என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேர் கைது
மண்ணாடிப்பட்டு ஏரிக்கரையில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
மண்ணாடிப்பட்டு ஏரிக்கரையில் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருக்கனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் சாதாரண உடையில் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்றுக் கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் சட்டபையில் சோதனை செய்த போது சிறு சிறு பொட்டலங்களாக 10 பாக்கெட்டுகள் கஞ்சா வைத்திருந்தனர்.
மொத்தம் 88 கிராம் கஞ்சாவை விற்பனை செய்ய அவர்கள் மறைத்து வைத்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் மண்ணாடிப்பட்டு பெரியகாலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுரேந்தர் (24), உருளையன்பேட்டை முருகன் கோவில் தெருவை சேர்ந்த ஜான்சன்(24) என்பதும், இவர்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story






