என் மலர்
புதுச்சேரி
ஸ்மார்ட் சிட்டி பணிகளை குடிசைமாற்று வாரியம் மூலம் செயல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி:
புதுவை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை குடிசை மாற்று வாரிய ஊழியர்களுக்கு 9 மாத சம்பளம் வழங்கப்படாததால் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கல்வீடு கட்ட மானியத்தை உயர்த்திய அரசுக்கு சம்பள மின்றி, ஊழியர்களின் வாழ்வாதாரம் எப்படி இருக்கும் என்பதை கருத்தில் கொள்ள முடியவில்லையா?
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நகர பகுதிகளில் மேற்கொள்ள இருக்கும் பணிகளை 50 ஆண்டு அனுபவம் உள்ள வாரியத்தின் மூலம் செயல்படுத்த வேண்டும். வாரியத்தில் அனுபவம் உள்ள பொறியாளர்கள் மற்றும் ஊழியர்களை ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் ஈடுபடுத்தி, குடிசை மாற்று ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. அறிக்கையில் கூறியுள்ளார்.
ஐதராபாத் - புதுச்சேரி- பெங்களூரு விமான சேவை நாளை மறுநாள் தொடங்குகிறது. பயணிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி வரவேற்கிறார்.
புதுச்சேரி:
புதுவை சுற்றுலாத்துறை இயக்குனர் பிரியதர்ஷினி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசு சுற்றுலாத் துறையின் தொடர் முயற்சியினாலும், முதல்-அமைச்சர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரின் வலியுறுத்தலாலும் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் ஆதரவாலும் ஐதராபாத்- புதுச்சேரி - பெங்களூரு இடையே விமானப் போக்குவரத்து சேவை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 1 மணிக்கு புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து மீண்டும் தொடங்கப்படுகிறது.
விமான போக்குவரத்து சேவையை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. ஐதராபாத்- புதுச்சேரி இடையே மீண்டும் தொடங்கப்படும் விமான சேவையில் புதுச்சேரிக்கு வரும் முதல் விமான பயணிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி பூச்செண்டு மற்றும் இனிப்பு கொடுத்து வரவேற்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், சுற்றுலாத்துறை செயலாளர் அருண் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
இதன்படி நண்பகல் 12.05 மணிக்கு ஐதராபாத்தில் இருந்து புறப்படும் விமானம் புதுச்சேரிக்கு மதியம் 1.30 மணிக்கு வருகிறது. புதுச்சேரியில் இருந்து 1.50 மணிக்கு புறப்பட்டு 2.50 மணிக்கு பெங்களூருவை அடைகிறது. பெங்களூருவில் இருந்து 3.20 மணிக்கு புறப்பட்டு மாலை 4.10 மணிக்கு புதுச்சேரியை அடைகிறது. பின்னர் புதுச் சேரியில் இருந்து 4.30 மணிக்கு புறப்பட்டு 6.15 மணிக்கு ஐதராபாத்தை சென்றடைகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி சொத்து கணக்கை காட்ட தயாரா? என பா.ஜனதா தலைவர் சாமிநாதன் சவால் விடுத்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அகில பாரத பா.ஜனதா மகளிர் நிர்வாகிகள் கூட்டம் (சனிக்கிழமை) ஓட்டல் அக்கார்டில் நடக்கிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான மகளிரணி தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
இதையொட்டி காமராஜர் சிலை அருகில் இருந்து மகளிர் பேரணி நடக்கிறது. இந்த பேரணி கம்பன் கலையரங்கில் முடிவடையும்.
அங்கு முன்கள பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களும் கவுரவிக்கப்படுவர். பா.ஜனதா தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் விருதுகள் வழங்குகிறார்.
நாடு முழுவதும் உள்ள பா.ஜனதா மகளிரணியை வலுப்படுத்தும் நோக்கில் கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது. புதுவையில் இந்த கூட்டத்தை நடத்த அனுமதி வழங்கிய பிரதமர் மோடி, தேசிய தலைவர் நட்டா ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
பா.ஜனதா தேசிய அமைப்பு செயலாளர் சந்தோஷ்ஜி புதுவை வருகிறார். அவர் தலைமையில் மாலை 5 மணிக்கி கட்சி தலைமை அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது.
காந்தி, சுபாஷ்சந்திரபோஸ் கண்ட கனவை பா.ஜனதா ஆட்சியில் நிறைவேற்றி வருகிறோம். ஊழலற்ற நிர்வாகத்தை நாடு முழுவதும் தருகிறோம். இதனால்தான் கருத்து கணிப்புகளை மீறி 5 மாநில தேர்தலில் பா.ஜனதா 4 மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளது. புதுவையில் காவல்துறைக்கு நேர்மையான முறையில் காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
50 ஆண்டாக பின்தங்கியிருந்த புதுவை 10 மாதங்களில் பெஸ்ட் புதுவையாகிவிட முடியாது. 5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்யும்போதுதான் புதுவையின் வளர்ச்சி கண்ணுக்கு தெரியும். முஸ்லிம் லீக் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள தி.மு.க.வுக்கு பா.ஜனதா பற்றி விமர்சிக்க தகுதியில்லை.
