என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு துறை அதிகாரிகளுடன் சம்பத் எம்.எல்.ஏ. ஆய்வு நடத்திய காட்சி.
    X
    அரசு துறை அதிகாரிகளுடன் சம்பத் எம்.எல்.ஏ. ஆய்வு நடத்திய காட்சி.

    அதிகாரிகளுடன் சம்பத் எம்.எல்.ஏ. ஆலோசனை

    அனைத்து துறை அதிகாரிகளுடன் சம்பத் எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தினார்.
    புதுச்சேரி:

    முதலியார் பேட்டை தொகுதியின் வளர்ச்சிக்கு செய்யவேண்டிய பணிகள் குறித்து அரசுத்துறை அதிகாரிகளுடன்  ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் முதலியார் பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது. 

    கூட்டத்துக்கு சம்பத்  எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். புதுவை நகராட்சி சார்பில் செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் வெங்கடாஜலபதி, இளநிலை பொறியாளர் ரமேஷ், சுகாதார துறை ஆய்வாளர் துளசி ராமன், வருவாய் துறை சார்பில் வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார், கிராம நிர்வாக அதிகாரிகள் பாரி மற்றும் சுந்தரராமன், பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலை மத்திய கோட்டம் சார்பில் செயற்பொறியாளர் ஏழுமலை, உதவி பொறியாளர் பார்த்தசாரதி,  நீர்ப்பாசன கோட்டம் சார்பில் செயற் பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் மதிவாணன் முதலியார் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன், சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

    இதில் துறைகளுக்கு இடையே எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுவது, சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. 
    தொகுதியில் தற்பொழுது நடைபெற்று வரும் பல்வேறு துறைகளின் பணிகள் குறித்தும் தற்போதைய நிலை குறித்தும் பொது மக்களின் அடிப்படைத் தேவைக்கான பிரச்சினைகளை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கையை ஒருங்கிணைந்து செயல்பட தீர்மானிக்கப்பட்டது‌.
    Next Story
    ×