என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தெருமுனை பிரசாரம் செய்தனர்.
    புதுச்சேரி:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி நகர கமிட்டி, நல்லாம் கிளீனிக் ஆட்டோ தொழிலாளர்கள் கிளை சார்பில் தெருமுனை கூட்டம்-பேரணி நடந்தது.

    பிரதேச செயலாளர் ராஜாங்கம் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர்கள் சீனுவாசன், ராமச்சந்திரன், கலியமூர்த்தி, நகர செயலாளர் மதிவாணன், நகரக்குழு மணவாளன், நிர்வாகிகள் ஜோதிபாசு, சரவணன் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

    மின்துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும். மின்கட்டண ரசீது வழங்கும் பணியை தனியாருக்கு வழங்கக் கூடாது. அமைப்புசாரா நலச்சங்கத்தை வாரியமாக மாற்றி சட்டமன்றத்தில் அறிவிக்க வேண்டும். ரூ.10 கோடி நிதிஒதுக்க வேண்டும். புதிய வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த தெருமுனை விளக்க பிரசாரம் நடைபெற்றது.
    புதுவையில் மூடுபனி காரணமாக வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த சில நாட்களாக இரவில் கடும் பனி நிலவுகிறது.

    அதிகாலையில் மூடுபனி யால் சாலைகள் முழுவதும் பனி அடர்ந்து இருண்டு காணப்படுகிறது.  வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் கோடை வெயில் தொடங்கும். இந்த ஆண்டு பிப்ரவரி முடிவடைய உள்ள நிலையிலும் இரவில் பனிப்பொழிவு உள்ளது. 

    இன்று காலை வரை வானிலை இருண்டு காணப்பட்டது. கிராமப்புற பகுதிகளிலும், தேசிய நெடுஞ்சாலைகளிலும் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி இருந்தது. 

    இதனால் முகப்பு விளக்குகளை எரிய விட்டு வாகன ஓட்டிகள் சென்றனர். கடும் பனியால் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்ட சிரமப்பட்டனர்.
    புதுவை சின்ன சுப்பராய பிள்ளை வீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் பிரம்மோற்சவத்தையொட்டி வருகிற 7-ந் தேதி மயான கொள்ளை விழா நடக்கிறது.
    புதுச்சேரி:

    புதுவை சின்ன பிள்ளை வீதியில் உள்ள  அங்காளபரமேஸ்வரி கோவிலில் 45-ம் வருட பிரம்மோற்சவ விழா வருகிற  1-ந் தேதி மாலை 5 மணிக்கு விநாயகர் பூஜையுடன் தொடங்குகிறது.

    இரவு 7 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து நாள்தோறும் இரவு 7 மணிக்கு பல்வேறு வாகனங்களில் அம்மன் புறப்பாடு நடக்கிறது. 7-ந் தேதி 6.30 மணிக்கு அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து மதியம் 1 மணிக்கு தேர் புறப்பாடும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு நரிமேடு மயானத்தில் மயானக் கொள்ளை விழா நடக்கிறது 

    இதையடுத்து 8-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை தினமும் 6.30 மணிக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலாவும் நடைபெறுகிறது.

     மறுநாள் 16-ந் தேதி காலை 6.30 மணிக்கு அபிஷேகமும், இரவு 7 மணியளவில் வேதபுரீஸ்வரர் கோவிலில் தெப்பல் உற்சவம் நடக்கிறது.

    17-ந் தேதி காலை 7 மணிக்கு மகா அபிஷேகமும் மாலை 6 மணிக்கு உற்சவ அலங்காரம் தீபாராதனை நடைபெறும். 18-ந் தேதி இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் 19-ந் தேதி மாலை 4.30 மணி அளவில் மஞ்சள் நீராட்டும் நடைபெறுகிறது. 20-ந் தேதி இரவு  பாவாடைராயன் சுவாமி பள்ளயத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
    உலக தமிழ்மொழி நாள் விழா கொண்டாடப்பட்டது.
    புதுச்சேரி:

    ராகவேந்திரா நகர் நலவாழ்வுச்சங்கமும் தொண்டை மண்டல நாணயவியல் கழகமும் இணைந்து  உலக தாய்மொழி விழாவையொட்டி குழந்தைகளுக்காக தமிழ் வாசிப்பு விழாவை நடத்தின.

