search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 person arrested"

    • வீரசின்னம்பட்டி பிரிவில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை நம்பர்களின் அடிப்படையில் விற்பனை செய்தனர்.
    • அவர்களிடம் இருந்த ரூ.6 ஆயிரத்து 300, பில்புக், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    குள்ளனம்பட்டி:

    சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் தலைமையிலான போலீசார் சாணார்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது வீரசின்னம்பட்டி பிரிவில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை நம்பர்களின் அடிப்படையில் விற்பனை செய்த அலங்காநல்லூரை சேர்ந்த கண்ணன்( வயது 38), கன்னியாபுரத்தை சேர்ந்த சுரேந்திரன்( வயது 43) ஆகிய 2 பேர் போலீசாரிடம் பிடிபட்டனர்.

    அவர்களிடம் இருந்த ரூ.6 ஆயிரத்து 300, பில்புக், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.மேலும் இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் வழக்குபதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • போலீசார் சின்ன தேவியம்மன் கண்மாய் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.
    • 5 கிலோ கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் தேவாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் தெய்வக்கண்ணன் தலைமையிலான போலீசார் சின்ன தேவியம்மன் கண்மாய் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி விசாரித்தனர்.

    அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்தனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டதில் 5 கிலோ கஞ்சா வைத்திருந்ததும், இதனை விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து தேவாரம் பேச்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சதீஸ்குமார் (37), சுகேந்திரன் (32) ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சா மற்றும் மோட்டர் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    இவ்வழக்கு தொடர்பாக தேவாரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த முருகன் மனைவி கவிதாவை போலீசார் தேடி வருகின்றனர். சுகேந்திரன் மீது ஏற்கனவே பல்வேறு கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல் கவிதா மீதும் கஞ்சா கடத்திய வழக்குகள் உள்ளது.

    • சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் அனுமந்தநகர் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது பைக்கில் பின்தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் அவர் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர்.
    • மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (21), பொன்மேனியை ேசர்ந்த சதீஸ் (24) ஆகியோர்தான் 3 இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் திருநகரை சேர்ந்த ஜாய் என்பவரின் மனைவி பிரான்சிஸ் மரியரோசி (38). ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் அனுமந்தநகர் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் பின்தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் அவர் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர்.

    இதுகுறித்து நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதே போல அம்பாத்துரை உள்ளிட்ட மேலும் சில இடங்களிலும் தனியாக சென்ற பெண்களை குறிவைத்து வழிப்பறி சம்பவங்கள் நடந்தது. இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் உலகநாதன், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வீரபாண்டியன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

    போலீசார் விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டது மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (21), பொன்மேனியை ேசர்ந்த சதீஸ் (24) ஆகியோர்தான் 3 இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் இவர்கள் மதுரை, கோவை மாவட்டங்களிலும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள், 10 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

    • பைக் மீது மோதியில் குடிபோதையில் இருந்தவர்கள் தொழிலாளி மீது கல்லை போட்டு கொலை செய்தனர்.
    • போலீசார் 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே சிறுமலையை சேர்ந்தவர் வீரன்(45). கூலித்தொழி லாளி. இவருக்கு தனம் என்ற மனைவியும், 3 மகன்கள், 2 மகள்களும் உள்ளனர். வீரனின் தந்தை சின்னு திண்டுக்கல் பாரதிபுரம் சந்தைபேட்டை பகுதியில் வசித்து வருகிறார்.

    அவரை பார்ப்பதற்காக அடிக்கடி திண்டுக்கல் வந்து சென்றார். அேதபோல் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அப்போது மற்றொரு பைக்கில் வந்த அன்பி ல்ராஜ்(32), காளிதாஸ்(30) ஆகியோர் வீரனின் பைக் மீது மோதினர். அப்போது 3 பேருமே குடிபோதையில் இருந்தனர். இதனால் ஆத்திரமடைந்து அவர்க ளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அன்பில்ராஜ் மற்றும் காளிதாஸ் ஆகியோர் வீரனின் கழுத்தை கயிற்றால் இறுக்கினர். இருந்தபோதும் ஆத்திரம் தீராமல் அருகில் இருந்த பாறாங்கல்லை எடுத்து அவரது தலையில் போட்டனர்.

    இதில் தலைநசுங்கி வீரன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து நகர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன், சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கொலை நடந்த இடத்தில் ஒரு செல்போன் இருந்தது.அதை துருப்புசீட்டாக வைத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அன்பில்ராஜ் மற்றும் காளிதாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

    திண்டுக்கல் நகரில் கடந்த 2 நாட்களில் 3 கொலைகள் அடுத்தடுத்து அரங்கேறி உள்ளது பொதுமக்களி டையே பீதியை கிளப்பி யுள்ளது.

    • பார்சலை பிரித்து பார்த்த போது அதில் 7 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • 2 மோட்டார் சைக்கிளையும், கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் தேவாரம் அருகே அரண்மனைத்தெரு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்தனர். அவர்கள் வைத்திருந்த பார்சலை பிரித்து பார்த்த போது அதில் 7 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து கஞ்சா கடத்தி வந்த தேவாரம் வடக்கு தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி (29), சி.எஸ்.ஐ. சர்ச் தெருவைச் சேர்ந்த ராஜூ (24) ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்கள் வந்த 2 மோட்டார் சைக்கிளையும், கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய செல்வ பாண்டி என்பவரையும் தேடி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.28 ஆயிரம் ஆகும்.

    • பெண்ணை ஆபாசமாக பேசியதால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • தற்கொலைக்கு தூண்டிய 2 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகில் உள்ள நாயக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் சித்ரா (வயது 26). இவரது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அதே பகுதியை சேர்ந்த கோணமண்டையன் (41), பிரபாகரன் (28) ஆகிய 2 பேரும் மதுகுடிக்க பணம் கேட்டனர். அவர் தன்னிடம் பணம் இல்லை எனக்கூறியதால் அவரை ஆபாசமான வார்த்தைகளால் திட்டிவிட்டு சென்று விட்டனர்.

    இதை அக்கம்பக்கத்தினர் வேடிக்கை பார்த்ததால் மனமுடைந்த சித்ரா தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோணமண்டையன், பிரபாகரன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட எஸ்.பி.பாஸ்கரன், கலெக்டர் விசாகனுக்கு பரிந்துரை செய்தார்.

    கலெக்டர் உத்தரவின் பேரில் பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய 2 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ×