என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மனைவி குடும்பம் நடத்த வரமறுத்ததால் எலக்ட்ரிசியன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    புதுவை வாணரபேட்டை ராசு உடையார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது26) எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இவரது மனைவி ஆனந்தி. இவர்களுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.

     இதற்கிடையே கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. அதுபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன் -மனைவிக் கிடையே குடும்ப தகராறு ஏற்பட்ட போது வெங்கடேசிடம் கோபித்துக்கொண்டு அவரது மனைவி ஆனந்தி தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதையடுத்து வெங்கடேஷ் மாமியார் வீட்டுக்கு சென்று மனைவியை பல முறை குடும்பம் நடத்த அழைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஆனந்தி வரமறுத்து விட்டதாக தெரிகிறது இதனால் வெங்கடேஷ் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார்.

    மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் விரக்தி அடைந்த வெங்கடேஷ் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். வெங்கடேஷ் வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையில் கதவை உட்புறமாக பூட்டிக்கொண்டு மின் விசிறியில் போர்வையால் தூக்கு போட்டு தொங்கினார். உடனே அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து தூக்கில் இருந்து வெங்கடேசை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்தரிக்கு கொண்டு சென்றனர். 

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வெங்கடேஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வெங்கடேசின் உறவினர் விண்சென்ட் கொடுத்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கொம்பாக்கத்தில் கணவன்-மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டை கிருஷ்ணாநகர் 2-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி நிர்மலா (வயது 53 ) இவர் கொம்பாக்கம் நடுத்தெருவில் செல்லதுரை மனைவி ஜெயலட்சுமி என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஐஸ்கிரீம் கோன் தயாரிக்கும் நிறுவனம் நடத்திவந்தார்.

    இந்த நிறுவனத்தில் அந்த இடத்தின் உரிமையாளரின் மகன் ராஜ் என்பவரும் பங்குதாரராக இருந்து வந்தார். இதற்கிடையே கொரோனா தொற்று காரணமாக உற்பத்தி செய்யாமல் நிறுவனம் கடந்த சில மாதங்களாக பூட்டப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் அந்த நிறுவனத்தில் உள்ள பொருட்களை யாரோ திருடிச் செல்வதாக தகவல் அறிந்த நிர்மலா தனது கணவர் ராஜேந்திரனுடன் நிறுவனத்திற்கு சென்றார்.

    அப்போது இடத்தின் உரிமையாளர் ஜெயலட்சுமி அவரது கணவர் செல்லதுரை மற்றும் அவர்களது மகன் ராஜ் ஆகிய 3 பேரும் நிறுவனத்தின் உள்ளே செல்ல விடாமல் தடுத்தனர்.
    மேலும் தகாத வார்த்தைகளால் திட்டி ராஜேந்திரனை தாக்கினர். இதனை தடுக்க முயன்ற நிர்மலாவையும் அவர்கள் தாக்கி இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர். 

    இது குறித்து நிர்மலா முதலியார் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

    புதுவை கோரிமேடு சொக்கநாதன் பேட் அணைக்கரை வீதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி கஸ்தூரி (வயது 63) இவர் தனது 2 மகள்களுடன் அங்குள்ள கோவில் நிலத்தில் வசித்து வருகிறார்கள். 

    இதுபோல் கஸ்தூரியின் உறவினர் முருகேசன் மற்றும் ஜெயலட்சுமி, அரங்கநாயகி உள்ளிட்ட சிலரும் அங்கு வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் அப்பகுதியில் வேப்பமரகிளைகளை வெட்டி அதனை கஸ்தூரி வீட்டு முன்பு கொட்டி அரங்கநாயகி மற்றும் தியாகு ஆகியோர் பிரச்சனை செய்து வந்தனர்.

    இது சம்பந்தமாக மீண்டும் பிரச்சினை ஏற்பட்டதால் கஸ்தூரியின் மகள்கள் இது பற்றி புகார் தெரிவிக்க கோரிமேடு போலீஸ் நிலையத்திற்கு சென்றிருந்தனர். 