    விழாவிற்கு நலச்சங்க தலைவர் பழனி தலைமை தாங்கினார். செயலர் விக்டர் ஜான், அவைத்தலைவர் சடகோபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொண்டை மண்டல நாணய கழக நிறுவனர் கோபிராமன் வரவேற்புரையாற்றினார்.

    மாணவ&மாணவிகள் தமிழ்நூல்களை வாசித்தனர்.  கலைபண்பாட்டுத்துறை இயக்குநர் கந்தன் சிவராஜ் சிறப்புரை நிகழ்த்தினார் 

    ராதே அறக்கட்டளை நிறுவனர் என்ஜினீயர் தேவதாசு நோக்க உரையாற்றினார். டாக்டர் நாகராஜன், வக்கீல் கோவிந்தராசு, செல்லப்பெருமாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

    முன்னதாக நல்லாசிரியர்  தட்சணாமூர்த்திக்கு பாராட்டு சிறப்பு செய்யப்பட்டது.  மாணவ-மாணவிகளுக்கு தட்சணாமூர்த்தி சான்றிதழ் வழங்கினார். முடிவில் துரை.சிவாஜி நன்றி கூறினார்.
    முத்துரத்தின அரங்கம் மேல்நிலைப்பள்ளியில் ரத்ததான முகாம் நடந்தது.
    புதுச்சேரி:

    புதுவை கவுண்டன்பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முகாமிற்கு பள்ளி தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். 

    நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக முத்து ரத்தின அரங்கம் மேல் நிலைப்பள்ளியும் ஜிப்மர் ரத்த வங்கியும் இணைந்து  ரத்த தான முகாமை நடத்தியது. தலைமை விருந்தினராக மாநில அளவிலான நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் குழந்தைசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    சிறப்பு விருந்தினராக ஜிப்மர் ரத்த வங்கியின் பொறுப்பாளர் டாக்டர் வடிவேல்  கலந்து கொண்டு ரத்ததானம் செய்வதின் அவசியத்தை மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார். 

    புதுவை மாநில ஒருங்கிணைந்த கோஜூரியோ கராத்தே சங்க மாநிலச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினார். ரத்ததான முகாமில்  பெற்றோர்கள் மற்றும் தன்னார்வலர்கள்  பங்கேற்று ரத்ததானம் செய்தனர்.  ரத்ததானம் செய்த அனைவருக்கும் அசைவ உணவு வழங்கப்பட்டது. 

    நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் நெடுஞ்செழியன் மற்றும் பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
    தாய் மொழிப்பற்றை வீட்டில் இருந்து தொடங்குவோம் என்று கவர்னர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    உலகத் தாய்மொழி நாளை கொண்டாடும் வகையில் “தாய் மொழி போற்றுதும்“ என்ற தலைப்பில் புதுவை தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இணையவழி கருத்தரங்கினை கவர்னர்  தமிழிசை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தாய்மொழி தமிழ் பற்றி பேசும் அளவிற்கு அதன் வளர்ச்சிக்காக நாம் பணியாற்றுகிறோமா என்பது சந்தேகம். தாய் மொழியை நேசிக்கும் அதேவேளை பிற மொழிகளை நிந்திக்கக்கூடாது. எத்தனை மொழிகளை படிக்கிறோமோ அந்த அளவிற்கு நமது அறிவாற்றலும் வாய்ப்புகளும் அதிகரிக்கிறது. 

    தாய்ப்பால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு அணுக்களை  அதிகரிக்கிறதோ அதேபோல தாய் மொழி நம் கற்கும் திறனை அதிகரிக்கிறது. குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்து தாய் மொழியை கற்றுக் கொடுக்க வேண்டும். தாய் மொழியில் கற்றவர்கள்தான் உலக அளவில் சாதனை செய்திருக்கிறார்கள். 

    பிரதமர் அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய கல்வி கொள்கை மற்றொரு மொழியைக் கற்றுக்கொண்டாலும் தொடக்க கல்வி தாய்மொழியில் தான் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்கிறது. தாய்மொழி பற்றை வீட்டில் இருந்து தொடங்குவோம். குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டுவோம். 

    இவ்வாறு கவர்னர் தமிழிசை  பேசினார்.

    பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் மோகன், பேராசிரியர்கள், தமிழ் சங்க பிரதிநிதிகள், மாணவர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
    சமூக நீதியுடன் கூடிய உள்ளாட்சி அமைப்பை உருவாக்க தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும் என்று இந்திய கம்யூ. கட்சி வலியுறுத்தியுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை மாநில இந்திய கம்யூனிஸ்டு செய்லாளர் சலீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநில தேர்தல் ஆணையர், தான் செய்த தவறுக்கு நியாயம் கற்பிக்க முயலுகிறார். கடந்த 2009-ம் ஆண்டு புதுவை அரசால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து பதவிகளுக்கான அட்டவணை இனத்தவர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பதவிகள் ஒதுக்கீடு ஆணை பிறப்பிக்கப்பட்டது.

    ஆனால், இப்போதுள்ள என்.ஆர். காங்கிரஸ்-பாரதீய ஜனதா கூட்டணி அரசு 6.10.2021 அன்று பிற்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடி சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டு ஆணையை ரத்து செய்தது. இதை ஏற்றுதான் மாநில தேர்தல் ஆணையம் இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது.

    எனவே புதுவை அரசும், மாநில தேர்தல் ஆணையமும் சமூக நீதியை பறித்தது உண்மைதானே. இந்த உண்மையை உலகிற்கு உரத்து சொன்னோம். 

    கடந்த 2-ந்தேதி மாநில தேர்தல் ஆணையம் நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடுடன்தான் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று வற்புறுத்தி னார்கள்.

    ஆனால் மாநில தேர்தல் ஆணையர் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் கருத்து பதிவை ஏன் தணிக்கை செய்கிறார்? மேலும் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடத்த எந்த தடையுமில்லை என்று சொத்தையான வாதத்தை முன்வைக்கிறார்.

    அப்படியானால், சமூக நீதியுடன் கூடிய உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அரசால் அமைக்கப்பட்டு பணியாற்றுகிற நீதிபதி கே.கே. சசிதரன் ஒரு நபர் ஆணையத்தின் மீதான மதிப்பீடு  என்ன?

    மாநில தேர்தல் ஆணையர் மாநிலத்தில் உள்ள சமுக கட்டமைப்பை புரிந்து கொண்டு, சமூக நீதியுடன் கூடிய மக்கள் ஜனநாயகத்தை நிலைநாட்டும் உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்கும் பார்வையுடன் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு  சலீம் அறிக்கையில் கூறியுள்ளார்.
    வியாபாரிகள் பயன்படுத்தப்படும், தராசு மற்றும் எடைக்கற்கள் முறைப்படி வருவாய்துறை எடை அளவுப்பிரிவால் முத்திரை வைக்கப்படாமலும், எடை அளவு குறைவாக இருப்பதாகவும், பொதுமக்களிடமிருந்து தொடர்ச்சியான புகார்கள் சென்றது.
    காரைக்கால்:

    காரைக்கால் திருநள்ளாறு சாலை பிள்ளைத் தெருவாசல் சந்திப்பில் உள்ள நகராட்சித்திடலில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வந்தது. இப்பகுதியில் அண்மைக்காலமாக மழை பெய்ததால் சேறும் சகதியுமாக மாறியது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டதால், அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூட்டத்திற்கு சந்தை தற்காலிமாக இடம் மாற்றம் செய்யப்படது.

    இச்சந்தையில் வியாபாரிகள் பயன்படுத்தப்படும், தராசு மற்றும் எடைக்கற்கள் முறைப்படி வருவாய்துறை எடை அளவுப்பிரிவால் முத்திரை வைக்கப்படாமலும், எடை அளவு குறைவாக இருப்பதாகவும், பொதுமக்களிடமிருந்து தொடர்ச்சியான புகார்கள் சென்றது.

    அதனை தொடர்ந்து தாசில்தார் பொய்யாத மூர்த்தி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் வாரசந்தையில் திடீர் ஆய்வு செய்தனர். இதில், சுமார் 10 கடைகளில் எடை சரியில்லாத தராசுகளும், முத்திரை இல்லாத எடை கற்களும் பறிமுதல் செய்யப்பட்டது. எடைக் கற்கள் பறிமுதல் செய்யப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் உரிய அபராதம் செலுத்தியப் பிறகே எடைக் கற்களும், தராசுகளும் திரும்பத் தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அன்னை சமாதியை வணங்கி சென்றனர்.
    புதுச்சேரி:

    மகான் அரவிந்தரின் முக்கிய சீடராக இருந்தவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மீரா அல்பாசா.

