சாணார்பட்டி பகுதியில் லாட்டரி விற்ற 2 பேர் கைது

வீரசின்னம்பட்டி பிரிவில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை நம்பர்களின் அடிப்படையில் விற்பனை செய்தனர்.அவர்களிடம் இருந்த ரூ.6 ஆயிரத்து 300, பில்புக், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

குள்ளனம்பட்டி:

சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் தலைமையிலான போலீசார் சாணார்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வீரசின்னம்பட்டி பிரிவில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை நம்பர்களின் அடிப்படையில் விற்பனை செய்த அலங்காநல்லூரை சேர்ந்த கண்ணன்( வயது 38), கன்னியாபுரத்தை சேர்ந்த சுரேந்திரன்( வயது 43) ஆகிய 2 பேர் போலீசாரிடம் பிடிபட்டனர்.

அவர்களிடம் இருந்த ரூ.6 ஆயிரத்து 300, பில்புக், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.மேலும் இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் வழக்குபதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com