என் மலர்
புதுச்சேரி
நிலுவை தொகை வழங்காததால் 100 நாள் வேலையை புறக்கணித்த புதுக்குப்பம் கிராம மக்கள் உள்ளனர்.
புதுச்சேரி:
பாகூர் தொகுதி மூர்த்திக்குப்பம் பகுதியில் 100 நாள் வேலை நடந்து வருகிறது.
இந்நிலையில் புதுக்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தங்களுக்கு நிலுவை தொகை வழங்காததை கண்டித்து பணியை புறக்கணித்து வெளியேறினர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:-
கடந்த ஆண்டு பணியில் 5 நாட்களுக்கு கூலி தரவில்லை. இந்த ஆண்டும் 5 நாட்களுக்கு கூலி தரப்படவில்லை.
மற்ற கிராமத்தினருக்கு முழுயான கூலி கொடுத்துவிட்டு எங்களுக்கு மட்டும் தரவில்லை. பணி செய்ததற்கான 10 நாட்களுக்கான நிலுவைத் தொகையை கொடுத்தால் மட்டுமே நாங்கள் 100 நாள் வேலை வாய்ப்பில் தொடர்ந்து ஈடுபடுவோம் இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த திட்டத்தில் அளவிற்கு அதிகமான ஆட்களை நியமிப்பதாகவும், நீண்ட நாளாக கிராமசேவகராக இருந்து வருபவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என குற்றம் சாட்டினர்.
சூதாட்ட பிராந்தியமாக ஏனாம் மாறி வருகிறது என்று அ.தி.மு.க. குற்றச்சாட்டியுள்ளது.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் ஒரு சிலர் அரசிடம் உரிமம் பெற்று தொடர்ந்து சூதாட்டம் நடந்து வருகிறது. இதனை தடுக்க வேண்டும். ஏனாமில் அரசிடம் அனுமதி பெற்று மிகப்பெரிய சூதாட்ட கிளப்பை சிலர் நடத்தி வருகின்றனர்.
இங்கு ஒரு நாளைக்கு ரூ.5 கோடி அளவுக்கு சூதாட்டம் நடக்கிறது. பொதுமக்கள் புகாரின்பேரில் அந்த கிளப்புக்கு சீல் வைத்து 36 பேர் மீது புதுவை போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். கிளப்புக்கு அனுமதி கொடுத்த அதிகாரியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
ஏனாம் சூதாட்ட பிராந்தியமாக மாற்ற ப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல்-அமைச்சர், கவர்னரிடம் அ.தி.மு.க. சார்பில் மனு அளிப்பதோடு, கட்சித்தலைமை அனுமதி பெற்று ஏனாமில் போராட்டம் நடத்தப்படும்.
இதேபோல புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து மனமகிழ் மன்றங்களையும் ஆய்வு செய்து, சூதாட்டத்தை தடுக்க வேண்டும். மசாஜ் சென்டருக்கு அனுமதி கொடுக்க கூடாது. ஸ்பா, மசாஜ் கிளப் மூலமாகத்தான் தவறான செயல்கள் நடக்கிறது. விபச்சாரமும் நடக்கிறது. இவற்றின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுவையில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை சமூகநலத்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசின் சமூகநலத்துறை மூலம் பல்வேறு திட்டங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களை மேலும் சிறப்பாக செயல்படுத்த சமூகநலத்துறை சத்யா சிறப்பு பள்ளி மூலம் புதுவை மாநிலத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்பு நடத்த உள்ளது.
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 1995-ன்படி 7 வகையான பிரிவு மட்டுமே இருந்தது. தற்போது சட்டம் 2016-ன்படி 21 வகையான மாற்றுத்திற னாளிகள் வகைப்படுத்த ப்பட்டுள்ளனர்.
