என் மலர்
புதுச்சேரி
தியாகி பென்சன் வழங்கக்கோரி பிரெஞ்சிந்திய விடுதலைக்கால இயக்கத்தினர் உண்ணா விரதம் இருந்தனர்.
புதுச்சேரி:
பிரெஞ்சு குடியுரிமை இழந்த புதுவை பூர்வீக குடிமக்களுக்கு மத்திய தியாகி பென்சன் வழங்கக் கோரி பிரெஞ்சிய இந்திய புதுவை பிரதேச விடுதலை கால மக்கள் நல நற்பணி இயக்கத்தினர் பல ஆண்டுகளாக மத்திய-மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் இக்கோரிக்கையை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களும் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பிரெஞ்சு குடியுரிமை இழந்தவர்களுக்கு உடனடியாக தியாகி பென்சன் வழங்கிட மத்திய-மாநில அரசுகளுக்கு நினைவூட்டும் வகையில் பிரெஞ்சிய இந்திய புதுவை பிரதேச விடுதலைகால மக்கள் நல நற்பணி இயக்கத்தினர் புதுவை காமராஜர் சாலையில் புதுவை சிவம் சிலை சதுக்கம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்துக்கு இயக்க துணைத்தலைவர் நடேசன் தலைமை தாங்கினார். உண்ணாவிரத போராட்டத்தை இயக்க நிறுவன தலைவர் சிவராஜ் தொடங்கி வைத்தார். முன்னதாக புதுவை சிவம் சிலை சதுக்கம் அருகே உள்ள புத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டன. மேலும் புதுவை சிவம் சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் இயக்க துணைத்தலைவர்கள் அருணாசலம், சுப்பிரமணி, புருசோத்தமன், ரகுராமன், பொதுச் செயலாளர் தீனதயாள ரெட்டியார், செயலாளர்கள் அருணகிரி, தம்பி ராஜேந்திரன், கண்ணையன், பிற்படுத்தப் பட்டோர் அணி கலியமூர்த்தி, தொழிலாளர் அணி அமைப் பாளர் பூபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரத போராட் டத்தில் பொதுச்செயலாளர் சதாசிவம்ரெட்டியார் தீமானங்கள் வாசித்தார். அதில் பிரெஞ்சு குடியுரிமை இழந்தவர்களுக்கு தியாகி பென்சன் வழங்க மத்திய அரசு ஆலோசனை வழங்கியும், புதுவை அரசு செவிசாய்க்காமல் உள்ளதற்கு கண்டனம் தெரிவிப்பது, வரும் காலங்களில் உண்மையான இதுபோன்ற தவறுகள் திருத்தப்பட்டு முறையான விசாரணை நடத்தி பிரெஞ்சு குடியுரிமை இழந்த தியாகிகளுக்கு கவர்னர் தமிழிசை பென்சன் வழங்கி மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் இன்ஸ்டியூஷன் ஆப் என்ஜினீயர்ஸ், புதுவை மையம் இணைந்து உலக தண்ணீர் தினம் விழா கொண்டாடப்பட்டது.
மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுகுமாறன் மற்றும் செயலாளர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வர் வெங்கடாசலபதி வரவேற்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் புதுவை சுற்றுச்சூழல் பொறியாளர் காளமேகம் மற்றும் மேற் பார்வை பொறியாளர் சாய் சுப்ரமணியம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும் கல்லூரியின் பதிவாளர் அப்பாஸ் மொய்தீன் கலந்து கொண்டார்.
பற்பசை என நினைத்து எலி மருந்தில் பல்துலக்கிய முதியவர் பலியானார்.
புதுச்சேரி:
புதுவை தட்டாஞ்சாவடி நவசக்திநகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சம்பந்தம் (வயது75). தச்சு வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரத்தினம்மாள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
மனைவி மீது பாசம் கொண்ட சம்பந்தம் திடீரென மனைவி இறந்ததால் துக்கத்தை மறக்க மது குடிக்க தொடங்கினார். பின்னர் அவர் மது போதைக்கு அடிமையானார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று சம்பந்தம் குடிபோதையில் பற்பசை என்று நினைத்து எலி மருந்தில் பல் துலக்கினார். பின்பு இதுபற்றி தெரியவரவே சம்பந்தம் இதுகுறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்தார். உடனே அவரது மகன் மற்றும் மருமகள் ஆகியோர் சிகிச்சைக்காக கதிர்காமம் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிததும் பலனின்றி சம்பந்தம் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது மகன் மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வில்லியனூர் அருகே சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே கரிக்கலாம்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர்.
அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுக் கொண்டிருந்த 3 வாலிபர்களை பிடித்து சோதனை நடத்தினர். அவர்களின் சட்டபையில் சிறுசிறு பொட்டலங்களாக 20 பாக்கெட் கஞ்சா வைத்திருந்தனர். மொத்தம் 170 கிராம் கஞ்சா அவர்களிடமிருந்தது. இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் கரிக்கலாம்பாக்கம்-மடுகரை மெயின் ரோட்டை சேர்ந்த ராஜேஷ்(வயது28), கரிக்கலாம்பாக்கம் புதுவாட்டர் டேங்க் தெருவை சேர்ந்த விக்கி(28) மற்றும் மேட்டுப்பாளையம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த ஸ்டீபன் (38) என்பதும் இவர்கள் அப்பகுதியில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா விற்று வந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து
கஞ்சா பொட்டலங்கள், கஞ்சா விற்பனை பணம் ரூ-.3 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி பாரதி வீதி காமாட்சியம்மன் கோவில் விழா பந்தல் சரிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 தொழிலாளர்கள் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுச்சேரி பாரதி வீதியில் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா நடத்தப்படுவது வழக்கம். கொரோனா காலத்தின் போது இந்த விழா நடத்தப்படவில்லை. தற்போது கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்ட நிலையில் இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா நடத்த திட்டமிடப்பட்டது.
இதற்காக கடந்த 16-ந் தேதி பந்தக்கால் நாட்டப்பட்டது. வருகிற 7-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழுவை சேர்ந்த நிர்வாகிகள் மேற்கொண்டு வந்தனர்.
இதையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலில் பந்தல் அமைக்கும் பணி கதிர்காமம் பகுதியை சேர்ந்த மணி மேற்பார்வையில் தொடங்கியது. நேற்று பாரதி வீதி-காமாட்சியம்மன் கோவில் வீதி சந்திப்பில் பந்தல் அமைக்கும் பணியில் மணியின் மகன் ராஜ்குமார் என்கிற வேலு (வயது33), தொழிலாளர்கள் பூரணாங்குப்பம் லட்சுமணன் (40), உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்த முத்துலிங்கம் (38), சீர்காழி அருகே உள்ள வள்ளுவன்குடியை சேர்ந்த ஆறுமுகம் (60), சக்திவேல், காந்தி, செல்வம் ஆகியோர் ஈடுபட்டு இருந்தனர்.
சுமார் 30 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட பந்தலில் வேலு, ஆறுமுகம், லட்சுமணன், முத்துலிங்கம் ஆகியோர் அமர்ந்து ஓலையை கட்டிக்கொண்டு இருந்தனர். கீழே நின்றபடி தேவையான பொருட்களை சக்திவேல், காந்தி, செல்வம் ஆகியோர் எடுத்து கொடுத்தனர்.
அப்போது திடீரென ஒரு பக்கம் பந்தல் சரிந்து விழத்தொடங்கியது. உடனே பந்தல் மேல் அமர்ந்திருந்தவர்களும், கீழே நின்றவர்களும் உதவி கேட்டு அபயக்குரல் எழுப்பினார்கள். ஆனால் அதற்குள் சரிந்து விழுந்ததில் பந்தல் மேல் அமர்ந்திருந்த வேலு, ஆறுமுகம், லட்சுமணன், முத்துலிங்கம் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு ஆட்டோவில் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் வேலு, ஆறுமுகம் ஆகியோர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். படுகாயமடைந்த தொழிலாளர்கள் முத்துலிங்கம், லட்சுமணன் ஆகியோர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நடுரோட்டில் பந்தல் சரிந்து விழுந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அந்த பந்தலை அப்புறப் படுத்தினர். தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு நேரமாக பந்தல் கம்புகள் அப்புறப்படுத்தப்பட்டன. அதன்பின் அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.
இதுகுறித்து பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
கோவில் பிரம்மோற்சவ விழாவுக்காக பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 2 பேர் பலியான சம்பவம் நகரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
புதுச்சேரி பாரதி வீதியில் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா நடத்தப்படுவது வழக்கம். கொரோனா காலத்தின் போது இந்த விழா நடத்தப்படவில்லை. தற்போது கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்ட நிலையில் இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா நடத்த திட்டமிடப்பட்டது.
இதற்காக கடந்த 16-ந் தேதி பந்தக்கால் நாட்டப்பட்டது. வருகிற 7-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழுவை சேர்ந்த நிர்வாகிகள் மேற்கொண்டு வந்தனர்.
இதையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலில் பந்தல் அமைக்கும் பணி கதிர்காமம் பகுதியை சேர்ந்த மணி மேற்பார்வையில் தொடங்கியது. நேற்று பாரதி வீதி-காமாட்சியம்மன் கோவில் வீதி சந்திப்பில் பந்தல் அமைக்கும் பணியில் மணியின் மகன் ராஜ்குமார் என்கிற வேலு (வயது33), தொழிலாளர்கள் பூரணாங்குப்பம் லட்சுமணன் (40), உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்த முத்துலிங்கம் (38), சீர்காழி அருகே உள்ள வள்ளுவன்குடியை சேர்ந்த ஆறுமுகம் (60), சக்திவேல், காந்தி, செல்வம் ஆகியோர் ஈடுபட்டு இருந்தனர்.
சுமார் 30 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட பந்தலில் வேலு, ஆறுமுகம், லட்சுமணன், முத்துலிங்கம் ஆகியோர் அமர்ந்து ஓலையை கட்டிக்கொண்டு இருந்தனர். கீழே நின்றபடி தேவையான பொருட்களை சக்திவேல், காந்தி, செல்வம் ஆகியோர் எடுத்து கொடுத்தனர்.
அப்போது திடீரென ஒரு பக்கம் பந்தல் சரிந்து விழத்தொடங்கியது. உடனே பந்தல் மேல் அமர்ந்திருந்தவர்களும், கீழே நின்றவர்களும் உதவி கேட்டு அபயக்குரல் எழுப்பினார்கள். ஆனால் அதற்குள் சரிந்து விழுந்ததில் பந்தல் மேல் அமர்ந்திருந்த வேலு, ஆறுமுகம், லட்சுமணன், முத்துலிங்கம் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு ஆட்டோவில் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் வேலு, ஆறுமுகம் ஆகியோர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். படுகாயமடைந்த தொழிலாளர்கள் முத்துலிங்கம், லட்சுமணன் ஆகியோர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நடுரோட்டில் பந்தல் சரிந்து விழுந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அந்த பந்தலை அப்புறப் படுத்தினர். தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு நேரமாக பந்தல் கம்புகள் அப்புறப்படுத்தப்பட்டன. அதன்பின் அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.
இதுகுறித்து பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
கோவில் பிரம்மோற்சவ விழாவுக்காக பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 2 பேர் பலியான சம்பவம் நகரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
ஊழல் குற்றச்சாட்டு கூறினால் சொத்து கணக்கு கேட்டு மிரட்டுவதா? என நாராயணசாமி ஆவேசமாக பேசினார்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடகஅரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவோம் என தொடர்ந்து கூறி வருகிறது. கடந்த பட்ஜெட்டில் அணை கட்ட ரூ.ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்னர்.
தமிழக அரசு இதை கண்டித்து, மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
ஆனால் புதுவை அரசு இதை வேடிக்கை பார்த்து வருகிறது. வரும் சட்டமன்ற கூட்டத்தில் மேகதாதுவில் அணைகட்டுவதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் மத்திய, கர்நாடக பா.ஜனதா அரசிடம் புதுவை அரசு சரணாகதி அடைந்ததாக கருதப்படும்.
ரங்கசாமி தலைமையில் அரசு அமையும்போதெல்லாம் புதுவையில் ரவுடிகள் அட்டகாசம் தொடங்கிவிடும். இப்போதும் போலி பத்திரம் தயாரித்து வீடு, நிலம் அபகரிப்பது சர்வ சாதாரணமாக மாறியுள்ளது.
குண்டுகள் வீசப்படுகிறது. முதல்-அமைச்சர் அலுவலகம் முதல் அனைத்து அலுவலகங்களிலும் புரோக்கர்கள் பேரம் பேசுகின்றனர்.
பொதுப்பணித்துறையில் பணிகளுக்கு கமிஷன் பெறப்படுகிறது. இந்த அரசு ஊழலில் திளைத்துள்ளது. பள்ளி, கோவில்களுக்கு அருகில் மதுபான கடை அமைக்க ரூ.10 லட்சம் பேரம் பேசப்படுகிறது.
இவற்றை எடுத்துக் கூறினால் நாராயணசாமி சொத்து கணக்கை காட்டுவாரா? என கேள்வி எழுப்புகின்றனர்.
நான் ஏற்கனவே தேர்தலில் போட்டியிடும்போது என் சொத்துக்கணக்கை தேர்தல் துறையில் சமர்பித்துள்ளேன். வருமான வரித்துறையில் வரி கட்டுகிறேன்.
எனவே சொத்துக் கணக்கை யார் வேண்டுமானாலும் பெற முடியும். என் சொத்து அதிகரித்துள்ளதா? இல்லையா? என தெரிந்து கொள்ளலாம். இதுபோல பல மிரட்டல்களை சந்தித்துள்ளோம்.
