என் மலர்
உள்ளூர் செய்திகள்

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தெருமுனை பிரசாரம் செய்த காட்சி.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தெருமுனை பிரசாரம்
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தெருமுனை பிரசாரம் செய்தனர்.
புதுச்சேரி:
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி நகர கமிட்டி, நல்லாம் கிளீனிக் ஆட்டோ தொழிலாளர்கள் கிளை சார்பில் தெருமுனை கூட்டம்-பேரணி நடந்தது.
பிரதேச செயலாளர் ராஜாங்கம் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர்கள் சீனுவாசன், ராமச்சந்திரன், கலியமூர்த்தி, நகர செயலாளர் மதிவாணன், நகரக்குழு மணவாளன், நிர்வாகிகள் ஜோதிபாசு, சரவணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மின்துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும். மின்கட்டண ரசீது வழங்கும் பணியை தனியாருக்கு வழங்கக் கூடாது. அமைப்புசாரா நலச்சங்கத்தை வாரியமாக மாற்றி சட்டமன்றத்தில் அறிவிக்க வேண்டும். ரூ.10 கோடி நிதிஒதுக்க வேண்டும். புதிய வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த தெருமுனை விளக்க பிரசாரம் நடைபெற்றது.
Next Story






