என் மலர்
புதுச்சேரி
நடத்தையில் சந்தேகம் அடைந்து நடுரோட்டில் மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய கணவனை போலீசார் தேடிவருகிறாகள்.
புதுச்சேரி:
புதுவை முதலியார் பேட்டை தியாகுமுதலியார் நகரை சேர்ந்தவர் சசிகுமார். டைல்ஸ் தொழிலாளி இவரது மனைவி தேவி (வயது 33). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இதற்கிடையே மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து சசிகுமார் அடிக்கடி தேவியிடம் தகராறு செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தேவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அவரை சசிக்குமார் அடித்து உதைத்து சித்தரவதை செய்ததால் தேவி அவரை விட்டு பிரிந்து தனது மகன் மகளுடன் தாய் வீட்டில் தங்கி புதுவையில் உள்ள் ஒரு வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தார்.
ஆனாலும் தேவி வீட்டுவேலை செய்யும் வீட்டுக்கே சென்று அவ்வப்போது சசிக்குமார் தகராறு செய்து வந்தார்.
இந்த நிலையில் வீட்டு வேலை முடிந்து தேவி புஸ்ஸி வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சசிக்குமார் திடீரென தேவியை வழிமறித்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி போன தேவியை அங்கிருந்தவர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தேவியின் தாயார் ஜெயலலிதா கொடுத்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.
பாகூர் அருகே தந்தை இறந்்த சோகத்தில் எலி மருந்து தின்று மாணவி பரிதாபமாக இறந்து போனார்.
புதுச்சேரி:
பாகூர் அருகே சோரியாங்குப்பத்தை சேர்ந்தவர் பெரியதம்பி கூலித்தொழிலாளி. இவருக்கு செல்வி என்ற மனைவியும் கவிநிலா (வயது 20) சர்மிளா (17) ஆகிய 2 மகள்களும் மற்றும் செந்தில் குமார் (15) என்ற மகனும் உள்ளனர்.
கவிநிலா அதே பகுதியை சேர்ந்த ரங்கநாதன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். சர்மிளா பாகூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் -2 படித்து வந்தார். இதற்கிடையே பெரியதம்பி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திடீர் நோய்வாய்பட்டு இறந்து விட்டார்.
தந்தை இறந்ததால் சர்மிளா சோகத்தில் இருந்து வந்தார். தந்தை இறந்தது முதல் சர்மிளா சரியாக பள்ளிக்கு செல்வது இல்லை.
இந்த நிலையில் சர்மிளா தந்தை இறந்த சோகம் தாங்காமல் வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து தின்று விட்டார். இதில் மயங்கி விழுந்த சர்மிளாவை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சர்மிளாவுக்கு உடல் நிலை மோசமாகவே மேல் சிகிச்சைகாக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சர்மிளா சிகிச்சை பலனின்றி சர்மிளா பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது சகோதரியின் கணவர் ரங்கநாதன் கொடுத்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.
மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் கட்டிடத் தொழிலாளியை பீர் பாட்டிலால் குத்திய 2 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை சண்முகாபுரம் வி.பி.சிங். நகர் காந்திவீதியை சேர்ந்தவர் சிவலிங்கம். (வயது41) கட்டிடத் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வருகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிவலிங்கம் அப்பகுதியில் உள்ள ஒரு மதுக்கடையில் மது அருந்திக்கொண்டிருந்தார். அப்போது ஜான் என்பவர் சிவலிங்கத்துக்கு அறிமுகமானார்.
பின்னர் இருவரும் ஒன்றாக மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தானர்.
இந்த நிலையில் சிவலிங்கம் அதே மதுக்கடையில் மது அருந்த சென்றார். அப்போது ஜான் மற்றும் அவருடன் வந்த மற்றொருவர் சிவலிங்கத்திடம் தகராறு செய்தனர்.
