என் மலர்
உள்ளூர் செய்திகள்

பா.ஜனதா மாநில மகளிரணி தலைவிகள் கூட்டத்தில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பேசிய காட்சி.
பா.ஜனதா மாநில மகளிரணி தலைவிகள் கூட்டம்
தேசிய மகளிரணி நிர்வாகிகள் கூட்டம் புதுவையில் நடைபெற்றது.
புதுச்சேரி:
அகில இந்திய அளவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான அனைத்து மாநிலங்களை சேர்ந்த பா.ஜனதா மகளிரணி தலைவிகள், செயலாளர், பொருளாளர் ஆகியோர் புதுவைக்கு வந்திருந்தனர்.
ஓட்டல் அக்கார்டில் கருத்தரங்கு அறையில் பா.ஜனதா மகளிரணி தலைவிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் தலைமை வகித்தார்.
மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், புதுவை மகளிரணி பொறுப்பாளர் வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. புதுவை மாநில மகளிரணி ஜெயலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் 4 மாநிலத்தில் பா.ஜனதா வெற்றி பெற காரணமான பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா, கட்சித்தலைவர் நட்டா ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து மத்தியிலும், மாநிலத்திலும் மகளிருக்காக பா.ஜனதா செயல்படுத்தும் திட்டங்கள் குறித்தும், புதிதாக பரிந்துரைக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
Next Story