புதியவகை குறை பாடுகள் உள்ள மாற்றுத்திறனாளிகளை அடையாளம் காணும் பொருட்டு இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
மத்திய அரசின் மூலம் தனித்துவ மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதுவையில் 18 ஆயிரத்து 849 பேர் இந்த அட்டை பெற்றுள்ளனர். சமூகநலத்துறையில் மாத உதவித்தொகை பெறுவோர் விபரங்கள் மட்டுமே உள்ளன. எனவே எஞ்சிய மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் தனித்துவ அடையாள அட்டை வழங்க மாநிலம் முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்படும்.
பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் சத்யா சிறப்பு பள்ளி பணியாளர்களுக்கு கணக்கெடுப்பு நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த கணக்கெடுப்பினால் 100 சதவீதம் மாற்றுத்திறனாளிகள் பற்றி முழு விபரம் அரசுக்கு கிடைக்கும்.
அனைத்து மாற்றுத்திறனாளி களுக்கும் மத்திய அரசின் தனித்துவ அடையாள அட்டை வழங்குவது உறுதி செய்யப்புடும். மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மேலும் புதிய கொள்கைகள், புதிய திட்டங்கள் உருவாக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நிலுவை சம்பளம் வழங்கக்கோரி பாப்ஸ்கோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:
பாரதிய மஸ்தூர் சங்கத்துடன் இணைந்த பாரதிய பாப்ஸ்கோ தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் பாப்ஸ்கோ தலைமை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்க செயலாளர் மாரியப்பன் வரவேற்றார். தலைவர் ராஜூ தலைமை வகித்தார். ஏழுமலை, முருகவேல், அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுவை மாநில தலைவர் ஆசைத்தம்பி சிறப்புரையாற்றினார்.
அனைத்த பாப்ஸ்கோ ஊழியர்களுக்கும் வருகை பதிவேடை உடனடியாக உறுதி செய்ய வேண்டும். மாதந்தோறும் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பல மாத நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து தொகையையும் வழங்க வேண்டும்.
பாப்ஸ்கோவில் இயங்கி வந்த அனைத்து பிரிவுகளையும் உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சங்க பொறுப்பாளர் பார்த்திபன் நன்றி கூறினார்.
பாகூர் பகுதியில் திடீர் கோடை மழை அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம் விசாயிகள் வேதனையடைந்தனர்.
புதுச்சேரி:
புதுவை கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இரவில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது சாலைகளையும் வீதிகளிலும் சில இடங்களில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்து மக்கள் அவதிக்குள்ளாகினர்.
இந்த திடீர் மழையால் பாகூர், குருவிநத்தம், சோரியாங்குப்பம், சேலியமேடு, மடுகரை, நெட்டப்பாக்கம், கரையாம்–புத்தூர், மணமேடு ஆகிய பகுதிகளில் அறு–வடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையில் நனைந்து சாய்ந்து விட்டன. பல இடங்களில் வயலில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.
இதுபோல் சுமார் 100 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கி காணப்படுகிறது. நன்கு விளைந்த நெற்பயிரில் ஏக்கருக்கு 70 முதல் 80 மூட்டை வரை கிடைக்கும். ஆனால் இந்த மழையால் 50 முதல் 60 மூட்டை நெல் மட்டுமே கிடைக்க வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்–கின்றனர்.
கோடைகாலத்தில் பயிரிடப்பட்டிருந்த பச்சை பயறு, உளுந்து பயிர்கள் மழையால் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்–பட்டுள்ளனர். வேளாண் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நெல், பச்சைப்பயிறு, உளுந்து ஆகியவற்றை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஐ.என்.டி.யூ.சி தலைவர் ரவிச்சந்திரன் உருவ படத்துக்கு மலரஞ்சலி செலுத்தும் நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவை மாநில ஐ.என்.டி.யூ.சி. தலைவர் மறைந்த டாக்டர் ரவிச்–சந்திரன் முதலாம் ஆண்டு நினைவு தினம் பெருமாள் கோவில் வீதியில் உள்ள ஐ.என்.டி.யூ.சி. தலைமை அலுவலகத்தில் நடந்தது.