    இவர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 1878 பிப்ரவரி 21-ந் தேதி பிறந்தார். அரவிந்தரின் ஆன்மீக சொற்பொழிவால் ஈர்க்கப்பட்டு இந்தியா வந்தார்.

    புதுவையில் அரவிந்தர் நிறுவிய ஆசிரமத்தில் பணியாற்றிய இவர் இங்கேயே தங்கி விட்டார். மனித குல ஒருமைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக ஒரு இடம் விளங்க வேண்டும் என மகான் அரவிந்தர் விரும்பினார்.

    அவரின் கனவை நிறைவேற்றும் வகையில் அன்னை மீரா ஆரோவில்லில் சர்வதேச நகரை உருவாக்கினார். அரவிந்தரின் பக்தர்களால் அன்னை என அழைக்கப்பட்ட மீரா அரவிந்தரின் மறைவுக்கு பின் ஆசிரமத்தை நடத்தி வந்தார்.

    1973 நவம்பர் 17-ந் தேதி அன்னை மீரா மறைந்தார். ஆசிரமத்தில் அரவிந்தரின் சமாதிக்கு அருகிலேயே அன்னையின் சமாதியும் அமைக்கப்பட்டது. அரவிந்தர், அன்னையின் பிறந்தநாள், நினைவு நாளை ஆசிரமவாசிகளும், பக்தர்களும் வழிபட்டு வருகின்றனர்.

    அன்னை மீராவுக்கு இன்று 144-வது பிறந்தநாள். இதையொட்டி அன்னையின் சமாதி வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டது. ஆசிரமத்தில் அன்னை பயன்படுத்திய அறை மற்றும் பொருட்கள் பக்தர்களின் பார்வைக்கு திறக்கப்பட்டது.

    நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அன்னை சமாதியை வணங்கி சென்றனர்.



    சபாநாயகரை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் திடீரென சந்தித்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை 23-ந் தேதி (புதன்கிழமை) கூடுகிறது. சபை ஒருநாள் மட்டுமே நடைபெறும் என தெரிகிறது.

    இந்த நிலையில் புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்க் கட்சித்தலைவருமான சிவா தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கென்னடி, சம்பத், செந்தில்குமார் ஆகியோர் சட்டசபையில் சபாநாயகர் ஏம்பலம் செல்வத்தை சந்தித்து தி.மு.க. சார்பில் மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    சட்டசபை வருகிற 23&ந் தேதி கூட்டப்படுகிறது. இதில் நீட் விலக்கு மசோதா, மின்துறை தனியார் மயத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்துவது போன்ற பல முக்கிய பிரச்சினைகளை தீர்மானத்துக்கு ஏற்க வேண்டும். 
    பா.ஜனதா கூட்டணி அரசு புதுவையை பெஸ்ட் புதுவையாக எப்படி கொண்டு செல்கிறது? என விவாதிக்க வேண்டும். 

    தமிழகம் போல் புதுவையிலும் நீட் தேர்வு விலக்கு மசோதா கொண்டு வர வேண்டும். மத்திய அரசின் நிதியை அதிகமாக பெற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மழை நிவாரணம் வழங்க கோர வேண்டும். உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிக்க வேண்டும். 

    மின்துறை தனியார் மயத்தை எதிர்த்து ஊழியர்கள் போராடி வருகின்றனர்.  இந்த நிலையில் மின் கட்டண ரசீது வழங்கும் பணி தனியாரிடம் வழங்கப்பட்டுள்ளது குறித்து விவாதிக்க வேண்டும். மருத்துவக் கல்லூரி கட்டண வசூல் குறித்தும், சட்டசபையில் அறிவித்த திட்டங்களை செயல்படுத்தாதது குறித்தும் விவாதிக்க வேண்டும். 