தகாத வார்த்தைகளால் திட்டிய ஜான் என்னிடமே பிரச்சினை செய்கிறாயா என கூறி சிவலிங்கத்தை சரமாரியாக தாக்கினார். மேலும் ஜானுடன் வந்தவர் சிவலிங்கத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டார்.
அப்போது ஜான் அங்கிருந்த பீர் பாட்டிலை எடுத்து சிவலிங்கத்தின் தலையில் தாக்கி கழுத்தில் குத்தினார்.
பின்னர் இருவரும் எங்களிடம் இனிமேல் வைத்துக் கொண்டால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இந்த தாக்குதலில் தலை மற்றும் கழுத்துப்பகுதியில் பலத்த காயம் அடைந்த சிவலிங்கம் சிகிச்சைகாக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜான் மற்றும் அவரது கூட்டாளியை தேடிவருகிறார்கள்.
ஜிப்மரில் இந்தி திணிப்புக்கு ரங்கசாமி மவுனம் காப்பது ஏன்? முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரி:
ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி திணிப்பை கண்டித்து காங். சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது.
போராட்டத்திற்கு மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தலைமை தாங்கினார். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ், முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, முன்னாள்
எம்.எல்.ஏ.,க்கள் அனந்தராமன், கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜிப்மரில் இந்தி கட்டாயம் என்ற உத்தரவு, புதுவை மாநிலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியை திணிக்கும் வேலையை மத்திய அரசு செய்வதை காட்டுகிறது.
அதற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி துணை போகிறாரா? எதற்காக அவர் வாய் திறக்கவில்லை. இந்தியை ஏற்க மாட்டேன் என சொன்னால் மறுநாளே அவர் முதல்-அமைச்சர் கிடையாது.
அதனால்தான் ரங்கசாமி மவுனமாக இருக்கிறார். புதுவை மாநிலத்தை குட்டிச்சுவராக்கும் வேலையை முதல்- அமைச்சர், கவர்னர் செய்து வருகின்றனர். புதுவை மாநிலத்தில் தமிழ் மொழிதான் முதன்மையான மொழி, ஆங்கிலம் இணைப்பு மொழி. மாநிலத்தை ஒருங்கிணைக்க தெலுங்கு, மலையாளம், பிரெஞ்சு மொழி பாரம்பரியமாகும்.
இதை எந்த காலத்திலும் காங்கிரஸ் விட்டுக் கொடுக்காது. எங்கள் போராட்டம் தொடரும்.
புதுவை மாநில பா.ஜனதா தலைவராக கவர்னர் தமிழிசை செயல்பட்டு வருகிறார். இந்தி திணிப்பு தொடர்பாக பா.ஜனதா அமைச்சர்கள், நிர்வாகிகள், முதல்வர் என யாரும் வாய் திறக்காத நிலையில், கவர்னர் மட்டும், தவறான தகவலை கூறி வருகிறார். மத்திய அரசின் ஒரு மொழி கொள்கையை படிப்படியாக நடைமுறை படுத்துவதற்கான முதல் படியாக இது உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுவை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
செவிலியர்கள் அனைவருக்கும் இனிய செவிலியர் தினவாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
புதுவை சுகாதாரத்துறையில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது ஒப்பந்த செவிலியராக சுமார் 240 பேர் பணிக்கு எடுக்கப்பட்டனர்.
கிராமப்புற செவிலியர்களான ஏ.என்.எம்.களும் எடுக்கப்பட்டனர். இவர்கள் தான் கொரோனா காலத்தில் மிக அதிகம் உழைத்தனர். இவர்களது ஒப்பந்த காலம் கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்தது. அதனையடுத்து அவர்களது ஒப்பந்தம் நீட்டிக்கப்படாமல் உள்ளது.
இதனால் அவர்கள் தற்போது வேலையின்றி நடுத்தெருவில் நிற்கின்றனர். எனவே கொரோனா ஆபத்து காலத்தில் மக்களுக்கும், அரசுக்கும் உதவிய ஒப்பந்த செவிலியர்கள், ஏ.என்.எம்.களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். அல்லது சுகாதாரத்துறையில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களில் அவர்களை பணி நிரந்தரம் செய்து செவிலியர் தினத்தை கொண்டாட வேண்டும்.
இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. அறிக்கையில் கூறியுள்ளார்.
காரைக்காலில் 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
காரைக்கால்:
காரைக்கால் நார் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை, திருவாரூர் அருகே நடப்பூர் கிராமத்தை சேர்ந்த சதீஷ் (வயது25) என்ற வாலிபர் கடத்தி சென்று, பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதுபற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர் காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் காரைக்கால் டவுன் போலீசார் சதீஷ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் சதீஷின் செல் எண்ணை ஆய்வு செய்ததில், சதீஷ் சிவகங்கையில் இருப்பதை கண்டுபிடித்தனர்.
அதை தொடர்ந்து, காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாராசைதன்யா உத்தரவின் பேரில், சிவகங்கை விரைந்த தனிப்படை போலீசார் சதீஷை கைது செய்து, 16 வயது சிறுமியை மீட்டு காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்ட சதீஷை காரைக்கால் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புதுச்சேரி சிறையில் அடைத்தனர்.
காரைக்கால் நார் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை, திருவாரூர் அருகே நடப்பூர் கிராமத்தை சேர்ந்த சதீஷ் (வயது25) என்ற வாலிபர் கடத்தி சென்று, பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதுபற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர் காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் காரைக்கால் டவுன் போலீசார் சதீஷ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் சதீஷின் செல் எண்ணை ஆய்வு செய்ததில், சதீஷ் சிவகங்கையில் இருப்பதை கண்டுபிடித்தனர்.
அதை தொடர்ந்து, காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாராசைதன்யா உத்தரவின் பேரில், சிவகங்கை விரைந்த தனிப்படை போலீசார் சதீஷை கைது செய்து, 16 வயது சிறுமியை மீட்டு காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்ட சதீஷை காரைக்கால் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புதுச்சேரி சிறையில் அடைத்தனர்.
பூரணாங்குப்பம் பகுதியில் 4 புதிய குடியிருப்பு பகுதிகளுக்கு சாலை வசதியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ெதாடங்கி வைத்தார்
புதுச்சேரி:
மணவெளி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பூரணாங்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள ரோஜா நகர், சாமியார் நகர், கோவிந்தம்மாள் நகர், கந்தசாமி நகர்ஆகிய பகுதிக்கு தார் சாலை மற்றும் கருங்கல் சாலைகள் ரூ.35 லட்சம் செலவில் அமைக்கப்படுகிறது.
இதற்கான பணி ெதாடக்க விழா இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு புதுவை சபாநாயகரும், தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஏம்பலம் செல்வம் தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜன், பா.ஜனதா நிர்வாகிகள் ராமு, கிருஷ்ணமூர்த்தி, சக்திபாலன், சக்திவேல், லட்சுமிகாந்தன், தட்சிணாமூர்த்தி, மணி, பூரணாங்குப்பம் பகுதியை சேர்ந்த கிராம முக்கியஸ்தர்கள் ராஜகுரு, தண்டபாணி, கோபால், தமிழ், புத்துப்பட்டான், ஆனந்தன், பிரபாகர், ஜீவா, அப்பு, அய்யனார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
வில்லியனூர் அருகே முன் விரோதத்தில் பெண்ணை சராமாரியாக கத்தியால் வெட்டிய அண்ணன்-தம்பிகளை போலீசார் தேடிவருகிறார்கள்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே முன் விரோதத்தில் பெண்ணை சராமாரியாக கத்தியால் வெட்டிய அண்ணன்-தம்பிகளை போலீசார் தேடிவருகிறார்கள்.