இதற்கெல்லாம் பயப்படமாட்டோம். சிறிய மாநிலமான புதுவையில் யார் என்ன வேலை செய்கிறார்கள்? என மக்களுக்கு தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மதகடிப்பட்டில் 4 வழி சாலை பணிக்கு கோவிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.
புதுச்சேரி:
விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையே தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் 4 வழி சாலை பணி நடைபெற்று வருகிறது.
இந்தப் பணியின் போது சாலை அருகே உள்ள மரங்கள் மற்றும் கட்டிடங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதுவை-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மதகடிப்பட்டு பகுதியில் சாலையின் நடுவே அரசமரத்துடன் ஏழை முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலை 4 வழி சாலை பணிக்காக அகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு ஜே.சி.பி. எந்திரத்துடன் வந்தனர்.
இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து கோவிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது பற்றி அறிந்ததும் திருபுவனை போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் அஜய் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அங்கு அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின் போது பொதுமக்கள் இந்தக் கோவிலை அகற்றினால் வேறு இடத்தில் பொதுமக்கள் வழிபடும் வகையில் புதிய கோவிலை அமைத்து தர வேண்டும் என்று முறையிட்டனர்.
தொடர்ந்து போலீசார் பொதுமக்களிடம் இதுகுறித்து தாசில்தாரிடம் எழுத்துப்பூர்வமாக மனு அளித்து தங்கள் கோரிக்கையை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.
அதற்கு பொதுமக்கள் ஒரு மாதம் கால அவகாசம் கேட்டனர். ஆனால் அதிகாரிகள் இதனை ஏற்கவில்லை.
இதனால் பொது மக்களுக்கும் அதி காரிகள் மற்றும் போலீசாருக்கு மிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பதட்டமான சூழ்நிலை உருவானது.
பின்னர் அதிகாரிகள் பொதுமக்களின் ஆவே சத்தை கண்டு கோவிலை அகற்றாமல் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத் தினால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தேசிய மகளிரணி நிர்வாகிகள் கூட்டம் புதுவையில் நடைபெற்றது.
புதுச்சேரி:
அகில இந்திய அளவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான அனைத்து மாநிலங்களை சேர்ந்த பா.ஜனதா மகளிரணி தலைவிகள், செயலாளர், பொருளாளர் ஆகியோர் புதுவைக்கு வந்திருந்தனர்.
ஓட்டல் அக்கார்டில் கருத்தரங்கு அறையில் பா.ஜனதா மகளிரணி தலைவிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் தலைமை வகித்தார்.
மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், புதுவை மகளிரணி பொறுப்பாளர் வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. புதுவை மாநில மகளிரணி ஜெயலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் 4 மாநிலத்தில் பா.ஜனதா வெற்றி பெற காரணமான பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா, கட்சித்தலைவர் நட்டா ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து மத்தியிலும், மாநிலத்திலும் மகளிருக்காக பா.ஜனதா செயல்படுத்தும் திட்டங்கள் குறித்தும், புதிதாக பரிந்துரைக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
காலதாமதப்படுத்தாமல் புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:
புதுவையில் துரதிர்ஷ்டவசமாக 11 ஆண்டாக உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை.
அடித்தட்டு மக்களுக்கும் அதிகாரம் என்பது காந்தி கண்ட கனவாகும். அதை ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சட்டம் மூலம் நிறைவேற்றினார்.
நீதிமன்ற வழக்குகள் காரணமாக புதுவையில் தேர்தல் நடைபெறாமல் உள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருகிறது.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கி தேர்தலை இனியும் காலதாமதம் செய்யாமல் நடத்த வேண்டும்.
என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா அரசு அமைந்து 10 மாதத்தில் பிற்படுத்தப்பட்டோர் புள்ளிவிபரத்தை சேகரித்திருக்கலாம். இதற்கு மேலும் காலதாமதப்படுத்துவது என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா அரசின் திட்டமிட்ட சதியாகும்.
உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் மத்தியிலிருந்து நிதி வராமல் உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேற்கு மாநில அ.தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு நீர் மோர் பந்தலை ஓம்சக்தி சேகர் திறந்து வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை மேற்கு மாநில அ.தி.மு.க. சார்பில் பொதுமக்கள் நலனுக்காக நீர்- மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
குயவர்பாளையம் லெனின் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் பொதுமக்களுக்கு மோர், இளநீர், தர்பூசணி, வெள்ளரி பழம், பழச்சாறு உள்ளிட்ட பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவைத் தலைவர் பேராசிரியர் ராமதாஸ், இணை செயலாளர் காசிநாதன், துணை தலைவர்கள் நந்தன், ஆனந்தன், துணை செயலாளர்கள் சதாசிவம், நாகமணி, கோவிந்தம்மாள், கணேசன்.
