என் மலர்
புதுச்சேரி
ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவை விவசாயிகள் சங்கம் சார்பில் தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்க சிறப்பு தலைவர் மாசிலாமணி, மாநில தலைவர் கீதநாதன், பொதுச்செயலாளர் ரவி ஆகியோர் தலைமை வகித்தனர்.
நிர்வாகிகள் கலியமூர்த்தி, ராஜா, பெருமாள், தாமோதரன், ராமமூர்த்தி, கருணாகரன், பிரகாஷ் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தை இந்தியகம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சலீம் தொடங்கி வைத்தார். ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச்செயலாளர் சேதுசெல்வம் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.
ஆர்ப்பாட்டத்தில், ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகளிடம் வாங்கிய உற்பத்தி ெபாருட்களுக்கு உடனடியாக பண பட்டுவாடா செய்ய வேண்டும். ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை இடமாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தப்பட்டது.
மடுகரை கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
புதுச்சேரி:
புதுவையில் பிரசிபெற்ற கூத்தாண்டவர் கோவில்களில் பிள்ளையார்குப்பத்திகு இணையாக வெகுவிமர்ச்சியாக கொண்டாடப்படுவது மடுகரை கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம். கூத்தாண்டவர் கோவில் மற்றும் திரவுபதியம்மன் கோவில் என இரண்டும் ஒரே ஆலயத்தின் கீழ் அமையப்பெற்று ஒருவாரம் முழுவதும் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தினமும் கூத்தாண்டர் மற்றும் திரவுபதியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு வந்தது. முன்னதாக பிடாரியம்மன் மற்றும் மாரியம்மனுக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் பகவான் கிருஷ்ணர் முன்னிலையில் அர்ச்சுணன், திரவுபதியம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மனிதன் மார்பு மீது மஞ்சள்தூள் இடித்தல், கூத்தாண்டவர் திருக்கல்யாணம், இரவு தாலிகட்டுதல் என முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. புதுவை மற்றும் தமிழக பகுதிகளை சேர்ந்த ஏராளமான திருநங்கைகள் தாலி கட்டிக்கொண்டனர்.
இரவில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் விநாயகர், கிருஷ்ணர், மாரியம்மன், திரவுபதியம்மன், அர்ச்சுணன், அரவான் வீதியுலா வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்றுகாலை 7மணிக்கு அரவாண் சிரசு பொருத்தப்பட்டு கூத்தாண்டவர் தேர்புறப்பாடு நடைபெற்றது.
திரளாக கூடியிருந்த பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். வைத்திலிங்கம் எம்.பி, துணை சபாநாயகர் ராஜவேலு மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமார் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது முக்கிய மாடவீதிகள் வழியாக சென்றது. அப்போது பக்தர்கள் நிலத்தில் விளைந்த பொருட்கள், சில்லரை காசுகள் ஆகியவற்றை சாமிமீது வீசி நேர்த்திகடனை செலுத்தினர்.
மாலையில் கூத்தாண்டவர் அழுகளம் கொண்டு செல்லப்பட்டு, திருநங்கைள் ஒப்பாரி வைத்து தாலி அறுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது, வருகிற வெள்ளிக்கிழமை திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெறும். திருவிழா நடைபெறும் ஒருவாரம் முழுவதும் இசை நிகழ்ச்சி, பரதநாட்டியம், கரகாட்டம், தெருகூத்து போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் விழாகுழுவினர் செய்து இருந்தனர்.
யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் அரசின் மின்துறையை தனியார் மயமாக்கும் பூர்வாங்க நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியது. இதை கண்டித்து புதுவை மின்துறை பொறியாளர்கள், ஊழியர்கள் இணைந்து தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழுவை உருவாக்கி போராட்டம் நடத்த தொடங்கினர்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மின்துறையை தனியார் மயமாக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதில் மின்துறை பொறியாளர்கள், ஊழியர்களுடன் மின்துறை செயலர் மூலம் சாதக, பாதக கருத்துக்களை கேட்டறிவது என முடிவு செய்யப்பட்டது.
ஆனால் கூட்டத்தை மின்துறை ஊழியர்கள் புறக்கணித்தனர். கடந்த ஜனவரியில் மின்துறை தனியார்மயம் மற்றும் பணிபாதுகாப்பு பற்றி கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. அதில் மின்துறை தனியார்மயத்தால் மக்களுக்கும், ஊழியர்களுக்கும் பாதிப்பு ஏற்படாது என விளக்கம் தரப்பட்டது.
இதை ஏற்க மறுத்து பிப்ரவரி 1, 2-ந் தேதிகளில் மின்துறை தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழுவினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் முதல்- அமைச்சர் ரங்கசாமி பேச்சுவார்த்தை ந டத்தி, ஊழியர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் எந்த முடிவையும் எடுக்கமாட்டோம் என உறுதியளித்தார்.