வில்லியனூர் அருகே வி.தட்டாஞ்சாவடி செந்தாமரை நகர் 6-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 62) இவரது மனைவி சந்திரா (55). இவர்களது மகன் சரவணன் (34).இவருக்கும் புதுவை வாழக்குளம் நகராட்சி குடியிருப்பு பகுதியை சேர்ந்த வேலு மகன்கள் வினோத், அய்யப்பன், விக்கி ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் இரவு 7 மணியளவில் வினோத் மற்றும் அவரது சகோதரர்கள் சரவணன் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த சந்திரா மற்றும் அவரது கணவர் ரங்கநாதனிடம் உங்களது மகன் எங்கே என்று கேட்டனர். அவர்கள் பதில் சொல்வதற்குள் வினோத் மற்றும் அவரது சகோதரர்கள் தகாத வார்த்தைகளால் சந்திராவை திட்டினர்.
எங்களுக்கு திலீப் குமாரிடம் இருந்து பணத்தை நீங்கள் தான் பெற்றுத் தரவேண்டும் என கூறினர்.
மேலும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சந்திரா தலையில் வெட்டினர். இதனை தடுக்க முயன்ற அவரது கணவர் ரங்கநாதனையும் கத்தியால் திருப்பி தாக்கினர். அதோடு அனைவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்று விட்டனர்.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த சந்திரா கதிர்காமம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் இது குறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அனைத்து துறை அதிகாரிகளுடன் சம்பத் எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி:
முதலியார் பேட்டை தொகுதியின் வளர்ச்சிக்கு செய்யவேண்டிய பணிகள் குறித்து அரசுத்துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் முதலியார் பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு சம்பத் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். புதுவை நகராட்சி சார்பில் செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் வெங்கடாஜலபதி, இளநிலை பொறியாளர் ரமேஷ், சுகாதார துறை ஆய்வாளர் துளசி ராமன், வருவாய் துறை சார்பில் வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார், கிராம நிர்வாக அதிகாரிகள் பாரி மற்றும் சுந்தரராமன், பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலை மத்திய கோட்டம் சார்பில் செயற்பொறியாளர் ஏழுமலை, உதவி பொறியாளர் பார்த்தசாரதி, நீர்ப்பாசன கோட்டம் சார்பில் செயற் பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் மதிவாணன் முதலியார் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன், சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் துறைகளுக்கு இடையே எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுவது, சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தொகுதியில் தற்பொழுது நடைபெற்று வரும் பல்வேறு துறைகளின் பணிகள் குறித்தும் தற்போதைய நிலை குறித்தும் பொது மக்களின் அடிப்படைத் தேவைக்கான பிரச்சினைகளை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கையை ஒருங்கிணைந்து செயல்பட தீர்மானிக்கப்பட்டது.
ஜிப்மரில் இந்தி திணிப்பை கண்டித்து பா.ம.க. ஊர்வலம் - ஆர்ப்பாட்டம் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
புதுச்சேரி:
ஜிப்மர் மருத்துவமனையில் அலுவல் மொழியாக இந்தி மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனை கண்டித்து அரசியல் கட்சிகள் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
அதுபோல் பா.ம.க. சார்பில் ஜிப்மர் மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து புதுவை ராஜீவ்காந்தி சதுக்கத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக ஜிப்மர் மருத்துவமனை நோக்கி கண்டன கோஷங்களை எழுப்பியபடி வந்தனர். ஊர்வலத்திற்கு பா.ம.க. மாநில அமைப்பாளர் கணபதி தலைமை தாங்கினார்.
ஊர்வலத்தை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.தொடர்ந்து முன்னேறிய பா.ம.க.வினர் ஜிப்மர் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, ஜிப்மரில் இந்தியை திணிக்காதே, இயக்குநரின் உத்தரவை திரும்ப பெறு என்று கோஷங்களை எழுப்பினர்.
பின்னர், பா.ம.க. மாநில அமைப்பாளர் கணபதி கூறியதாவது:-
ஜிப்மரில் கவர்னர் வந்து ஆய்வு செய்துவிட்டு எல்லாம் பழைய நடைமுறையில்தான் உள்ளது என்றார். ஆனால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் பதிவேடுகளிலும் இந்திதான் உள்ளது. இதை ஜிப்மர் நிர்வாகம் நிறுத்த வேண்டும்.
