என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

    கிருமாம்பாக்கம் அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார்  ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
     
    அப்போது வண்ணான் குளம் பகுதியில் சென்றபோது, அங்குள்ள ஒரு வீட்டில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (38) கந்தன் என்ற கந்தசாமி (33) சுபாஷ் (23) என்பது தெரிய வந்தது.

    இதைதொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 6 ஆயிரத்து 300  ரொக்க பணம் மற்றும் சீட்டுக் கட்டுகளை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×