அணி செயலாளர்கள் மலை.செல்வராஜ், விக்னேஷ், லட்சுமணன், முருகன், புகழ்பாரி, மாசிலா குப்புசாமி, தொகுதி செயலாளர்கள் வெங்கடேசன், கமல்தாஸ், கோபால், வேலவன், இருசப்பன், ராதாகிருஷ்ண உடையார், தம்பா, அறிவு, பிரபு, சேகர், சிவா, அந்தோணிராஜ், ரமேஷ் ஆசாரி, சுரேஷ்பாபு, சரவணன், ஜெய், வேலாயுதம், சேகர், கண்ணையன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஓம்சக்தி சேகர் பேசும்போது, ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு சேவை செய்யும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. மட்டுமே. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் உத்தரவுப்படி மேற்கு மாநில அ.தி.மு.க. சார்பில் நீர் மோர் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
மேற்கு மாநிலம் உட்பட்ட அனைத்து தொகுதிகளிலும் பொதுமக்கள் தாகம் தீர்க்க அ.தி.மு.க. சார்பில் நீர், மோர் பந்தல் அமைக்கப்படும் என்றார்.
அரியாங்குப்பம் மேற்கு வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியலை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் வெளியிட்டார்.
புதுச்சேரி:
காங்கிரஸ் கட்சியின் பி.சி.சி. உறுப்பினர்களாக தேங்காய்த்திட்டு தொழிலதிபர் செந்தில்குமார், வாசுவெங்கடாசலம், ஞான பிரகாசம், தட்சணாமூர்த்தி, அருளசன் ஆகியோரும், தெற்கு மாவட்ட துணைத் தலைவராக செல்வம் என்ற செல்வராஜ், பொதுச் செயலாளராக ரஷியா என்ற ராஜரத்தினம், செயலாளராக சங்கர் என்ற சுந்தரமூர்த்தி, சேவாதள சேர்மனாக ரங்கநாதன், வார்டு தலைவர்களாக முருங்கப்பாக்கம் நாராயண சாமி, தேங்காய்த்திட்டு கோபால்சாமி, ஊடகப்பிரிவு தலைவராக தமிழரசன், எஸ்.சி.பிரிவு தலைவராக விஜயன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அரியாங்குப்பம் மேற்கு வட்டார காங்கிரஸ் துணைத்தலைவர்களாக கிருஷ்ணன், கருணாநிதி, கணேசன், மூர்த்தி, பொருளாளராக ஏழுமலை, பொதுச்செயலாளர்களாக குமரன், சங்கர்ரெட்டியார், மோகன், இருசப்பன், அய்யப்பன், ரவிராஜ், சந்திரசேகர், மாயவன், செயலாளர்களாக கலாநிதி, வேல்முருகன், வேலுச்சாமி, சுதாமா, சையது இரியாஷ், மணிமாறன், கலையரசன், பாண்டியன், சிவபிரகாசம், அன்பரசன், பாலசுப்பிரமணி, வாசுதேவன், ஜெயராமன், காளிதாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் சங்கர் பரிந்துரையின் பேரில் மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் நியமித்துள்ளார்.
தவளக்குப்பத்தில் லாட்டரி சீட்டு விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
தவளக்குப்பம் அருகே பூரணாங்குப்பம் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் அருகில் லாட்டரி சீட்டு விற்பதாக தவளக்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது லாட்டரி சீட்டு விற்பனை செய்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பூரணாங் குப்பத்தை சேர்ந்த ரமேஷ், வாழ்முனி, தவளக்குப்பம் பகுதியை சேர்ந்த அன்பழகன், ராமானுஜம் ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 4 செல்போன் மற்றும் ரூ.1600 ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.
இதுபோல் லாஸ்பேட்டை சாந்திநகரில் ரேணுகாம்பாள் கோவில் அருகே 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர்.
அப்போது அங்கு செல்போன் மூலம் வாடிக்கையாளர் களுக்கு 3 நம்பர் லாட்டரி சீட்டுக்கள் விற்ற ஒருவரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர் லாஸ்பேட்டை ஆனந்தாநகர் விநாயகர்கோவில் தெருவை சேர்ந்த திருஞானசம்பந்தம் (வயது42) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 3 நம்பர் லாட்டரி சீட்டுகள் மற்றும் செல்போன், லாட்டரி விற்பனை பணம் ரூ.11 ஆயிரத்து 900 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.






