என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
எலி மருந்து தின்று மாணவி சாவு
பாகூர் அருகே தந்தை இறந்்த சோகத்தில் எலி மருந்து தின்று மாணவி பரிதாபமாக இறந்து போனார்.
புதுச்சேரி:
பாகூர் அருகே சோரியாங்குப்பத்தை சேர்ந்தவர் பெரியதம்பி கூலித்தொழிலாளி. இவருக்கு செல்வி என்ற மனைவியும் கவிநிலா (வயது 20) சர்மிளா (17) ஆகிய 2 மகள்களும் மற்றும் செந்தில் குமார் (15) என்ற மகனும் உள்ளனர்.
கவிநிலா அதே பகுதியை சேர்ந்த ரங்கநாதன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். சர்மிளா பாகூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் -2 படித்து வந்தார். இதற்கிடையே பெரியதம்பி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திடீர் நோய்வாய்பட்டு இறந்து விட்டார்.
தந்தை இறந்ததால் சர்மிளா சோகத்தில் இருந்து வந்தார். தந்தை இறந்தது முதல் சர்மிளா சரியாக பள்ளிக்கு செல்வது இல்லை.
இந்த நிலையில் சர்மிளா தந்தை இறந்த சோகம் தாங்காமல் வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து தின்று விட்டார். இதில் மயங்கி விழுந்த சர்மிளாவை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சர்மிளாவுக்கு உடல் நிலை மோசமாகவே மேல் சிகிச்சைகாக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சர்மிளா சிகிச்சை பலனின்றி சர்மிளா பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது சகோதரியின் கணவர் ரங்கநாதன் கொடுத்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.
Next Story