    அப்போது வீட்டில் கஸ்தூரி மட்டும் இருந்தார். அந்த நேரத்தில் கஸ்தூரியின் உறவினர்கள் முருகேசன் அவர்களது மகள் இந்துமதி அவரது கணவர் சின்னக்கண்ணு உள்ளிட்ட சிலர் கஸ்தூரியிடம் தகராறு செய்து அவரை கத்தியாலும், இரும்பு பைபாலும் தாக்கினர். இதில் காயமடைந்த கஸ்தூரி கதிர்காமம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். 

    பின்னர் இது குறித்து கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  
    புதுவையில் இருந்து சென்னைக்கு பயணிகள்-சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க துறைமுகத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
    புதுச்சேரி:

    புதுவை துறைமுகத்தில் இருந்து பல வெளிநாடுகளுக்கு சரக்கு, கப்பல் போக்குவரத்து செயல்பட்டு வந்தது.

    காலப்போக்கில் துறைமுகம் தூர்ந்துபோனதால் இந்த போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் புதுவையில் சரக்கு, பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க அரசு முடிவெடுத்தது. இதற்காக துறைமுகத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. பழைய துறைமுகத்தில் இருந்த குடோன்கள் சீரமைக்கப்பட்டன.  துறைமுகத்தின் முகத்துவாரம் தூர்வாரப்பட்டு கப்பல்கள் வந்து செல்லும் வகையில் ஆழப்படுத்தப்பட்டுள்ளது. 

    புதுவையில் இருந்து சென்னை, காரைக்கால், அந்தமான் ஆகிய நகரங் களுக்கு பயணிகள், சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.  மேலும் துறைமுகத்தை லாபகரமாக இயக்க துறைமுகத்தில் காலியாக உள்ள இடங்களில் சினிமா படப்பிடிப்புகள்,  அரங்கம் அமைத்து நாடகம் தயாரிப்பு, கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கவும் முடி வெடுக்கப்பட்டது. 

    இதையடுத்து புதுவை துறைமுகத்துறை விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்றுள்ளது. ஒற்றை சாளர முறையில் இவர்களுக்கு அனுமதி வழங்கவும் துறைமுகத்துறை முடிவு செய்துள்ளது. 

    புதுவையில் இருந்து பயணிகள் கப்பல், சரக்கு கப்பல் இயக்கவும் பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தவும் தனியார் நிறுவனத்தினர் ஆர்வத்தோடு விண்ணப்பித்துள்ளனர்.  இவர்களிடமிருந்து கடந்த 21-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் தகுதியானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு புதுவை துறைமுகத்துறை அனுமதி வழங்க உள்ளது. 

    இதனால் புதுவையில் சுற்றுலா மற்றும் அதை சார்ந்த தொழில்கள் மேலும் வளர்ச்சி அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
    முத்தியால்பேட்டையில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
    புதுச்சேரி:

    புதுவை கோரிமேடு அருகே தமிழக பகுதியான நாவற்குளம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 38) கட்டிடத்தொழிலாளி.  இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு முத்தியால் பேட்டை சோலைநகரில் வசித்து வந்தார். இடையில் அவரது மனைவிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படவே நாவற்குளத்தில் குடியிருந்தார். 

    இந்த நிலையில் நேற்று கட்டிட வேலைக்காக தியாகராஜன் முத்தியால்பேட்டை சோலை நகருக்கு சென்றார். அங்குள்ள கடற்கரைக்கு சென்ற போது அப்பகுதியில் வசிக்கும் உதயகுமார் (60) என்பவர் தனது வீட்டருகே எப்படி வரலாம் என்று கூறி தகராறு செய்தார்.


    இதில் இருதரப்பினரிடையே வாய்தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. இதனால் ஆத்திரம் அடைந்த உதயகுமார் வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து தியாகராஜனை தாக்கினார்.  