இதைத்தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் அரசு தற்போது தனியார்மயத்துக்கான பணிகளை தொடங்கியுள்ளது.
இதையடுத்து மின்துறை பொறியாளர்கள்-தொழிலாளர்கள் தனியார் மய எதிர்ப்பு போராட்டக்குழு பொதுச்செயலர் வேல்முருகன் தலைமையில் மின்துறை ஊழியர்கள் ஆலோசனைக்கூட்டம் நடத்தினர்.
இந்த கூட்டத்தில், தனியார் மயத்தை கண்டித்தும், முதல்-அமைச்சர், மின்துறை அமைச்சரை கண்டித்தும் வரும் 23-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, அதைத்தொடர்ந்து அடுத்த கட்ட போராட்டத்தை அறிவிப்பது என முடிவு செய்துள்ளனர்.
சுதேசி, பாரதி மில்லை தொடர்ந்து இயக்க கோரி தொழிற்சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தனர்.
புதுச்சேரி:
புதுவையின் பிரசித்தி பெற்ற சுதேசி, பாரதி மில்களை வருகிற 30-ந் தேதியுடன் மூட ஆலைகளின் நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
அரசின் இந்த முடிவுக்கு தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மில்லை தொடர்ந்து இயக்கி இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
தொழிற்சங்கங்களின் சார்பில் ஆம்பூர் சாலை அருகே தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. செயல்தலைவர் அபிஷேகம், சேதுசெல்வம், தினேஷ்பொன்னையா, சி.ஐ.டி.யூ. சீனுவாசன்,- ஐ.என்.டி.யூ.சி. சொக்கலிங்கம், ஞானசேகரன், ஏ.ஐ.சி.சி.டி.யூ. மோதிலால், சங்கரன், ம.தி.மு.க. கபிரியேல் மற்றும் தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர்.
இந்தியகம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் பேசினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சட்டசபையில் சந்தித்து, மில்களை புனரமைத்து தொடர்ந்து இயக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.
உப்பளம் தொகுதியில் வாய்க்கால்களை மேம்படுத்தும் பணியை கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட நேதாஜி நகர் 2-ல் தாழ்வான சிமெண்டு கான்கிரீட் சாலைகளில் அனைத்து வீதிகளில் உள்ள சைடு வாய்க்கால் (பக்கவாட்டு வடிகால் வசதி) மேம்படுத்துதல் பணியை 2021-2022 உப்பளம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.39 லடசத்து 50 ஆயிரத்து 196 மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது.
இதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதனை புதுவை மாநில தி.மு.க. துணை அமைப்பாளரும், உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிபால் கென்னடி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இப்பணி 6 மாதத்துக்குள் முழுமை அடையும் என பொதுமக்களிடம் கென்னடி எம்.எல்.ஏ. உறுதி அளித்தார்.
நிகழ்ச்சியில் புதுவை நகராட்சி ஆணையர் சிவகுமார், செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர்பிரபாகர், இளநிலை பொறியாளர் சண்முகம், நகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரர் துரை. அரிராமன்அன்ட்சன்ஸ், தி.மு.க. தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, தி.மு.க. பிரமுகரும், முன்னாள் கவுன்சிலருமான கிருஷ்ணமூர்த்தி, மாநில இளைஞரணி ராஜி, மாநில மீனவர் அணி விநாயகமூர்த்தி, கிளை செயலாளர் டேவிட் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருபுவனை அருகே டாக்டர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் யோகேஷ் (வயது 28). இவர் திருபுவனை அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடன் மற்றொரு டாக்டரான சுகந்திர நாதன் என்பவரும் அதே ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வருகிறார்.
இருவரும் அதே பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். தினமும் சுகந்திர நாதனுக்கு சொந்தமான காரிலேயே இருவரும் ஆஸ்பத்திரிக்கு பணிக்கு சென்று திரும்புவது வழக்கம்.
அவ்வாறு காரில் செல்லும் போது அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் அடிக்கடி இருவரையும் முறைத்து பார்ப்பார். அதனை அவர்கள் கண்டு கொள்வதில்லை.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு யோகேசும், சுகந்திரநாதனும் காரில் பணிக்கு செல்ல தயாராகினர். அப்போது அங்கு வந்த கார்த்திக் தனக்கு கார் வேண்டுமென்று கேட்டார். அதற்கு இருவரும் காரை தரமுடியாது என்று மறுத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் தகாத வார்த்தைகளால் திட்டி இருவரையும் சரமாரியாக தாக்கினார். மேலும் காரை தரமறுத்தால் இருவரும் இந்த ஊரில் இருக்க முடியாது உங்கள், இருவரையும் தீர்த்து கட்டி விடுவேன் என்று மிரட்டினார். அப்போது அக்கம் பக்கத்தினர் திரண்டு வரவே கார்த்திக் அங்கிருந்து சென்று விட்டார்.
