என் மலர்
உள்ளூர் செய்திகள்

உலக தாய்மொழி விழாவில் இராதே அறக்கட்டளை நிறுவனர் என்ஜினீயர் தேவதாசு பேசிய போது எடுத்தபடம்.
உலக தமிழ்மொழி நாள் விழா
உலக தமிழ்மொழி நாள் விழா கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி:
ராகவேந்திரா நகர் நலவாழ்வுச்சங்கமும் தொண்டை மண்டல நாணயவியல் கழகமும் இணைந்து உலக தாய்மொழி விழாவையொட்டி குழந்தைகளுக்காக தமிழ் வாசிப்பு விழாவை நடத்தின.
விழாவிற்கு நலச்சங்க தலைவர் பழனி தலைமை தாங்கினார். செயலர் விக்டர் ஜான், அவைத்தலைவர் சடகோபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொண்டை மண்டல நாணய கழக நிறுவனர் கோபிராமன் வரவேற்புரையாற்றினார்.
மாணவ&மாணவிகள் தமிழ்நூல்களை வாசித்தனர். கலைபண்பாட்டுத்துறை இயக்குநர் கந்தன் சிவராஜ் சிறப்புரை நிகழ்த்தினார்
ராதே அறக்கட்டளை நிறுவனர் என்ஜினீயர் தேவதாசு நோக்க உரையாற்றினார். டாக்டர் நாகராஜன், வக்கீல் கோவிந்தராசு, செல்லப்பெருமாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
முன்னதாக நல்லாசிரியர் தட்சணாமூர்த்திக்கு பாராட்டு சிறப்பு செய்யப்பட்டது. மாணவ-மாணவிகளுக்கு தட்சணாமூர்த்தி சான்றிதழ் வழங்கினார். முடிவில் துரை.சிவாஜி நன்றி கூறினார்.
Next Story






