என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கபடி சங்க நிர்வாகிகள் முதல்-அமைச்சரிடம் மனு அளித்த காட்சி
    X
    கபடி சங்க நிர்வாகிகள் முதல்-அமைச்சரிடம் மனு அளித்த காட்சி

    கபடி வீரர்களுக்கு நவீன பயிற்சி அளிக்க வேண்டும்- முதல்-அமைச்சரிடம் கோரிக்கை

    தேசிய அளவில் சிறப்பாக விளையாட பள்ளியிலேயே கபடி வீரர்களுக்கு நவீன பயிற்சி அளிக்க வேண்டும் முதல்-அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
    புதுச்சேரி:

    புதுவை மாநில கபடி சங்க நிர்வாகிகள், பயிற்சியாளர்கள், விளை-யாட்டு வீரர்கள் ஆலோசனை கூட்டம் புதுவை அண்ணா சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நடந்தது.

    இந்த கூட்டத்திற்கு புதுவை மாநில கபடி சங்க ேசர்மன் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் டி.எம். வருண் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். 

    இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சர்வதேச கிரிக்கெட் சங்க செயலாளரான  மலேசிய நாட்டை சேர்ந்த சதாசிவம் கலந்துகொண்டு புதுவையில் கபடியை எவ்வாறு சர்வதேச நடை-முறைப்படி வளர்க்க வேண்டும். 

    மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் கபடியில் உள்ள ஆர்வத்தை ஊக்கு-வித்து அவர்களுக்கு பயிற்சி அளித்து வழிநடத்த வேண்டும். உள்ளிட்ட ஆலோசனைகளை கூறி-னார்.

    பின்னர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சதாசிவம்  சந்தித்தார்.அப்போது அவர் முதல்-அமைச்சரிடம், புதுவை மாநிலத்தில் கபடி விளையாட்டு முன்னேற்றம் கண்டு வருவது பெருமையாக உள்ளது. 

    கபடியில் ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்களை பள்ளி அளவிலேயே அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும். 

    அரசு வேலைக்கு மட்டுமே இல்லாமல் தேசிய அளவிலான போட்டிகளிலும் சர்வ-தேச அளவிலான போட்டிகளிலும் புதுவை இளைஞர்கள் பங்கேற்று பதக்கங்களை பெற்று புதுவைக்கு பெருமை சேர்த்திட அரசு சர்வதேச தரத்திலான பயிற்சியை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

    இந்த சந்திப்பின்போது கிரிக்கெட் பயிற்சியாளர்கள் சுப்பிரமணியன், ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
    Next Story
    ×