    புதுவையின் கடன்சுமை, வேலை வாய்ப்பின்மை, ஆயுஷ்மான்பாரத் திட்டம், மருத்துவ நிதியுதவி பிரச்சினை உட்பட பல்வேறு மக்கள் பிரச்சினைகளை விவாதிக்க வேண்டியுள்ளது. எனவே சட்டசபையை ஒரு வாரத்துக்கு மேல் நடத்த வேண்டும். 

    இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
    கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரியில் காப்பர் கம்பி திருடிய 2 பேரை போலீசார் கைது
    புதுச்சேரி:

    புதுவை கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்போது கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

    அங்குள்ள 4-வது மாடியில் நடைபெறும் கட்டிட வேலைக்காக காப்பர் கம்பிகள் வைக்கப் பட்டிருந்தது. ரூ.3 லட்சம் மதிப்பிலான இந்த காப்பர் கம்பிகளை  நேற்று  நிர்வாகத் தின் எலக்ட்ரிக்கல் பிரிவின் இளநிலை பொறியாளர் ராம் எடுக்க வந்த போது அந்த காப்பர் கம்பிகள் திருடு போயிருந்தது தெரியவந்தது. 

    அதிர்ச்சியடைந்த அவர் கோரிமேடு போலீசில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

    இந்தநிலையில் மருத்துவமனையில் சந்தேகப்படும் படியாக நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். 

    சந்தேகமடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்த போது காப்பர் கம்பிகளை அவர்கள் திருடியது தெரியவந்தது. 

    மேலும் விசாரணையில் அவர்கள் பட்டானூர் வசந்தபுரத்தை சேர்ந்த மணிகண்டன்(28), புதுவை  குறிஞ்சிநகர் 12 வது குறுக்கு தெருவை சேர்ந்த மதிவாணன் (28) என்பது தெரியவந்தது. 

    4 மாதத்துக்கு  முன்னர் இவர்கள் 2 பேரும் தங்களது உறவினர் ஒருவரை பிரசவத்துக்கு அனுமதிப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளனர். 

    அப்போது இருவரும் 4-வது மாடிக்கு சென்றுள்ளனர். அங்கு அங்கு காப்பர் கம்பிகள் இருந்ததை பார்த்துள்ளனர். இருவரும் கூலி தொழிலாளி கள் என்பதால் காப்பர் கம்பி களை வெட்டி எடுத்து செல்ல முடிவு செய்தனர்.

    அதன்படி இரவு நேரத்தில் 4-வது மாடிக்கு சென்று அங்கிருந்து காப்பர் கம்பிகளை வெட்டி பின்பக்கம் போட்டுள்ளனர். அங்கு  கட்டிட வேலைக்காக மணல் கொட்டி வைத்திருந் ததால் கம்பி விழும் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. 

    இதையடுத்து காப்பர் கம்பிகளை பையில் வைத்து எடுத்து சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர்  அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
    வில்லியனூர் அருகே மாமூலாக சாராயம் கேட்டு மிரட்டல்
    புதுச்சேரி : 

    புதுவை வில்லியனூர் கீழூ அக்ரஹாரம் கிராமத்தை  சேர்ந்தவர் சோலைமணி.  இவர் அரசு அனுமதியுடன் அப்பகுதியில் சாராயக்கடை நடத்தி வருகிறார்.   கிளிஞ்சுகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன்(வயது30), பிரதாப், ராமமூர்த்தி ஆகியோர் சாராயக் கடைக்கு வந்தனர்.

    சாராயக்கடையில் சாராயம்  விற்பனை செய்து கொண்டிருந்த ஊழியரிடம் 5 பாக்கெட் சாராயத்தை வாங்கி குடித்தனர். அப்போது சாராயம் கொடுத்த விற்பனையாளர் அதற்கான பணத்தை அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, நாங்கள் எப்போது வந்து கேட்டாலும் எங்களுக்கு சாராயம் மாமூலாக  கொடுக்க வேண்டும் என்று மிரட்டி சென்றனர்.

    இதுகுறித்து  சாராயக்கடை உரிமையாளர் சோலைமணி மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சப்&இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து  ராமச் சந்திரனை கைது செய்தனர். மற்ற  2பேரை தேடி வருகிறார்கள். கைது செய்யப்பட்டுள்ள  ராமச்சந்திரன் மீது தமிழக காவல் நிலையங்களில் மணல் திருட்டு வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    ×