புதுவை ஐ.என்.டி.யூ.சி. மாநில தலைவர் ஜி.ஆர்.பாலாஜி தலைமையில், ரவிச்சந்திரன் உருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன் பிறகு அங்கிருந்த நிர்வாகிகள் மாநில தலைவர் பாலாஜி தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு காந்தி வீதி, செண்பகா ஓட்டல் அருகில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்–பட்டிருந்த ரவிச்சந்திரன் உருவபடத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து புதுவை மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சிவா எம்.எல்.ஏ. அன்னதானத்தை தொடங்கி வைத்தார். புதுவை நகரப்பகுதி, உழவர்கரை நகராட்சி, மூலகுளம் சந்திப்பில், அம்பலத்தடையார் மடம் வீதியில் உள்ள வள்ளலார் மடம் ஆகிய இடங்களில் தலைவர் ரவிச்சந்திரன் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலியும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க தலைவர் அபிஷேகம்,சேது செல்வம். சி.ஐ.டி.யூ. முருகன், சீனிவாசன். விடுதலை சிறுத்தை முன்னணி செந்தில், முன்னாள் கவுன்சிலர்கள் கோவிந்தராஜன், குமரன், ராஜாராமன், மலர்மன்னன், குணா என்ற ராமலிங்கம், ஸ்ரீகாந்த், சரவணன் மற்றும் மாநில ஐ.என்.டி.யூ.சி. நிர்வாகிகள், இணைப்பு சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காரைக்காலில் ஐ.என்.டி.யூ.சி. பொதுச்செயலாளர் கணேஷ் குமார் தலைமையில் ரவிச் சந்திரன் உருவப் படத்திற்கு மலர் அஞ்சலியும , அன்னை தெரசா முதியோர் காப்பகத்தில் மதிய உணவும் வழங்கப்பட்டது.
புதுவையில் தனித்தனி இடங்களில் மது குடித்து விட்டு ரகளை செய்த 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் மடுவுபேட் சந்திப்பில் 3 பேர் கொண்ட கும்பல் மது குடித்து விட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் ரகளை செய்வதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரகளையில் ஈடுபட்ட 3 பேரையும் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் லாஸ்பேட்டை நெசவாளர் நகரை சேர்ந்த செல்வராஜ், பெத்துசெட்டிபேட்டை சேர்ந்த ஆனந்தன் மற்றும் லாஸ்பேட்டை சுப்பிரமணியர் கோவில் தெருவை சேர்ந்த நாகராஜ் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதுபோல் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரைசாலையில் சப்தகிரி மார்க்கெட் அருகே மது குடித்து விட்டு ரகளை செய்த கோட்டக்குப்பத்தை சேர்ந்த முகமது இஸ்மாயில், அஷரப் மற்றும் லாஸ்பேட்டை அசோக் நகரை சேர்ந்த வினோ ஆகிய 3 பேரையும் லாஸ்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
புதுவை மேட்டுப் பாளையம் லாரிகள் நிறுத்துமிடத்தில் உள்ள மதுக்கடை அருகே மது குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்ட வில்லியனூர் கோபாலன் கடை பகுதியை சேர்ந்த கவுதம் (26) காந்தி திருநல்லூரை சேர்ந்த மாயவன் (32) ஆகியோரை மேட்டுப்பாளையம் போலீசாரும் அதன் அருகே கோரிமேடு போலீஸ் சரகத்துக்குட்பட்ட பகுதியில் மது போதையில் ரகளை செய்த பிச்சவீரன் பேட் கார்த்திக் (38) கிருபாநந்தம் (35) ஆகியோரை கோரிமேடு போலீசார் கைது செய்தனர்.
