திண்டுக்கல் அருகே பெண்களிடம் நகை பறித்த 2 பேர் கைது

சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் அனுமந்தநகர் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது பைக்கில் பின்தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் அவர் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (21), பொன்மேனியை ேசர்ந்த சதீஸ் (24) ஆகியோர்தான் 3 இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் திருநகரை சேர்ந்த ஜாய் என்பவரின் மனைவி பிரான்சிஸ் மரியரோசி (38). ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் அனுமந்தநகர் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் பின்தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் அவர் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர்.

இதுகுறித்து நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதே போல அம்பாத்துரை உள்ளிட்ட மேலும் சில இடங்களிலும் தனியாக சென்ற பெண்களை குறிவைத்து வழிப்பறி சம்பவங்கள் நடந்தது. இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் உலகநாதன், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வீரபாண்டியன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

போலீசார் விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டது மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (21), பொன்மேனியை ேசர்ந்த சதீஸ் (24) ஆகியோர்தான் 3 இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் இவர்கள் மதுரை, கோவை மாவட்டங்களிலும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள், 10 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com