முன்னாள் முதல் -அமைச்சர் நாராயணசாமி தனது சொத்து கணக்கை காட்ட தயாராக உள்ளாரா? பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் சொத்து கணக்கை காட்ட தயார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அரவிந்தர் ஆசிரம கேண்டீனுக்குள் கத்தியுடன் நுழைந்த மர்ம பெண்ணை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவை அரவிந்தர் ஆசிரமத்தின் உணவு விடுதி (கேண்டீன்) புதுவை ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள தலைமை தபால் நிலையம் அருகில் உள்ளது.
இங்கு ஆசிரமவாசிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆசிரமத்திற்கு வருபவர்கள் உணவு அருந்துவது வழக்கம்.
இந்த நிலையில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கையில் கத்தியுடன் ஆசிரம கேன்டீனுக்குள் நுழைந்தார்.
இதனை கண்டதும் கேன்டீனுக்குள் இருந்த ஆசிரமவாசிகள் அச்சமடைந் தனர். அந்த பெண் நாக்கை ஆக்ரோஷமாக நீட்டி, கண்களை உருட்டி மிரட்டியதால் அனைவரும் பயத்தில் உறைந்து போய் நாலாபுறம் சிதறி ஓடினர்.
இதுகுறித்து பெரியக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அந்த பெண்ணிடமிருந்த கத்தியை கீழே போடும்படி போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் அந்த பெண் கோபமாக காணப்பட்டதால் போலீசாருக்கு அந்த பெண்ணை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
பின்னர் பின்புறமாக சென்று அந்த பெண்ணை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு நடத்திய விசாரணையில் அவர் மனநிலை பாதிக்கப் பட்ட பெண் என்பது தெரியவந்தது. போலீஸ் நிலையத்தில் அந்த பெண் கடவுள்களின் பெயரை கூறி, அவர்கள் தன்னை அழைப்பதாக தெரிவித்தார்.
இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண்ணின்
உறவினர்கள் வம்பாகீரப் பாளையம் பகுதியில் இருப்பதாக தெரிய வந்தது. இதனையடுத்து அந்த பெண்ணை போலீசார் பத்திரமாக அழைத்து சென்று உறவினர்களிடம் ஒப்படைத்தனர். கத்தியுடன் பெண் ஆசிரமத்திற்குள் நுழைந்த சம்பவம் ஆசிரமவாசிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
கிருமாம்பாக்கம் அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வண்ணான் குளம் பகுதியில் சென்றபோது, அங்குள்ள ஒரு வீட்டில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (38) கந்தன் என்ற கந்தசாமி (33) சுபாஷ் (23) என்பது தெரிய வந்தது.
இதைதொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 6 ஆயிரத்து 300 ரொக்க பணம் மற்றும் சீட்டுக் கட்டுகளை பறிமுதல் செய்தனர்.
தனியார் ஆலை தொழிலாளர்கள் குடும்பத்துடன் பேரணி நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவை தொண்டமாநத்தம் துத்திப்பட்டு கிராமத்தில் தனியார் கண்ணாடி தொழிற்சாலை இயங்கி வந்தது.
20 மாதத்துக்கு முன்பு தொழிலாளர்களை வெளியேற்றிவிட்டு ஆலையை மூடியது. பின்னர் வெளிமாநில தொழிலாளர்களால் ஆலை
ந டத்தப்பட்டு வருகிறது.
இதை கண்டித்து தொழிலாளர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகினற்னர். ஆனால் தொழிற்சாலை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கவில்லை.
இதை கண்டித்து சி.ஐ.டி.யூ. மாநில தலைவர் முருகன், செயலாளர் சீனுவாசன் தலைமையில் தொழிலாளர்கள், குடும்பத் தினருடன் ஊர்வலமாக கவர்னர் மாளிகை நோக்கி வந்தனர்.