கிருமாம்பாக்கம் அருகே கன்னியக்கோவில் பச்சை வாழியம்மன் கோவில் அருகே ஒரு வாலிபர் நடுரோட்டில் நின்று கொண்டு பொது மக்களை ஆபாசவார்த்தைகளால் திட்டி தகராறு செய்து கொண்டிருந்தார். இது பற்றி தகவல் அறிந்த கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த நபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்த கார்த்திக் (37) என்பது தெரியவந்தது இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
முத்தியால்பேட்டை உப்பளம், முதலியார்பேட்டை லாஸ்பேட்டை, ராஜ்பவன், முருங்கபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த சில நாட்களாக 100 டிகிரி வரை கடுமையான வெயில் தாக்கம் இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் கடுமையான அவதிக்கு ஆளாகினர்.
இந்த நிலையில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான அசானி தீவிர புயல் காரணமாக 2 நாட்களாக இரவு நேரங்களில் விட்டு விட்டு புதுவையில் மழை பெய்து வந்தது. இதனால் வெயில் தாக்கம் குறைந்து குளிர்ச்சியானதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி புதுவையில் நேற்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக கன மழை பெய்தது.
இந்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடுமையான சிரமத்திற்கு ஆளாகினர். சாலை ஓரங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் பாதசாரிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
முத்தியால்பேட்டை உப்பளம், முதலியார்பேட்டை லாஸ்பேட்டை, ராஜ்பவன், முருங்கபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
இதேபோல் கிராமப்புறங்களிலும் அதிக அளவில் மழை பெய்தது. மேலும் கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் மழையால் அவதிப்பட்டனர். சண்டே மார்க்கெட் வியாபாரமும் பெருமளவில் பாதிக்கப்பட்டது. ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் பலத்த காற்றும் வீசியது.
இன்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்றுடன் கருமேகங்கள் சூழ்ந்துள்ளதால் புதுவை குளிர்ந்துள்ளது. மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும், தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியுள்ளது எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் கோடை வெயிலின் தாக்கம் முடிவுக்கு வரும் என புதுவை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
புதுவையில் கடந்த சில நாட்களாக 100 டிகிரி வரை கடுமையான வெயில் தாக்கம் இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் கடுமையான அவதிக்கு ஆளாகினர்.
இந்த நிலையில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான அசானி தீவிர புயல் காரணமாக 2 நாட்களாக இரவு நேரங்களில் விட்டு விட்டு புதுவையில் மழை பெய்து வந்தது. இதனால் வெயில் தாக்கம் குறைந்து குளிர்ச்சியானதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி புதுவையில் நேற்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக கன மழை பெய்தது.
இந்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடுமையான சிரமத்திற்கு ஆளாகினர். சாலை ஓரங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் பாதசாரிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
முத்தியால்பேட்டை உப்பளம், முதலியார்பேட்டை லாஸ்பேட்டை, ராஜ்பவன், முருங்கபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
இதேபோல் கிராமப்புறங்களிலும் அதிக அளவில் மழை பெய்தது. மேலும் கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் மழையால் அவதிப்பட்டனர். சண்டே மார்க்கெட் வியாபாரமும் பெருமளவில் பாதிக்கப்பட்டது. ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் பலத்த காற்றும் வீசியது.
இன்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்றுடன் கருமேகங்கள் சூழ்ந்துள்ளதால் புதுவை குளிர்ந்துள்ளது. மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும், தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியுள்ளது எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் கோடை வெயிலின் தாக்கம் முடிவுக்கு வரும் என புதுவை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
விர்ச்சுசா நிறுவனத்துடன்எ ம்.ஐ.டி. கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை கலிதீர்த்தாள் குப்பத்தில் உள்ள மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி. கல்லூரி) சென்னையை சேர்ந்த விர்ச்சுசா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.
புரிந்துணர்வு ஒப்பந்தத் தில் கையெழுத்திடும் நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார்,துறை பேராசிரியர்கள் ஆகியோர்முன்னிலையில் எம்.ஐ.டி. கல்லூரி முதல்வர் மலர்க்கண் மற்றும் விர்ச்சுசா நிறுவனத்தின் துணை தலைவர் நாராய-ணன் சுந்தரேசன், கீர்த்தி வாசன், மனித வள மேலாளர்கள் கீதாஞ்சலி, மீனாட்சி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
சோரப்பட்டு கிராமத்தில்பு திய கிராம நிர்வாக அலுவலர் கட்டிடத்தை அங்காளன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
புதுச்சேரி:
மண்ணாடிப்பட்டு கொம்யூன் சோரப்பட்டு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் மிகவும் சிதிலமடைந்து, பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்தது.
