற்றது.

    பாகூர் மாதாக்கோவில் சந்திப்பு அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். புதுவை சட்டமன்ற எதிர் கட்சி தலைவர் மற்றும் தி.மு.க. மாநில அமை ப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமையில், அவைத்தலைவர் எஸ்.பி., சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத் ஆகியோர் ராமநாதன் உருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

    மேலும் மாநில நிர்வாகிகள் பாஸ்கர், தவமுருகன், சிவபிரகாசம், தொகுதி செயலாளர் அரிக்கிருஷ்ணன், அவைத் தலைவர் மூர்த்தி, பொருளாளர் பாவாடை, பிரதிநிதி பிரகாசம், துணை செயலாளர் சத்தியா, ராம்குமார், முத்துகண்ணு, கோபாலக்கிருஷ்ணன், தி.மு.க., பல்வேறு அணி நிர்வாகிகள், மாநில, தொகுதி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு ராமநாதனின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

    தொடர்ந்து, பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், தென்னை மரக்கன்றுகள், அன்னதானம் வழங்கப் பட்டது. இந்நிகழ்ச்சியில், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., ஆனந்தராமன், காங்., நிர்வாகிகள் மணவாளன், கோபு, கோவிந்தன், திராவிட கழகம் நிர்வாகிகள் தாமோதரன், சேகர், இந்திய கம்யூ., தேசிய குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மா.கம்யூ., சரவணன், தமிழக வாழ்வுரிமை கட்சி அருளொலி, மணப்பட்டு வக்கீல் சுப்ரமணி, மற்றும் பல்வேறு கட்சி பிரமுகர்கள், நிர்வாகிகள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை, பாகூர் பகுதியை சேர்ந்த தி.மு.க., மாநில பொறுப்பா ளர்கள்,நிர்வாகிகள் செய்திருந்தனர். 

    • சிறப்பு விருந்தினராக நாவலாசிரியர் இளவரசி சங்கர் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
    • ஆசிரியர் ஜீவா மற்றும் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கார்த்திக் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் செய்தி ருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு தின விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    விழாவிற்கு பள்ளி தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.

    தலைமை விருந்தினராக புதுச்சேரி சிறப்பு அதிரடி படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    சிறப்பு விருந்தினராக நாவலாசிரியர் இளவரசி சங்கர் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். டாக்டர் ரங்கநாயகி வளவன், விழாவிற்கு முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் மாணவர்களை வாழ்த்தி பேனார். பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், கவுண்டன் பாளையம் ஊர் தலைவர் ஜெகதீஸ்வரன், என்.ஆர் காங்கிரஸ் பிரமுகர் கோபி, பள்ளியின் துணை முதல்வர் வினோ லியா, பள்ளியின் ஆலோசகர் ரத்தின பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவர்க ளின் வண்ணம் வாரியாக அணிவகுப்பு, வண்ண பலூன்களை பறக்க விடுதல், யோகாசனம், நடனம், சிலம்பம், பென்சிங், கராத்தே, மல்லர் கம்பம் கயிரேற்றம், வில்வித்தை , போன்ற நிகழ்ச்சிகள் நடை பெற்றது.

    மேலும் பெற்றோர்களுக்கு லக்கி பால்போன்ற போட்டி கள் நடைபெற்றது. இது பார்வையாளர்களை அனை வரையும் கவர்ந்தது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி யின் பொறுப்பாளர் ஜஸ்டின், ஆசிரியர் ஜீவா மற்றும் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கார்த்திக் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் செய்தி ருந்தனர்.

    • விண்ணப்பங்கள் வரவேற்பு
    • நிரந்தர ஊனத்திற்கான மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட ஊனமுற்றோர் அடையாள அட்டை ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை தொழிலாளர் துறை ஆணையரும், அமைப்புசாரா நிரந்தர தொழிலாளர் நலச்சங்க உறுப்பினருமான மாணிக்கதீபன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் மூலம் அமைப்புசாரா தொழிலா ளர்களை முறையாக கண்டறியும் பொருட்டு இ-ஷரம் இணைய முகப்பில் நேரடியாகவோ அல்லது பொது எண் சேவை மையம் மூலமாகவோ கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு 26-ந் தேதி முதல் 2022-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை பதிவு செய்த அமைப்புசாரா தொழிலா ளர்களுக்கு இழப்பீடு வழங்க அறிவித்துள்ளது.

    அதன் படி விபத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், ஊனம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், பகுதி ஊனம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் இழப்பீடு தொகையாக வழங்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

    விபத்து மரணத்துக்கு இழப்பீடு தொகை பெற விண்ணப்பத்துடன் விண்ணப்பதாரர் ஆதார் அடையாள அட்டை. இ-ஷரம் அடையாள அட்டை, யூ.ஏ.என். இறப்பு சான்றிதழ், இறப்புக்கான மருத்துவ சான்றிதழ், முதல் விசாரணை அறிக்கை (எப்.ஐ.ஆர்), பிரேத பரி சோதனை அறிக்கை, 18 வயதுக்குள் இருக்கும் வாரிசு தாரர், பாதுகாவலர் விண்ணப்பிக் கும்போது மாவட்ட கலெக்டர் வழங்கிய பாதுகாவலர் சான்றிதழை ஆகியவற்றை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

