என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • வில்லியனூர் அருகே மணல் கடத்திய மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • உருவையாறு அருகில் சங்கரபாரணி ஆற்றில் இருந்து மினி லாரியில் மணல் கடத்தி செல்லப்படுவதாக மங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே மணல் கடத்திய மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    வில்லியனூர் அருகே உருவையாறு அருகில் சங்கரபாரணி ஆற்றில் இருந்து மினி லாரியில் மணல் கடத்தி செல்லப்படுவதாக மங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை பார்த்தும் மணல் கடத்தி சென்றவர்கள் மினி லாரியை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டனர்.

    இதையடுத்து போலீசார் மணலுடன் அந்த மினி லாரியை பறிமுதல் செய்து வில்லியனூர் துணை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து மணலை கடத்தி செல்ல பயன்படுத்திய மினி லாரி யாருக்கு சொந்தமானது என்பது குறித்தும், தப்பியோடியவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புதுவையில் 4 இடங்களில் மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடியுள்ளனர்.
    • புதுவையில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் திருட்டு நடந்து வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் 4 இடங்களில் மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடியுள்ளனர்.

    புதுவையில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் திருட்டு நடந்து வருகிறது. போலீசார் வாகன திருட்டை தடுக்க நடவடிக்கை எடுத்து ஆங்காங்கே சோதனை நடத்தினாலும், தொடர்ந்து மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் தினமும் நடந்து வருகிறது. ஒரு நாளைக்கு 2-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போகின்றன.

    இந்த நிலையில் புதுவையில் மேலும் 4 இடங்களில் மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். அதுபற்றி விபரம் வருமாறு:-

    புதுவை வெங்கட்டா நகர் 7-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது71). இவர் பிரெஞ்சு டியூசன் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமாக புதுவை இஞ்ஞியாசி மேஸ்திரி வீதியில் சொந்த–மாக வீடு உள்ளது. அந்த வீட்டை அவர் வாடகைக்கு விட்டுள்ளார். அடிக்கடி அந்த வீட்டை தர்மராஜ் பார்வையிட செல்வார்.

    அதுபோல் அந்த வீட்டை பார்வையிட தர்மராஜ் தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அன்று இரவு வீட்டு மாடியில் தூங்கினார். மறுநாள் காலையில் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணாமல் தர்மராஜ் திடுக்கிட்டார். மோட்டார் சைக்கிளை யாரோ மர்மநபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவை முத்திரை–யர்பாளையம் தனபால் நகர் விரிவு பகுதியை சேர்ந்தவர் சேகர்(59). இவர் ரேசன் கடை விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார்.

    இவர் சிதம்பரத்தில் நடந்த உறவினர் திருமணத்துக்கு செல்ல தனது மோட்டார் சைக்கிளை பஸ் நிலையம் எதிரே நிறுத்தி பூட்டி விட்டு பஸ்சில் சிதம்பரத்துக்கு சென்றார். பின்னர் நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்ப மோட்டார் சைக்கிளை பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணாமல் சேகர் அதிர்ச்சியடைந்தார். மோட்டார் சைக்கிளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து சேகர் உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மரக்காணம் அருகே கடப்பாக்கம் இடைகழியநாடு பகுதியை சேர்ந்தவர் பார்த்தீபன்(33). இவர் புதுவை எல்லைப்பிள்ளை சாவடி 100 அடி ரோட்டில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    இவர் தினமும் மோட்டார் சைக்கிளில் பணிக்கு சென்று வீடு திரும்புவது வழக்கம்.

    பார்த்தீபன் மோட்டார் சைக்கிளை தான் வேலை பார்க்கும் அலுவலக வாசலில் நிறுத்தி விட்டு பணியில் ஈடுபட்டார். பின்னர் பணி முடிந்து வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை யாரோ திருடி சென்றிருப்பதை கண்டு திடுக்கிட்டார்.

    இதுகுறித்து அவர் ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவை குயவர் பாளையம் ஏழை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (45). தனியார் நிறுவன ஊழியர்.

