என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய கிராம நிர்வாக அலுவலர் கட்டிடத்தை   அங்காளன் எம்.எல்.ஏ. திறந்து வைத்த காட்சி.
    X
    புதிய கிராம நிர்வாக அலுவலர் கட்டிடத்தை அங்காளன் எம்.எல்.ஏ. திறந்து வைத்த காட்சி.

    புதிய வி.ஏ.ஓ. அலுவலக கட்டிட திறப்பு விழா

    சோரப்பட்டு கிராமத்தில்பு திய கிராம நிர்வாக அலுவலர் கட்டிடத்தை அங்காளன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    புதுச்சேரி:

     மண்ணாடிப்பட்டு கொம்யூன் சோரப்பட்டு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் மிகவும் சிதிலமடைந்து, பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்தது.

    இதனை அறிந்த  அங்காளன் எம்.எல்.ஏ.  விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தற்காலிக ஏற்பாடாக மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சோரப்பட்டு கிராமத்தில் புதிய-கிராம-நிர்வாக அலுவலர் மாற்று கட்டிடத்தை ஏற்பாடு செய்து கட்டிடத்தை திறந்துவைத்தார்.  

    இந்நிகழ்ச்சியில் வில்லியனூர்  துணை கலெக்டர் ரிஷிதாகுப்தா, தாசில்தார் கார்த்திகேயன், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் மற்றும் ஊர் பொதுமக்கள்  கலந்து கொண்டனர்.
    Next Story
    ×