    அப்போது தியாகராஜனுக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த மீனவர்கள் கோபி மற்றும் ராஜவேலு ஆகியோர் சேர்ந்து உதயகுமாரை தடியால் தாக்கினர். இதில் தலை மற்றும் மார்பில் படுகாயம் அடைந்த உதயகுமார் புதுவை அரசு ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்டார். 

    இந்த மோதல் குறித்து இருதரப்பினரும் தனித்தனியே சோலைநகர் புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.  போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அதிக விலைக்கு விற்பதற்காக லாரியில் சாராய பாக்கெட்டுகளை கடத்தி சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    கோட்டக்குப்பத்தை அடுத்த அனிச்சகுப்பம் மதுவிலக்கு சோதனை சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்ஜோசப் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுவையில் இருந்து மரக்காணம் நோக்கி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 490 சாராய பாக்கெட்டுகள் இருந்தன. 

    அதனை பறிமுதல் செய்து போலீசார் லாரியில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் காலாப்பட்டு கனகசெட்டிகுளத்தை சேர்ந்த கதிரேசன், கங்காதரன் என்பதும், இவர்கள் புதுவை பகுதியில் உள்ள சாராய கடையில் சாராய பாக்கெட்டுகளை வாங்கி தமிழக பகுதியில் கோவில் திருவிழாவில் விற்பனை செய்ய கடத்தி சென்றது தெரிய வந்தது.  இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
    தவளக்குப்பம் அருகே பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை அரசு பஸ் இன்று மதியம் பயணிகளை ஏற்றிக்கொண்டு புதுக்குப்பத்தில் இருந்து புதுவை நோக்கி சென்று கொண்டிருந்தது. பூரணாங்குப்பம் பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி- இறக்கிக்கொண்டு இருந்தது. அப்போது, கடலூரில் இருந்து புதுவை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் சொகுசு பஸ் எதிர்பாராதவிதமாக நின்று கொண்டிருந்த அரசு பஸ்சின் பின்புறத்தில் மோதியது. 

    இந்த விபத்தில் 2 பஸ்களிலும் பயணம் செய்த 10 பயணிகள் படுகாயமடைந்தனர். இதையடுத்து அங்கு இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் 4 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

    இந்த விபத்தில் தனியார் சொகுசு பஸ்சின் முன்பகுதி முற்றிலும் சேதமானது. இதுகுறித்த தகவலின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார்  விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    நேர்மையான காவலர் தேர்வு குறித்து எதிர்க்கட்சி தலைவரின் பாராட்டு உண்மையை வெளிப்படுத்தியுள்ளது என்று அன்பழகன் அறிக்கை கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சராக இருந்த நாராயணசாமி அரசியல் கண்ணோட்டத்தோடு தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் செயல்படுத்தும் அனைத்து திட்டங்களிலும் முறைகேடு நடப்பதாக பொய் குற்றச்சாட்டை தொடர்ந்து கூறி வந்தார். 

    காவலர் தேர்வு முதல்-அமைச்சரும், உள்துறை அமைச்சரும் ஆணையிட்டதன் அடிப்படையில் காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் பல துறையின் செயலர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, நேர்மையாக காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். காவலர் தேர்வு முடிவு வெளிவருவதற்கு முன்னரே பெரிய ஊழல் நடப்பதாக வழக்கம் போல் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம் சுமத்தி இருந்தார்.

    தற்போது காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான தி.மு.க.வின் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் நடைபெற்ற காவலர் தேர்வு நேர்மையான, வெளிப்படையாக, ஊழலின்றி நடந்தது என்று பாராட்டியுள்ளார். பா.ஜனதா உள்துறை அமைச்சரை தி.மு.க.வை சேர்ந்த எதிர்கட்சி தலைவர் பாராட்டியிருப்பது என்றைக்காவது ஒரு நாள் உண்மை வெளிவரும் என்ற விதத்தில் அவரது பாராட்டு அமைந்துள்ளது.