இதனை அறிந்த அங்காளன் எம்.எல்.ஏ. விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தற்காலிக ஏற்பாடாக மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சோரப்பட்டு கிராமத்தில் புதிய-கிராம-நிர்வாக அலுவலர் மாற்று கட்டிடத்தை ஏற்பாடு செய்து கட்டிடத்தை திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வில்லியனூர் துணை கலெக்டர் ரிஷிதாகுப்தா, தாசில்தார் கார்த்திகேயன், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தேசிய அளவில் சிறப்பாக விளையாட பள்ளியிலேயே கபடி வீரர்களுக்கு நவீன பயிற்சி அளிக்க வேண்டும் முதல்-அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை மாநில கபடி சங்க நிர்வாகிகள், பயிற்சியாளர்கள், விளை-யாட்டு வீரர்கள் ஆலோசனை கூட்டம் புதுவை அண்ணா சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு புதுவை மாநில கபடி சங்க ேசர்மன் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் டி.எம். வருண் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சர்வதேச கிரிக்கெட் சங்க செயலாளரான மலேசிய நாட்டை சேர்ந்த சதாசிவம் கலந்துகொண்டு புதுவையில் கபடியை எவ்வாறு சர்வதேச நடை-முறைப்படி வளர்க்க வேண்டும்.
மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் கபடியில் உள்ள ஆர்வத்தை ஊக்கு-வித்து அவர்களுக்கு பயிற்சி அளித்து வழிநடத்த வேண்டும். உள்ளிட்ட ஆலோசனைகளை கூறி-னார்.
பின்னர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சதாசிவம் சந்தித்தார்.அப்போது அவர் முதல்-அமைச்சரிடம், புதுவை மாநிலத்தில் கபடி விளையாட்டு முன்னேற்றம் கண்டு வருவது பெருமையாக உள்ளது.
கபடியில் ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்களை பள்ளி அளவிலேயே அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும்.
அரசு வேலைக்கு மட்டுமே இல்லாமல் தேசிய அளவிலான போட்டிகளிலும் சர்வ-தேச அளவிலான போட்டிகளிலும் புதுவை இளைஞர்கள் பங்கேற்று பதக்கங்களை பெற்று புதுவைக்கு பெருமை சேர்த்திட அரசு சர்வதேச தரத்திலான பயிற்சியை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த சந்திப்பின்போது கிரிக்கெட் பயிற்சியாளர்கள் சுப்பிரமணியன், ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஒதியம்பட்டில் ரூ.18 லட்சத்தில் சிறிய பாலம் அமைக்கும் பணி சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
வில்லியனூர் ஒதியம்பட்டு மாதா கோவிலில் இருந்து அரும்பார்த்தபுரம் வரை செல்லும் சாலையில் ரூ. 1 கோடியே 83 லட்சம் மதிப்பில் புதியதாக தார்ச்சாலை அமைக்கும் பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு தற்போது முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது.
சாலையின் இடையில் 2 இடங்களில் மழைநீர் வடிக்கால் வசதிக்காக சிமெண்டு குழாய் அமைக்கப்பட இருந்தது. ஆனால் குழாய் அமைத்தால் சரியாக நீர் செல்லாது, அடைப்புகள் ஏற்படும், எனவே சிறிய பாலம் அமைத்துத்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தற்போது ரூ. 18 லட்சம் செலவில் கான்கிரீட்டிலான சிறுபாலம் அமைக்கப்பட உள்ளது.ஒதியம்பட்டு மாதா கோவில் அருகில் நடந்த பூமிபூஜையில் எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. சிறுபாலங்கள் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.