ஜிப்மர் பணியாளர் தேர்வுக்கு வடமாநிலத்தில் தேர்வு மையத்தை இயக்குனர் அமைக்கிறார். இது புதுவை மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்க செய்கிறது. இந்தி தெரிந்த 80 சதவீதம் பேரை இங்கு பணியமர்த்த முயற்சிப்பது நிரூபணமாகிறது.
ஜிப்மரின் இந்தி திணிப்பை கண்டித்து போராடுவோர் நோயாளிக்கு எதிராக போடுபவர்கள் என்று கவர்னர் குறிப்பிட்டுள்ளார். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை இயக்குநர் விரட்டுகிறார். அவருக்கு எதிராகத்தான் போராட்டம் நடத்துகிறோம். தமிழ் மண்ணில் இந்தியை திணிக்க முடியாது. இவ்வாறு கணபதி கூறினார்.
பி.ஆர்.டி.சி. தலைமை அலுவலகம் முன்பு பாட்டாளி தொழிற்சங்க வாயிற் கூட்டம் நடந்தினர்
புதுச்சேரி:
பி.ஆர்.டி.சி. பாட்டாளி தொழிற்சங்கத்தின் சார்பில் தலைமை அலுவலகம் முன்பு கண்டன வாயிற்கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு சங்க தலைவர் விநாயகமூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் திருநாவுக்கரசு வரவேற்றார். பொருளாளர் நந்தகுமார், செயல் தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தனர். கவுரவ தலைவர் ஜெயபாலன், ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, பாட்டாளி தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் சிவப்பிரகாசம், துரைக்கண்ணு, மாரிமுத்து, திருமலை, தணிகாசலம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் நிர்வாகிகள் ரமேஷ், சிவராமன், கதிரேசன், ராமன், முருகானந்தம், சித்ரா, வெற்றிவேலன், ராஜேஷ்வரராவ், அருள்விநாயகம், திருமுகம், வாணிஸ்ரீ, பார்த்திபன் உட்பட பலர் கலந்துகொண்டனர். துணைத்தலைவர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.
2015 முதல் பணி யாற்றிவரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். மாதந்தோறும் அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும். முழு நேர மேலாண் இயக்குனரை நியமிக்க வேண்டும். அனைத்து பஸ்களையும் புதிதாக இயக்க வேண்டும். நிரந்தர ஊழியர்களுக்கு இணையான சலுகைகளை ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும். ஒரு ரூபாய் மாணவர் பஸ்களை பி.ஆர்.டி.சி. மூலம் இயக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கூட்டம் நடந்தது.
ஜிப்மர் சுற்றறிக்கை நகலை எரித்து தமிழ் அமைப்புகள் போராட்டம் செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை ஜிப்மரில் இந்தி மொழி திணிப்பை கண்டித்து அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
தமிழர் தேசிய பேரியக்கம் சார்பில் ஜிப்மர் 7-ம் நம்பர் நுழைவுவாயில் முன்பு நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். இதற்காக தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை அருகில் இருந்த இயக்கத்தின் தலைவர் வேல்சாமி தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டனர்.
ஊர்வலத்தில் நாம் தமிழர் சிவக்குமார், தமிழர் களம் அழகர், தமிழ்மாறன், உலகத்தமிழ் கழகம் தமிழ்ழகன் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர். ஊர்வலம் சுப்பையா திருமண மண்டபம் அருகே வந்தபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு பிரிவினர் இந்தி சுற்றறிக்கை நகலை எரிக்க முயற்சித்தனர். அதை போலீசார் பறித்தனர். மற்றொரு பிரிவினர் நுழைவு வாயில் அருகே ஓடிச்சென்று நகலை எரித்தனர். போலீசார் 3 பெண்கள் உட்பட 30 பேரை கைது செய்தனர்.






