என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் கைது

    தவளக்குப்பத்தில் லாட்டரி சீட்டு விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    தவளக்குப்பம் அருகே பூரணாங்குப்பம் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் அருகில் லாட்டரி சீட்டு விற்பதாக தவளக்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

    அதன்படி அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது லாட்டரி சீட்டு விற்பனை செய்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பூரணாங் குப்பத்தை சேர்ந்த ரமேஷ், வாழ்முனி, தவளக்குப்பம் பகுதியை சேர்ந்த அன்பழகன், ராமானுஜம் ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 4 செல்போன் மற்றும் ரூ.1600 ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.

    இதுபோல் லாஸ்பேட்டை சாந்திநகரில் ரேணுகாம்பாள் கோவில் அருகே 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர்.

    அப்போது அங்கு செல்போன் மூலம் வாடிக்கையாளர் களுக்கு 3 நம்பர் லாட்டரி சீட்டுக்கள் விற்ற ஒருவரை மடக்கி பிடித்தனர். 

    விசாரணையில் அவர் லாஸ்பேட்டை ஆனந்தாநகர் விநாயகர்கோவில் தெருவை சேர்ந்த திருஞானசம்பந்தம் (வயது42) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 3 நம்பர் லாட்டரி சீட்டுகள் மற்றும் செல்போன், லாட்டரி விற்பனை பணம் ரூ.11 ஆயிரத்து 900 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×