அப்போது கோரிக்கை களை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். அவர்களை போலீசார் ஆம்பூர் சாலை அருகே தடுத்து நிறுத்தினர். பின்னர் முக்கிய நிர்வாகிகள் கவர்னர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
சொர்ணவாரி விவசாயிகளுக்கு ரூ.1 கோடி உற்பத்தி மானியம் வங்கியில் செலுத்தப்பட்டது என்று அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை வேளாண் துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சொர்ணவாரி பருவத்தில் நெல்சாகுபடி செய்யாமல் நவரை பருவத்தில் சாகுபடி செய்த ஆயிரத்து 208 பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு உற்பத்தி மானியமாக ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வீதம் 2 ஆயிரத்து 58 ஏக்கருக்கு ரூ.1 கோடியே 2 லட்சத்து 90 ஆயிரம் அவர் களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
அதேபோல 156 புதுவை அட்டவணை விவசாயிகளுக்கு உற்பத்தி மானியமாக ஏக்கருக்கு ரூ.6 ஆயிரம் வீதம் 214 ஏக்கருக்கு ரூ.12 லட்சத்து 87 ஆயிரம் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
2020-21-ம் ஆண்டு சம்பா பருவத்தில் விதை நெல் உற்பத்தி செய்து விவசாயத்துறைக்கு வழங்கிய 33 விவசாயிகளுக்கு ரூ.7 லட்சத்து 52 ஆயிரத்து 640 அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
2020-21-ம் ஆண்டு சம்பா மணிலா, பயிறு வகைகள், எள், சிறுதானியங்கள், பருத்தி சாகுபடி செய்த 80 அட்டவணை விவசாயிகளுக்கு உற்பத்தி மானிய மாக ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது. கரும்பு சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம், சொர்ணவாரியில் நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் விரைவில் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கிருமாம்பாக்கத்தில் மனைவியை சரமாரியாக வெட்டிய 2-வது கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் பிள்ளையார்கோவில் வீதியைச் சேர்ந்தவர் அனுசு (வயது38). இவரது 2-வது கணவர் பரிதாபி (வயது 48). இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 18-ந் தேதி பிள்ளையார்குப்பம் முருகன் கோவில் திருவிழாவுக்கு கணவன்-மனைவி இருவரும் சென்றனர்.
அங்கு அனுசுவின் முதல் கணவனுக்கு பிறந்த மகன் தேர் இழுத்துக் கொண்டு வந்துள்ளார். அதற்கு அனுசு உதவி செய்தார். இதனை பரிதாபி கண்டித்தார். பின்னர் இருவரும் வீடு திரும்பினர். அப்போது இது சம்பந்தமாக கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த பரிதாபி அங்கு வைத்தி ருந்த அரிவாளை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டார். இதில் அனுசுக்கு தலை மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் சுண்டு விரலும் துண்டானது.
படுகாயம் அடைந்த அனுசு புதுவை அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சை பெற்று பின்னர் கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பரிதாபியை தேடி வருகின்றனர்
அரியூரில் மேம்பால பணியை நிறுத்தக்கோரி பொதுமக்கள் மறியல் செய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை-விழுப்புரம், நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் 4 வழி சாலை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.
இதற்காக தென்னல் பகுதியில் இருந்து தமிழக பகுதியான கெங்கராம்பாளையம் வரை சாலையோரம் இருந்த கட்டிடங்கள், வீடுகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், கடைகள் முழுவதும் அகற்றப்பட்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.
இதற்கிடையே அரியூரில் உள்ள சர்க்கரை ஆலை எதிரில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த மேம்பால பணியால் அரியூர் அருகே உள்ள சிவராந்தகம், அனந்தபுரம், பங்கூர், பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே இப்பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணியினை நிறுத்தக்கோரி அப்பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஆண்கள், மற்றும் பெண்கள் ஒன்றுகூடி புதுவை-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அதனைத் தொடர்ந்து அரியூர்-அனந்தபுரம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த வில்லி யனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் அமைச்சர் ஜெயக்குமார் செல்போனில் தொடர்பு கொண்டு மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பொது மக்களின் இந்த திடீர் மறியல் போராட்டத்தால் அப்பகு
தியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அமைச்சர்கள்-எம்.எல்.ஏ.க்களுக்கு மரியாதை அளிக்காத காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபை செயலாளர் எச்சரித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபை செயலர் முனுசாமி சட்டசபை காவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
சட்டப்பேரவை வளாகத்தில் காவல் பணியில் உள்ள காவலர்கள் மற்றும் வாட்ச் அண்ட் வார்டுகள் பணி நேரங்களில் மொபைலில் பேசிக் கொண்டோ, பார்த்துக் கொண்டோ, தகவல் அனுப்பிக்கொண்டு பணிகள் செய்யாமல் இருப்பதை சட்டப்பேரவைத்தலைவர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவை செயலகத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.
சிலர் சீருடை, காலணி, தொப்பி, பேட்ஜ்கள் ஆகியவற்றை பணி நேரங்களில் அணியாமல் உள்ளனர். அத்துடன் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பேரவைக்குள் வரும் போது உரிய மரியாதையும் தருவதில்லை என்ற குற்றச் சாட்டு எழுந்துள்ளது.
கட்டுப்பாடு மிக்க காவல் பணியில் இக்குறைபாடுகள், குற்றச்சாட்டுகள் ஏற்புடைய தல்ல. அத்தகைய ஒழுக்க மற்ற செயல்களை சட்டப்பேரவைச் செயல கம் கண்டிக்கிறது.
