என் மலர்
உள்ளூர் செய்திகள்

உப்பளம் தொகுதியில் வாய்க்கால்களை மேம்படுத்தும் பணியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த
வாய்க்கால்களை மேம்படுத்தும் பணி
உப்பளம் தொகுதியில் வாய்க்கால்களை மேம்படுத்தும் பணியை கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட நேதாஜி நகர் 2-ல் தாழ்வான சிமெண்டு கான்கிரீட் சாலைகளில் அனைத்து வீதிகளில் உள்ள சைடு வாய்க்கால் (பக்கவாட்டு வடிகால் வசதி) மேம்படுத்துதல் பணியை 2021-2022 உப்பளம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.39 லடசத்து 50 ஆயிரத்து 196 மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது.
இதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதனை புதுவை மாநில தி.மு.க. துணை அமைப்பாளரும், உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிபால் கென்னடி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இப்பணி 6 மாதத்துக்குள் முழுமை அடையும் என பொதுமக்களிடம் கென்னடி எம்.எல்.ஏ. உறுதி அளித்தார்.
நிகழ்ச்சியில் புதுவை நகராட்சி ஆணையர் சிவகுமார், செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர்பிரபாகர், இளநிலை பொறியாளர் சண்முகம், நகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரர் துரை. அரிராமன்அன்ட்சன்ஸ், தி.மு.க. தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, தி.மு.க. பிரமுகரும், முன்னாள் கவுன்சிலருமான கிருஷ்ணமூர்த்தி, மாநில இளைஞரணி ராஜி, மாநில மீனவர் அணி விநாயகமூர்த்தி, கிளை செயலாளர் டேவிட் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story






