என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இறந்தவர் உடல் ஐஸ் கட்டி மீது கிடத்தி வைத்திருப்பதை காணலாம்
    X
    இறந்தவர் உடல் ஐஸ் கட்டி மீது கிடத்தி வைத்திருப்பதை காணலாம்

    சவக்கிடங்கில் குளிர்சாதன எந்திரம் பழுது- ஐஸ் கட்டி மீது பிணத்தை வைக்கும் அவலம்

    ஆஸ்பத்திரி சவக்கிடங்கில், இறந்தவர் ஒருவரின் உடல் திறந்த வெளியில் ஐஸ் கட்டிகளின் மீது கிடத்தி வைத்திருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
    புதுச்சேரி:

    புதுவை பிராந்தியமான ஏனாமில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்குள்ள சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ள குளிர்சாதன எந்திரம் பழுதானது. இதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இறந்தவர்களின் உடல் ஐஸ் கட்டிகளின் மீது வைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே ஆஸ்பத்திரி சவக்கிடங்கில், இறந்தவர் ஒருவரின் உடல் திறந்த வெளியில் ஐஸ் கட்டிகளின் மீது கிடத்தி வைத்திருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
    Next Story
    ×