இந்த தாக்குதலில் காயமடைந்த டாக்டர்கள் இருவரும் திருபுவனை அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் சிகிச்சை பெற்றனர். பின்னர் இது குறித்து டாக்டர் யோகேஷ் திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.
புதுவை வாணரபேட்டை பிரான்சுவா தோட்டம் 6-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மகன் மதன் குமார் (வயது 19) இவர் புதுவை என்ஜீனியரிங் கல்லூரியில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் டியூசனுக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வாணரபேட்டை நாக முத்து மாரியம்மன் கோவில் அருகே வந்த போது அதே பகுதியை சேர்ந்த செந்தில் (36) என்பவர் மதன் குமாரை வழிமறித்து தகராறு செய்தார்.
இதனை அறிந்த ஜெயக்குமார் மற்றும் அவரது மனைவி சுரேகா (43) ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு மதன் குமாரிடம் தகராறு செய்து கொண்டிருந்த செந்திலிடம் சுரேகா தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த செந்தில் தகாத வார்த்தைகளால் திட்டி சுரேகாவையும் மதன் குமாரையும் மரக்கட்டையால் தாக்கினார்.
இந்த தாக்குதலால் ரத்தகாயமடைந்த சுரேகாவும், மதன்குமாரும் அலறல் சத்தம் போட்டனர். உடனே அக்கம் பக்கத்தினர் திரண்டு வரவே செந்தில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து தாக்குதலில் காயமடைந்த சுரேகாவும், மதன்குமாரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். பின்னர் இது குறித்து சுரேகா ஒதியஞ்சாலை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செந்திலை தேடிவருகிறார்கள்.
மண்ணாடிப்பட்டு ஏரிக்கரையில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
மண்ணாடிப்பட்டு ஏரிக்கரையில் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருக்கனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் சாதாரண உடையில் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்றுக் கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் சட்டபையில் சோதனை செய்த போது சிறு சிறு பொட்டலங்களாக 10 பாக்கெட்டுகள் கஞ்சா வைத்திருந்தனர்.
மொத்தம் 88 கிராம் கஞ்சாவை விற்பனை செய்ய அவர்கள் மறைத்து வைத்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் மண்ணாடிப்பட்டு பெரியகாலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுரேந்தர் (24), உருளையன்பேட்டை முருகன் கோவில் தெருவை சேர்ந்த ஜான்சன்(24) என்பதும், இவர்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கட்சி மாறியதாக அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றனர் என்று போலீஸ் ஐ.ஜி., சந்திரனிடம் வையாபுரி மணிகண்டன் மனு அளித்தார்.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வையாபுரி மணிகண்டன் போலீஸ் ஐ.ஜி சந்திரனை சந்தித்து மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் ஆசியோடு, அ.தி.மு.க.வை சீரோடும், சிறப்போடும் வழி நடத்தி வரும் அ.தி.மு.க.வின் இருபெரும் தலைவர்களின் ஆதரவோடும், ஆசியோடும், புதுவை மாநிலத்தில் கட்சி பணியாற்றி வருகிறேன்.
எனது செயல் பாடுகளால் கட்சியின் இருபெரும் தலைவர்களும் புதுவை கிழக்கு மாநில துணை செயலாளர் பதவியை வழங்கியுள்ளனர். இந்த சூழலில் சில விஷமிகள், எனது பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறான செய்திகளை பரப்பி வருகின்றனர்.
நான் கட்சியிலிருந்து விலகிவிட்டதாகவும், மாற்று கட்சியில் இணைய திட்டமிட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். இதை வன்மையாக கண்டிக்கிறேன்.
என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூகவலை தளங்களில் ஆதாரமற்ற தகவல்களை பரப்பும் விஷமிகள், அரசியல் வியாபாரிகளை சைபர் கிரைம் போலீசார் கண்டறிந்து சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மாகியில் அமைச்சர் சாய் . ஜெ.சரவணன்குமார் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவை பிராந்திய பகுதியான மாகியில் அமைச்சர் சாய்.ஜெ.சரவண-குமார் குடிமை பொருள் வழங்கல் துறை, சிறுபான்மையினர் துறை, தீயணைப்பு துறை, நகர வளர்ச்சி குழும அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது அந்தந்த துறைகளில் நடக்கும் பணிகள் குறித்து ஆய்வு நடத்திய அவர், ஒவ்வொரு துறையிலும் உள்ள குறைகளை அதிகாரிகள் மூலம் கேட்டறிந்தார்.
துறைகளின் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக எவ்வளவு நிதி தேவைப்படும் என்பதை அதிகாரிகள் வரையறுத்து சமர்ப்பிக்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மத்திய- மாநில அரசின் நிதியிலிருந்து அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி தரப்படும் என உறுதி அளித்தார்.
