என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஒழுங்கு முறை விற்பனை கூடம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.
  X
  ஒழுங்கு முறை விற்பனை கூடம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.

  விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  புதுச்சேரி:

  புதுவை விவசாயிகள் சங்கம் சார்பில் தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

  ஆர்ப்பாட்டத்துக்கு சங்க சிறப்பு தலைவர் மாசிலாமணி, மாநில தலைவர் கீதநாதன், பொதுச்செயலாளர் ரவி ஆகியோர் தலைமை  வகித்தனர்.

  நிர்வாகிகள் கலியமூர்த்தி, ராஜா, பெருமாள், தாமோதரன், ராமமூர்த்தி, கருணாகரன், பிரகாஷ் முன்னிலை வகித்தனர்.  

  ஆர்ப்பாட்டத்தை இந்தியகம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சலீம் தொடங்கி வைத்தார். ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச்செயலாளர் சேதுசெல்வம் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

  ஆர்ப்பாட்டத்தில், ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகளிடம் வாங்கிய உற்பத்தி ெபாருட்களுக்கு உடனடியாக பண பட்டுவாடா செய்ய வேண்டும். ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை இடமாற்றம் செய்யக்கூடாது என  வலியுறுத்தப்பட்டது.
  Next Story
  ×