    இவ்வாறு அன்பழகன் கூறியுள்ளார்.
    புதுவையில் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
    புதுச்சேரி:
    -
    நாடு முழுவதும் மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து 28, 29-ந்தேதி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது. புதுவையில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் 28-ந்தேதி வேலைநிறுத்தம், 29-ந்தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இதற்கு தொழிற்சங்கத்தினர் பல்வேறு அரசியல்கட்சிகள், அமைப்புகள், இயக்கங்களிடம் ஆதரவு திரட்டி வருகின்றனர். இந்த நிலையில் மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் மாநில செயலாளர் சலீம் தலைமையில் நடந்தது. 

    எதிர்கட்சித்தலைவர் சிவா, எம்.எல்.ஏ.க்கள் கென்னடி, சம்பத், காங்கிரஸ் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்டு நிர்வாகிகள் அபிஷேகம், கீதநாதன், சேதுசெல்வம், தினேஷ் பொன்னையா, மார்க்சிஸ்டு ராஜாங்கம், பெருமாள், விடுதலை சிறுத்தைகள் கட்சி தேவ.பொழிலன், ம.தி.மு.க. கபிரியேல், முஸ்லீம் லீக் உமர், மாணவர் கூட்டமைப்பு சுவாமிநாதன் மற்றும் பலர் பங்கேற்றனர். 

    கூட்டத்தில் நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வதற்கான கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் 28, 29-ந்தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்தம், 29-ந்தேதி நடைபெறும் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணி முழு ஆதரவு அளிக்கிறது. 

    போராட்டத்தில் முழுமையாக பங்கேற்க வணிகர்கள், கடை வியாபாரிகள், திரையரங்கு உரிமையாளர்கள், லாரி, பஸ் உரிமையாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களையும் மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணி கேட்டுக்கொள்கிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

    அகில இந்திய வேலை நிறுத்தம் சம்பந்தமாக புதுவை முதலியார்பேட்டை இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம். இதில் தி.மு.க- காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தை கட்சிகள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    காரைக்கால் அருகே பிளஸ்-1 மாணவியை தாயாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்கால்:

    காரைக்கால் அருகே திரு.பட்டினத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. அதே பகுதியில் பிளஸ்1 படித்து வருகிறார்.

    கடந்த சில மாதங்களாக, அந்த சிறுமிக்கும், திரு.பட்டினம் கீழையூர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ் (வயது23) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியுள்ளது.

    அப்போது சிறுமியை சரண்ராஜ் பலாத்காரம் செய்து உள்ளார். இதனால் சிறுமி கர்ப்பம் ஆனார்.

    சம்பவத்தன்று மாலை சிறுமி வயிறு வலிப்பதாக தனது பெற்றோரிடம் கூறினார். அதனை தொடர்ந்து அந்த சிறுமி காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிறிது நேரத்தில், சிறுமிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது, நடந்த சம்பவத்தை சிறுமி கூறியுள்ளார்.

    இது குறித்து பெற்றோர் திருபட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சரண்ராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 100 நாட்கள் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உறுதி அளித்தார்.
    புதுச்சேரி:

    மணவெளி தொகுதிக்கு உட்பட்ட தவளைக்குப்பம் சீனிவாசா நகரில் சாலை வசதி செய்து கொடுக்க அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.வும் சபாநாயகருமான ஏம்பலம் செல்வத்திடம் கோரிக்கை வைத்தனர்.

     அதன்படி மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.19 லட்சத்துக்கு 38 ஆயிரம் மதிப்பில் சீனிவாசா நகரில் சாலை அமைக்க சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஏற்பாடு செய்தார்.
    இதையடுத்து சாலை அமைப்பதற்கான பூமிபூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சபாநாயகர்  ஏம்பலம் செல்வம் தலைமை தாங்கி பூமிபூஜை செய்து  பணியை தொடங்கி  வைத்தார்.

