என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்தில் சிக்கி சேதமான சொகுசு பஸ்.
    X
    விபத்தில் சிக்கி சேதமான சொகுசு பஸ்.

    தவளக்குப்பம் அருகே பஸ்கள் நேருக்கு நேர் மோதல்- 10 பேர் காயம்

    தவளக்குப்பம் அருகே பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை அரசு பஸ் இன்று மதியம் பயணிகளை ஏற்றிக்கொண்டு புதுக்குப்பத்தில் இருந்து புதுவை நோக்கி சென்று கொண்டிருந்தது. பூரணாங்குப்பம் பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி- இறக்கிக்கொண்டு இருந்தது. அப்போது, கடலூரில் இருந்து புதுவை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் சொகுசு பஸ் எதிர்பாராதவிதமாக நின்று கொண்டிருந்த அரசு பஸ்சின் பின்புறத்தில் மோதியது. 

    இந்த விபத்தில் 2 பஸ்களிலும் பயணம் செய்த 10 பயணிகள் படுகாயமடைந்தனர். இதையடுத்து அங்கு இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் 4 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

    இந்த விபத்தில் தனியார் சொகுசு பஸ்சின் முன்பகுதி முற்றிலும் சேதமானது. இதுகுறித்த தகவலின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார்  விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×