மேலும் மக்கள் பிரச்சி-னைக்காக அதிகாரிகள் உடனுக்குடன் என்னிடம் தொடர்புகொண்டு மாகி மக்களின் வளர்ச்சிக்காகவும், அவர்களின் மேம்-பாட்டிற்காக உறுதுணையாக இருந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
புதுவையில் போதை பொருள் விற்ற வெளிநாட்டு மாணவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி:
புதுவையில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக டி.ஜி.பி.உத்தரவின்பேரில் ஆபரேசன் விடியல் தொடங்கப்பட்டது. இதன்மூலம் அவ்வப்போது புதுவையில் போலீசார் கஞ்சா தடுப்பு வேட்டை நடத்திவந்தனர்.
இதேபோல் நேற்று குருசுக்குப்பம் மரவாடி தெருவில் சிறு–வர்கள்,பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக முத்தியால்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம்,சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கண்காணித்தனர்.
அப்போது சந்தேகப்படும் விதமாக 3 வெளிநாட்டினர் அங்கு நின்று கொண்டிருந்தனர்.அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஜஸ்டின் டெல்வின் டரிமோ (வயது 29),டேவிட் மைக்கில் எலியா (26), பிரான்சிஸ் லக்கி ஓத்ரி (22) என்பது தெரியவந்தது.
இவர்களில் ஜஸ்டின் புதுவைக்கு சுற்றுலா வந்ததும்,அவர் ஆரோவில்லில் தங்கியிருப்பதும் தெரியவந்தது. மற்ற 2 பேர் சிதம்பரம் மற்றும் சேலத்தில் பட்டப்படிப்பு படித்து வருவதும் தெரியவந்தது.
பின்னர் அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 11 கிராம் எடையுள்ள 30 போதை மாத்திரைகள் மற்றும் 21 எடையுள்ள 23 கொக்கைன் பவுடர் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பின்னர் அவர்களை புதுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
நோணாங்குப்பத்தில்ரூ .12 லட்சம் செலவில் கழிவு நீர் வாய்க்கால் பணியை சபாநாயகர் ஏம்பலம் ெசல்வம் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
மணவெளி தொகுதி நோணாங்குப்பம் பகுதியில் பொதுப்பணித் துறை சார்பில் ரூ.12.65 லட்சம் மதிப்பில் யூ வடிவ கழிவுநீர் வாய்க்கால் அமைத்து கவர் சிலாப் அமைக்கப்படுகிறது.
இப்பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் தொகுதி எம்.எல்.ஏ.வும் சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மணவாளன், உதவி பொறியாளர் கோபி, இளநிலை பொறியாளர். நடராஜன் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் சீத்தாராமன், பூபாலன், திருமுருகன், எஸ்.வி.எஸ். குமரன், கூட்டுறவு சங்க தலைவர் தட்சணாமூர்த்தி பா.ஜனதா தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், சக்திபாலன், ஜெயராமன், திருநாவுக்கரசு, கோபால கிருஷ்ணன், கணேசன், ராதா, இளங்கோ, ராஜேந்திரன், சீதாராமன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
நாவற்குளத்தில் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் பூஜை அறையில் புகுந்த 7 அடி பாம்பு மீட்டு வனத்தில் இளைஞர் விட்டார்.
புதுச்சேரி:
ஓட்டல் உரிமையாளர் பூஜை அறையில் இருந்த 7 அடி நீள பாம்பை வாலிபர் மீட்டு வனத்தில் விட்டார்.
புதுவையை அடுத்த தமிழக–பகுதியான நாவற்குளம் முருகன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராஜா.
இவர் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவரது வீட்டின் பூஜை அறையில் ஒரு பாம்பு ஒன்று புகுந்தது.
பீதியடைந்த ராஜா மற்றும் குடும்பத்தினர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பாம்பை விரட்டுவதற்கு முயற்சித்தனர். ஆனால் பூஜை அறையில் இருந்து பாம்பு வெளியேறாமல் அவர்களை மிரட்டியது.
உடனே ராஜா ஆரோவில் போலீஸ் நிலைத்திருக்கும், திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசனுக்கும் தகவல் தெரிவித்தார்.
உடனே பாம்பு பிடிக்கும் இளைஞர் ஒயிட் அன்பு என்பவரை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் சென்றார். அங்கு வீட்டின் பூஜை அறையில் இருந்த சுமார் 7 அடி நீளமுடைய சாரை பாம்பை லாவகமாக அந்த வாலிபர் பிடித்தார்.
பின்னர் நாவர்குளம் காடுகள் நிறைந்த வனப்பகுதியில் சாரைப்பாம்பு விடப்பட்டது. இதன் பின்னரே ராஜா குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் நிம்மதி அடைந்தனர்.






