என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    அமைச்சர்கள்-எம்.எல்.ஏ.க்களுக்கு மரியாதை அளிக்காத காவலர்கள் மீது நடவடிக்கை-சட்டசபை செயலாளர் எச்சரிக்கை

    அமைச்சர்கள்-எம்.எல்.ஏ.க்களுக்கு மரியாதை அளிக்காத காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபை செயலாளர் எச்சரித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை செயலர் முனுசாமி சட்டசபை காவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    சட்டப்பேரவை வளாகத்தில் காவல் பணியில் உள்ள காவலர்கள் மற்றும் வாட்ச் அண்ட் வார்டுகள் பணி நேரங்களில் மொபைலில் பேசிக் கொண்டோ, பார்த்துக் கொண்டோ, தகவல் அனுப்பிக்கொண்டு பணிகள் செய்யாமல் இருப்பதை சட்டப்பேரவைத்தலைவர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவை செயலகத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தனர். 

    சிலர் சீருடை, காலணி, தொப்பி, பேட்ஜ்கள்  ஆகியவற்றை பணி நேரங்களில் அணியாமல் உள்ளனர். அத்துடன் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பேரவைக்குள் வரும் போது உரிய  மரியாதையும் தருவதில்லை என்ற குற்றச் சாட்டு எழுந்துள்ளது.
     
    கட்டுப்பாடு மிக்க காவல் பணியில் இக்குறைபாடுகள், குற்றச்சாட்டுகள்  ஏற்புடைய தல்ல. அத்தகைய ஒழுக்க மற்ற செயல்களை சட்டப்பேரவைச் செயல கம் கண்டிக்கிறது.
    முதல்-அமைச்சர், பேரவை தலைவர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வருகையின்போதும், வெளியே செல்லும்போதும் உரிய மரியாதையை  தர வேண்டும். 

    பணிநேரங்களில் செல்போனில் பேசுவது, தகவல் பரிமாறும் செயல்களில் ஈடுபடக்கூடாது. அடுத்த ஷிப்ட்டில் இருப்போர்  வந்த பின்னர்தான் பணியிலிருந்து செல்லவேண்டும். குறிப்பிட்ட பணியிடத்தில் யாரும் இல்லாமல் இருக்கக்கூடாது. 

    பணி நேரங்களில் மற்ற  பணியாளர்களுடன் தேவையற்ற முறையில் பேசிக்கொண்டிருக்க கூடாது. சீருடை, காலணி கள், தொப்பி, பேட்ஜ் ஆகியவற்றை முறையாக  அணிந்து வரவேண்டும். பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். இந்த உத்தரவை மீறினால் துறைரீதியில் கடும் நட வடிக்கை எடுக்கப்படும். 

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×