    இவர் தனது மோட்டார் சைக்கிளை தட்டாஞ்சாடி மார்க்கெட் கமிட்டி அருகே நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார். பின்னர் மாலை வேலை முடிந்து வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் அங்கு இல்லை. மோட்டார் சைக்கிளை திருடப்பட்டிருந்ததை அறிந்த ரமேஷ் இதுகுறித்து கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தவளக்குப்பத்தில் சொத்து தகராறில் கணவன்-மனைவி உள்பட 4 பேர் மீது தாக்குதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • யே சந்திர சேகரன் மனைவி கவிதாவுக்கும் அவரது சகோதரர் பாஸ்கருக்கும் சொத்து பாகப்பிரிவினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது

    புதுச்சேரி:

    தவளக்குப்பத்தில் சொத்து தகராறில் கணவன்-மனைவி உள்பட 4 பேர் மீது தாக்குதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தவளக்குப்பம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சந்திர சேகரன்(வயது36). இவர் தனது மாமனார் ஆறுமுகம் என்பவரது வீட்டில் தனது மனைவி மற்றும் அவரது சகோதர-சகோதரிகளோடு கூட்டு குடும்பமாக வசித்து வந்தார்.

    இதற்கிடையே சந்திர சேகரன் மனைவி கவிதாவுக்கும் அவரது சகோதரர் பாஸ்கருக்கும் சொத்து பாகப்பிரிவினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.

    அடிக்கடி பாஸ்கர் தனது சகோதரி கவிதாவையும், அவரது கணவர் சந்திரசேகரனையும் வீட்டை காலி செய்யுமாறு தகராறு செய்து வந்தார்.

    இந்த நிலையில் சந்திரசேகரன் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் உள்ளே நிறுத்த முயன்றார். அப்போது பாஸ்கரின் உறவினர்களான வேல்முருகன், கோபால், வேம்பு, ராஜலட்சுமி ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி சந்திரசேகரனை தாக்கினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர்.

    அதோடு சந்திர சேகரனின் மனைவி கவிதா, அவரது சகோதரி கீதா ஆகியோரையும் அந்த கும்பல் இரும்பு கம்பியால் தாக்கியது.

    இந்த தாக்குதலில் காயமடைந்த சந்திரசேகரன், அவரது மனைவி கவிதா மற்றும் இவரது சகோதரிகள் கலைவாணி, கீதா ஆகியோர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    பின்னர் இதுகுறித்து சந்திரசேகரன் தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இலவச யோகா முகாம் வருகிற 21-ந்தேதி வரை நடக்கிறது.
    • யோகா முகாமில் சிறப்பு விருந்தினராக அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கரன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    இலவச யோகா முகாம் வருகிற 21-ந்தேதி வரை நடக்கிறது.

    சர்வதேச யோகா தினத்தை யொட்டி ஹோலிஸ்டிக் வெல்னஸ் கேர் சென்டர், ஸ்வஸ்திக் அறக்கட்டளை மற்றும் சக்ஷம் புதுவை இணைந்து நடத்திய ஒரு வார இலவச யோகா முகாம் ஆத்திச்சூடி சிறப்பு பள்ளியில் நடைபெற்றது.

    இந்த யோகா முகாமில் சிறப்பு விருந்தினராக அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கரன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார்.

    இதில் புதுவை சக்ஷம் தலைவர் மற்றும் சுவஸ்திக் அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் சத்தியவண்ணன், துணைத்தலைவர் சதீஷ்குமார், செயலாளர் நடராஜன், துணை செயலாளர் இளங்கோ, பொருளாளர் திருமுருகன், ஹோலிஸ்டிக் வெல்னஸ் கேர் சென்டரின் இயக்குனர் டாக்டர் நவசக்தி, அரிச்சுவடி மனநல மையத்தின் இயக்குனர் டாக்டர் இளவழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் யோகா பயிற்சியாளர் டாக்டர் நவசக்தி யோகா பயிற்சி அளித்தார். 50-க்கும் மேற்பட்ட பயனாளர்கள் பயிற்சி பெற்றனர். இந்த இலவச யோகா முகாமில் வருகிற 21-ந் தேதி வரை காலை 7 மணி முதல் 8 மணி வரை தினமும் இலவசமாக பயிற்சி அளிக்கப்படும்.

    • குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை காங்கிரசார் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்
    • மாநில தலைவர் சாமிநாதன் உருவப் படங்களோடு கூடிய பேனர்களை முகாம் நடக்கும் இடத்தின் முன்பு வைத்தனர். இதற்கு காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்

    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டை தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வைத்தியநாதன் ஏற்பாட்டின்பேரில் குடிமைப்பொருள் வழங்கல்துறை சார்பில் ரேஷன்கார்டு மாற்றல் முகாம் நடத்த எம்.எல்.ஏ. அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த பா.ஜனதாவினர், குடிமைப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், மாநில தலைவர் சாமிநாதன் உருவப் படங்களோடு கூடிய பேனர்களை முகாம் நடக்கும் இடத்தின் முன்பு வைத்தனர். இதற்கு காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அரசு விழாவில் கட்சி பேனர்களை எப்படி வைக்கலாம்? என கேள்வி எழுப்பினர். போலீசாரை வரவழைத்து, பேனர்களை அகற்றச்செய்தனர். திடீரென முகாம் ரத்து செய்யப்ப ட்டதாக குடிமைப்பொருள் வழங்கல் துறை தெரிவித்தது. இதனால் எம்.எல்.ஏ. வைத்தியநாதன், ஆதரவாளர்கள், தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் ஆத்திரமடைந்தனர்.

    அவர்கள் தட்டாஞ்சா வடியில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்துக்கு வந்து முற்றுகையிட்டனர். எம்.எல்.ஏ. தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், பறிக்காதே, பறிக்காதே, எம்.எல்.ஏ. உரிமையை பறிக்காதே, நியாயம்தானா? நியாயம்தானா? பா.ஜனதா வே நியாயம்தானா? என கோஷமிட்டனர்.

    சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக முற்றுகை போராட்டம் நடந்தது. இடையில் அவர்கள் சாலையை மறித்து மறியல் செய்ய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். இதனால் காங்கிரசாருக்கும், போலீ சாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. போலீசார் அவர்களை அங்கிருந்து அகற்றி குடிமைப்பொருள் அலுவலக வாசலுக்கு அனுப்பினர்.

    குடிமைப்பொருள் வழங்கல்துறை அலுவலகம் முன்பு காங்கிரசார் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் அலுவலகவாயிலை பூட்டி பாதுகாப்பில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் உள்ளே செல்ல முடிய வில்லை. தகவலறிந்த வைத்திலிங்கம் எம்.பி. சம்பவ இடத்துக்கு வந்தார். அவரும் எம்.எல்.ஏ.வுடன் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

    பின்னர் வைத்திலிங்கம் அங்கிருந்து கிளம்பி ச்சென்றார். இதையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி இயக்கு னரிடம் பேச்சுவார்த்தை நடத்த வரும்படி அழைத்துச்சென்றனர்.

    இதையடுத்து போராட்டக்காரர்கள் குடிமைப்பொருள் வழங்கல்துறை அலுவலகத்துக்கு சென்று நுழைவுவாயில் முன்பு போராட்டம் நடத்தினர்.

    • அழகு நிலையத்தில் கத்திமுனையில் நகை-பணம் பறித்த ரவுடி கும்பலில் மேலும் 3 பேர் சிக்கினர்.
    • புதுவை ரோடியர் பேட் அங்குநாயக்கர் தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஜீவகன். இவரது மனைவி விஜயலட்சுமி

    புதுச்சேரி:

    அழகு நிலையத்தில் கத்திமுனையில் நகை-பணம் பறித்த ரவுடி கும்பலில் மேலும் 3 பேர் சிக்கினர்.

    புதுவை ரோடியர் பேட் அங்குநாயக்கர் தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஜீவகன். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர் சங்கரதாஸ் வீதியில் அழகு நிலையத்துடன் மசாஜ் சென்டர் (ஸ்பா) நடத்திவருகிறார். சம்பவத்தன்று மாலை விஜயலட்சுமி அழகு நிலையத்தில் இருந்து வீட்டுக்கு வந்து விட்டார். பெண் ஊழியர்கள் மட்டும் அழகு நிலையத்தில் இருந்தனர். இரவு 8 மணியளவில் 7 பேர் கொண்ட ரவுடி கும்பல் புகுந்து அங்கிருந்த பெண் ஊழியர்களிடம் மாமுல் கேட்டு மிரட்டியது. இது பற்றி தகவல் அறிந்த விஜயலட்சுமி அழகு நிலையத்துக்கு விரைந்து சென்றார்.