முதல்-அமைச்சர், பேரவை தலைவர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வருகையின்போதும், வெளியே செல்லும்போதும் உரிய மரியாதையை தர வேண்டும்.
பணிநேரங்களில் செல்போனில் பேசுவது, தகவல் பரிமாறும் செயல்களில் ஈடுபடக்கூடாது. அடுத்த ஷிப்ட்டில் இருப்போர் வந்த பின்னர்தான் பணியிலிருந்து செல்லவேண்டும். குறிப்பிட்ட பணியிடத்தில் யாரும் இல்லாமல் இருக்கக்கூடாது.
பணி நேரங்களில் மற்ற பணியாளர்களுடன் தேவையற்ற முறையில் பேசிக்கொண்டிருக்க கூடாது. சீருடை, காலணி கள், தொப்பி, பேட்ஜ் ஆகியவற்றை முறையாக அணிந்து வரவேண்டும். பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். இந்த உத்தரவை மீறினால் துறைரீதியில் கடும் நட வடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் அருகில் உள்ள தாமரைப்பாக்கம் சர்வேஸ்வரா நகரிலுள்ள பண்ணை வீட்டில் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு நினைவு இல்லத்தை அவரது மகன் எஸ்.பி.பி.சரண் அமைத்து வருகிறார்.
புதுச்சேரி:
பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடந்த 2020-ல் காலமானார்.
அப்போது அவருக்கு வயது 74. உலகெங்கும் வாழும் இசை ரசிகர்கள் பலரும் அவரின் குரலுக்கு ரசிகர்கள்.
அவரது உடல் காஞ்சிபுரம் அருகில் உள்ள தாமரைப்பாக்கம் சர்வேஸ்வரா நகரிலுள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது பண்ணை வீட்டில் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு நினைவு இல்லத்தை அவரது மகன் எஸ்.பி.பி.சரண் அமைத்து வருகிறார்.
ஓராண்டாக நடக்கும் இப்பணி நிறைவடைய உள்ளது. இங்கு அமையும் சிலைகள் புதுவையை அடுத்த ஆரோவில் சஞ்சீவி நகர் பகுதியில் சிற்பக்கூடத்தில் உருவாகியுள்ளன.
இதுபற்றி சிற்பக்கூடத்தினர் கூறுகையில், ‘தாமரைப்பாக்கத்தில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நினைவு இல்லத்தில் ஓராண்டாக பணி நடந்து வருகிறது.
அங்கு ஏராளமான சிலைகள் வடிவமைத்துள்ளோம். அங்கு பாறையை குடைந்து எஸ்.பி. பாலசுப்பிரமணியம் முகத்தை வடிவமைக்க திட்டமிட்டோம். அதற்காக 6 டன் எடை கொண்ட பாறை திருவக்கரையில் பெறப்பட்டது.
6 மாதங்களாக இதற்காக பணி நடந்து வருகிறது. அவரது அழகிய உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உருவத்தின் அருகில் அவரது கையெழுத்து, அவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திரம் ஆகியவற்றை வடிவமைத்துள்ளோம்.
சிற்பி கருணாகரன் குமார் இதற்கான வடிவமைப்பை செய்து அவர் தலைமையில் 6 சிற்பிகள் இதை வடிவமைத்தோம். எஸ்.பி. பாலசுப்பிரமணியம் முகத்தின் கீழே அவர் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தையான ‘சர்வே ஜனாஸ்ஸு, ஜனா பவந்து, ஸர்வேசு ஜனா சுகினோ பவன்’ என்ற மந்திரத்தையும் எழுதியுள்ளோம்.
இப்பணிகள் முடிவடைந்து பாறை தாமரைப்பாக்கம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு இதை பொருத்தும் பணிகள் நடக்க உள்ளது’ என்றனர்.

இதையும் படியுங்கள்...புதுச்சேரியில் ஒரு போலீஸ் கிராமம்- ஒரேநேரத்தில் 7 பேர் தேர்வானார்கள்
ஆஸ்பத்திரி சவக்கிடங்கில், இறந்தவர் ஒருவரின் உடல் திறந்த வெளியில் ஐஸ் கட்டிகளின் மீது கிடத்தி வைத்திருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
புதுச்சேரி:
புதுவை பிராந்தியமான ஏனாமில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்குள்ள சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ள குளிர்சாதன எந்திரம் பழுதானது. இதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இறந்தவர்களின் உடல் ஐஸ் கட்டிகளின் மீது வைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே ஆஸ்பத்திரி சவக்கிடங்கில், இறந்தவர் ஒருவரின் உடல் திறந்த வெளியில் ஐஸ் கட்டிகளின் மீது கிடத்தி வைத்திருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.