என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்பு படம்
  X
  கோப்பு படம்

  டாக்டர்களை தாக்கி கொலை மிரட்டல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருபுவனை அருகே டாக்டர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  புதுச்சேரி:

  கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் யோகேஷ் (வயது 28). இவர் திருபுவனை அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடன் மற்றொரு டாக்டரான சுகந்திர நாதன் என்பவரும் அதே ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வருகிறார்.

  இருவரும் அதே பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். தினமும் சுகந்திர நாதனுக்கு சொந்தமான காரிலேயே இருவரும் ஆஸ்பத்திரிக்கு பணிக்கு சென்று திரும்புவது வழக்கம்.

  அவ்வாறு காரில் செல்லும் போது அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் அடிக்கடி இருவரையும் முறைத்து பார்ப்பார். அதனை அவர்கள் கண்டு கொள்வதில்லை. 

  இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு யோகேசும், சுகந்திரநாதனும் காரில் பணிக்கு செல்ல தயாராகினர். அப்போது அங்கு வந்த கார்த்திக் தனக்கு கார் வேண்டுமென்று கேட்டார். அதற்கு இருவரும் காரை தரமுடியாது என்று மறுத்தனர்.

   இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் தகாத வார்த்தைகளால் திட்டி இருவரையும் சரமாரியாக தாக்கினார். மேலும் காரை தரமறுத்தால் இருவரும் இந்த ஊரில் இருக்க முடியாது உங்கள், இருவரையும் தீர்த்து கட்டி விடுவேன் என்று மிரட்டினார். அப்போது அக்கம் பக்கத்தினர் திரண்டு வரவே கார்த்திக் அங்கிருந்து சென்று விட்டார். 

  இந்த தாக்குதலில் காயமடைந்த டாக்டர்கள் இருவரும் திருபுவனை அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் சிகிச்சை பெற்றனர். பின்னர் இது குறித்து டாக்டர் யோகேஷ் திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

  புதுவை வாணரபேட்டை பிரான்சுவா தோட்டம் 6-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மகன் மதன் குமார் (வயது 19) இவர் புதுவை என்ஜீனியரிங் கல்லூரியில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் டியூசனுக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வாணரபேட்டை நாக முத்து மாரியம்மன் கோவில் அருகே வந்த போது அதே பகுதியை சேர்ந்த செந்தில் (36) என்பவர் மதன் குமாரை வழிமறித்து தகராறு செய்தார். 

  இதனை அறிந்த ஜெயக்குமார் மற்றும் அவரது மனைவி சுரேகா (43) ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு மதன் குமாரிடம் தகராறு செய்து கொண்டிருந்த செந்திலிடம் சுரேகா தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த செந்தில் தகாத வார்த்தைகளால் திட்டி சுரேகாவையும் மதன் குமாரையும் மரக்கட்டையால் தாக்கினார். 

  இந்த தாக்குதலால் ரத்தகாயமடைந்த சுரேகாவும், மதன்குமாரும் அலறல் சத்தம் போட்டனர்.  உடனே அக்கம் பக்கத்தினர் திரண்டு வரவே செந்தில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.  

  இதையடுத்து தாக்குதலில் காயமடைந்த சுரேகாவும், மதன்குமாரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். பின்னர் இது குறித்து சுரேகா ஒதியஞ்சாலை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செந்திலை தேடிவருகிறார்கள்.
  Next Story
  ×