என் மலர்
உள்ளூர் செய்திகள்

வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் தேர்புனரமைப்பு பணியை எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வ
பாலம் அமைக்கும் பணி சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
ஒதியம்பட்டில் ரூ.18 லட்சத்தில் சிறிய பாலம் அமைக்கும் பணி சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
வில்லியனூர் ஒதியம்பட்டு மாதா கோவிலில் இருந்து அரும்பார்த்தபுரம் வரை செல்லும் சாலையில் ரூ. 1 கோடியே 83 லட்சம் மதிப்பில் புதியதாக தார்ச்சாலை அமைக்கும் பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு தற்போது முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது.
சாலையின் இடையில் 2 இடங்களில் மழைநீர் வடிக்கால் வசதிக்காக சிமெண்டு குழாய் அமைக்கப்பட இருந்தது. ஆனால் குழாய் அமைத்தால் சரியாக நீர் செல்லாது, அடைப்புகள் ஏற்படும், எனவே சிறிய பாலம் அமைத்துத்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தற்போது ரூ. 18 லட்சம் செலவில் கான்கிரீட்டிலான சிறுபாலம் அமைக்கப்பட உள்ளது.ஒதியம்பட்டு மாதா கோவில் அருகில் நடந்த பூமிபூஜையில் எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. சிறுபாலங்கள் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.
Next Story






