என் மலர்
உள்ளூர் செய்திகள்

லாரியில் சாராய பாக்கெட்டுகளை கடத்திய 2 பேரை படத்தில் காணலாம்.
கோவில் திருவிழாவில் அதிக விலைக்கு விற்க லாரியில் சாராய பாக்கெட்டுகளை கடத்திய 2 பேர் கைது
அதிக விலைக்கு விற்பதற்காக லாரியில் சாராய பாக்கெட்டுகளை கடத்தி சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
கோட்டக்குப்பத்தை அடுத்த அனிச்சகுப்பம் மதுவிலக்கு சோதனை சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்ஜோசப் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுவையில் இருந்து மரக்காணம் நோக்கி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 490 சாராய பாக்கெட்டுகள் இருந்தன.
அதனை பறிமுதல் செய்து போலீசார் லாரியில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் காலாப்பட்டு கனகசெட்டிகுளத்தை சேர்ந்த கதிரேசன், கங்காதரன் என்பதும், இவர்கள் புதுவை பகுதியில் உள்ள சாராய கடையில் சாராய பாக்கெட்டுகளை வாங்கி தமிழக பகுதியில் கோவில் திருவிழாவில் விற்பனை செய்ய கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story