    விபத்து ஊனத்துக்கு இழப்பீடு தொகை பெற விண்ணப்பத்துடன் விண்ணப்பதாரரின் அடையாள அட்டை, இ-ஷரம் அடையாள அட்டை, யூ.ஏ.என். எண், விபத்தின் காரணமாக மருத்துவமனையில் உள்ள நோயாளியாக சிகிச்சை பெற்று கொண்ட தற்கான மருத்துவ குறிப்பு அடங்கிய ஊனத்தின் தன்மைக்கான சான்றிதழ், அரசு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ அதிகாரியால் வழங்கப்பட்ட ஊனமுற்றோர் சான்றிதழ், நிரந்தர ஊனத்திற்கான மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட ஊனமுற்றோர் அடையாள அட்டை ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

    மேற்கண்ட அனைத்து ஆவணங்களும் வலை தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டி இருப்பதால், இழப்பீடு கோரும் விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட அசல் மற்றும் நகல் ஆவணங்களுடன் புதுவை அமைப்புசாரா தொழிலாளர் நலச்சங்க அலுவலகத்தில் நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பொதுமக்கள் அறுந்து கிடக்கும் மின்கம்பி, சேதமான மின்கம்பியை தொட வேண்டாம்.
    • மின்வேலி அமைப்பது கண்டறியப்பட்டால் மின் இணைப்பு துண்டிக்கப் படும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மின்துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மின்துறை புயலை எதிர்கொள்ளவும், அவசர பணிகளை விரைந்து முடிக்கவும். தொழில்நுட்ப பணியாளர்களை அமர்த்தியுள்ளது. மழைக் காலங்களில் ஏற்படும் மின் தடையை உடனுக்குடன் அறிய, அவசர கட்டுப்பாட்டு அறை மின் துறை தலைமை அலுவலகத்தில் இயங்கி வருகிறது.

    பொதுமக்கள் மின்தடை பிரச்சினைகளை 0413 2339832 என்ற தொலை பணி பேசி எண்ணிலும், 18006 231912 அல்லது 1912 என்ற எண்ணில் தெரிவிக் கலாம்.

    பொதுமக்கள் அறுந்து கிடக்கும் மின்கம்பி, சேதமான மின்கம்பியை தொட வேண்டாம்.

    அருகில் உ ள்ள மின் துறை அலுவலகத்திற்கு தெரிவிக்கலாம். விவசாய நிலங்களில் எலி, காட்டு பன்றி போன்ற விலங்கு களிடமிருந்து பயிர்களை காக்க சிலர் மின்சார வேலி அமைக்கின்றனர். இதில் சில நேரம் உயிரிழப்பு ஏற்படுகிறது.

    விவசாய நிலங்களில் மின்வேலி அமைப்பது தண்டனைக்குரிய குற்ற மாகும். மின் கம்பங்களில் ஆடு, மாடு போன்ற விலங்கு கனை கட்டக்கூடாது. மின்வேலி அமைப்பது கண்டறியப்பட்டால் மின் இணைப்பு துண்டிக்கப் படும்.

    இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

    • விநாயகர் கல்வி நிறுவன தலைவர் தனசேகரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். செயலாளர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தார்.
    • கல்லூரி ஆண்டு விழாவில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரியில் ஆண்டு விழா கல்லூரி கலையரங்கில் நடந்தது.

    மணக்குள விநாயகர் கல்வி நிறுவன தலைவர் தனசேகரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். செயலாளர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ராஜராஜன், மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை இயக்குனர் ராஜகோவிந்தன், துணை இயக்குனர் காக்னே, மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை டீன் அகாடெமிக் கார்த்திகேயன், டீன் ஆராய்ச்சி சஞ்ஜய் மற்றும் மருத்துவ கண் காணிப்பாளர் பிரகாஷ், பதிவாளர் தட்சிணா மூர்த்தி, செவிலியர் கல்லூரியின் முதல்வர் முத் தமிழ்செல்வி ஆகியோர் கலந்துகொண்டனர்.

    மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரியின் துணை முதல்வர் நர்மதா வரவேற்றார். செவிலியர் கல்லூரியின் முதல்வர் முத்தமிழ்செல்வி ஆண்டு அறிக்கையை வாசித்தார்.

    பாராட்டுரையை மணக்குள விநாயகர் கல்வி நிறுவனத்தின் தலைவர் தனசேகரன் வழங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் மலர்க்கண் மற்றும் தலைமை விருந்தினராக ஜோதிகண் பராமரிப்பு மையத்தின் நிறுவனர் வனஜா வைத்தியநாதன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

    கல்லூரி ஆண்டு விழாவில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.

    • தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கோபால் வழியனுப்பி வைத்தார்
    • 3 அணியை சேர்ந்த 30 விளையாட்டு வீரர்கள் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றனர்.

    புதுச்சேரி:

    36-வது அகில இந்திய அளவிலான சீனியர், ஜூனியர் மற்றும் ஆடவர் மகளிர் கயிறு இழுக்கும் போட்டி நாளை (திங்கட்கிழமை) தொடங்கி 9-ந்தேதி வரை மகாராஷ்டிரா மாநிலம் பால்காரில் நடைபெற உள்ளது.

    போட்டியில் புதுவை மாநில கயிறு இழுக்கும் சங்கத்தின் சார்பில் கலந்து கொள்வதற்காக 3 அணியை சேர்ந்த 30 விளையாட்டு வீரர்கள் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றனர்.

    அவர்களை தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால் புதுவை ரெயில் நிலையத்தில் பொன்னாடை போர்த்தி வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் புதுவை மாநில கயிறு இழுக்கும் சங்கத்தின் செயலாளர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் பாரதி மற்றும் உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க. செயலாளர் சக்திவேல், நிர்வாகிகள் அகிலன், முருகன், சேட்டு என்ற வேல்முருகன், தமிழ்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×