    நிகழ்ச்சியின் போது  சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பொது மக்களிடம்  கூறியதாவது:-

     இப்பகுதியில்  மேலும் தார் சாலை மற்றும்  அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க அரசு நடவடிக்கை  எடுத்து வருகிறது. 100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்கள் கோரிக்கைக்கு இணங்க 100 நாட்களும் வேலை  வழங்கி  உடனுக்குடன் வேலை செய்த பணத்தை வழங்கவும் உயர் அதிகாரியிடம் பேசி நடவடிக்கை  எடுக்கப்படும். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரி காசிநாதன், உதவி பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர் சிவஞானம், பணி ஆய்வாளர் குப்புராமன், கிராம திட்ட ஊழியர் சங்கர் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் கிருஷ்ணமூர்த்தி சக்திவேல், புருஷோத்தமன், சங்கர், சுந்தரமூர்த்தி, ராஜா, செல்லவீரன், சுப்பிரமணியன், பாலு தணிகாசலம், முத்தமிழன், செல்வி, ஆனந்தி, லட்சுமி, கவுரி, சந்திரா, வித்யா, உட்பட  பலர் கலந்து கொண்டனர்.
    மின்வெட்டு குறித்த தகவல்களை முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிக்கவேண்டும் என கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
    புதுச்சேரி:


     புதுவை அரசு மின்துறை இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் நுகர்வோர் குறை கேட்கும் முகாம் நடைபெற்றது. இதில் தி.மு.க. துணை அமைப்பாளரும், உப்பளம், தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிபால் கென்னடி பங்கேற்றார்.

     இந் நிகழ்ச்சியில் இயக்குதல் மற்றும் பராமரித்தல் நகர செயற்பொறியாளர் கனியமுதன், உதவி செயற்பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் சுரேஷ், மற்றும் சரவணன், ஆகியோர் கலந்து கொண்டனர். 

    கூட்டத்தில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பேசும்போது, உப்பளம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மின் விளக்குகள் அமைத்தல் புது மின் இணைப்பில் உள்ள தாமதம், மின்வெட்டு, சமயங்களில் பொதுமக்களுக்கு முன்னதாகவே சமூகவலைத்தளங்கள் மூலம் தெரிவிக்கவேண்டும் என வலியுறுத்தினார்.  மேலும் மின் துறையை தனியார் மயமாக்குவதில் எங்களுக்கு ஈடுபாடு இல்லை என அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு தெரிவியுங்கள் என கேட்டுக்கொண்டார்.

    பின்னர் மின்துறை அதிகாரிகளுக்கு சால்வை அணிவித்து இதுவரை சமநிலையாக செயல்பட்டு வரும் அதிகாரிகளை கென்னடி எம்.எல்.ஏ. பாராட்டினார். 

    இதில் தொகுதி தி.மு.க. செயலாளர் சக்திவேல் அவை தலைவர் ரவி மாநில மீனவர் அணி அமைப்பாளர் தனசேகரன், கிளை செயலாளர் செல்வம், காலப்பன், விஷாலிங்கம், பீட்டர், குணசீலன், பாலாஜி, லாரன்ஸ், மோரிஸ், ரகுமான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    சப்தகிரி நகரில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை சம்பத் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை சப்தகிரி நகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வாய்க்கால் அமைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 

    இந்த நிலையில் சப்தகிரி நகரில் மழைநீர் தேங்காமல் வெளியேற ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.70 லட்சம் செலவில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது. இதனை சம்பத் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். 

    நிகழ்ச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட தலைமை செயல் அதிகாரி டாக்டர் அருண், இணை தலைமை செயல் அதிகாரி மாணிக்கதீபன், தலைமை தொழில்நுட்ப அதிகாரி ரவிச்சந்திரன், பொதுமேலாளர் மாணிக்கவாசகம் மற்றும் சப்தகிரி நகர் குடியிருப்பு நல்வாழ்வு சங்க தலைவர் சிவானந்தம், துணைத் தலைவர்கள் முனுசாமி மற்றும் குமார், செயலாளர் சோமு, துணை செயலாளர் சந்திரன், செயற்குழு உறுப் பினர்கள் பலராமன், சிவா, முத்துக்குமார் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
    ×