    அப்போது விஜய லட்சுமியையும் கடை ஊழியர்களையும் கத்தியை காட்டி மிரட்டி ரூ.82 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் கடை ஊழியரின் அரை பவுன் செயின் ஆகியவற்றை பறித்து கொண்டு அந்த ரவுடிக்கும்பல் தப்பிச் சென்று விட்டது.

    இது குறித்து விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் பெரியகடை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் கண்டறிந்தனர்.

    அவர்கள் ரெயின்போ நகரை சேர்ந்த சத்யா என்ற சிவபெருமாள், லாஸ்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணகுமார் மற்றும் விஸ்வா, விக்கி என்ற விக்னேஷ், எலி என்ற எலி விஜய், நாவற்குளத்தை சேர்ந்த வெற்றி மற்றும் கவுண்டன்பாளையத்தை சேர்ந்த பாலா என்பது தெரியவந்தது. இவர்களில் கிருஷ்ண குமாரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் விஷ்வா, பாலா உட்பட 3 பேர் போலீசாரிடம் சிக்கினர். தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய ரவுடியான லாஸ்பேட்டை கிருஷ்ணாநகரை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ், எலி விஜய், நாவற்குளத்தை சேர்ந்த வெற்றி ஆகிய 3 பேரை தேடி வந்தனர். இதில் விக்கி என்ற விக்னேஷ் போலீசாரின் பிடியில் சிக்கினார். மற்ற 2 பேரையும் தொடர்ந்து தேடி வருகிறார்கள். கைது செய்யப்பட்ட விக்கி மீது ஒரு கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • முதலியார்பேட்டை பா.ஜனதா சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
    • புதுவை முழுவதும் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    புதுச்சேரி:

    பா.ஜனதா அரசின் 8 ஆண்டு நிறைவு விழாவையொட்டி பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக புதுவை முழுவதும் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    முதலியார்பேட்டை சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட நைனார் மண்டபம் கிளை எண் 20-ல் முன்னாள் கவுன்சிலர் மற்றும் முதலியார்பேட்டை தொகுதி பொறுப்பாளருமான செல்வகணபதி தலைமை யில், தொகுதி தலைவர் இன்பசேகர் முன்னிலையில், தொகுதி துணை தலைவர் விஜயகுமார் ஏற்பாட்டின் பேரில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் கவுன்சிலர் மற்றும் வணிகப் பிரிவின் மாநில தலைவர் சத்யராஜ், கிளை தலைவர் இளஞ்செழியன், தொகுதி நிர்வாகிகள் சுதாகர், முருகன், சரவணன், மணி ராஜா, உதய சங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பாகூர் சிவன் கோயில் அருகில் இருந்து புறப்பட்ட விழிப்புணர்வு பேரணிக்கு, ஹெல்ப் ஏஜ் இந்தியா ஒருங்கிணைப்பாளர் தயாநிதி வரவேற்றார்.

    புதுச்சேரி:

    பாகூரில் ஹெல்ப் ஏஜ் இந்தியா சார்பில் உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பாகூர் சிவன் கோயில் அருகில் இருந்து புறப்பட்ட விழிப்புணர்வு பேரணிக்கு, ஹெல்ப் ஏஜ் இந்தியா ஒருங்கிணைப்பாளர் தயாநிதி வரவேற்றார்.

    துணை இயக்குனர் சத்திய பாபு முதியோர்களுக்காக ஹெல்ப் ஏஜ் இந்தியா செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து முதியோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.

    பேரணியை சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் தொடங்கி வைத்து, சிறப்புரையாற்றினார்.

    மாட வீதிகள் வழியாக வன்கொடுமைக்கு எதிரான வாசகம் எழுதிய பதாகைகளை ஏந்தி முதியோர்கள் பேரணியாக சென்றனர்

    இதற்கான ஏற்பாடுகளை புதுவை முதியோர் நல கூட்டமைப்பைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் பீட்டர், மகேஸ்வரி, பிரசாந்த், ரவி, தமிழ்வேந்தன் ஆகியோர் செய்தனர்.

    • உருளையன்பேட்டை ராஜா நகரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் இடத்தை நேரு எம்.எல்.ஏ. அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
    • புதுவை உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் வார்டு ராஜா நகர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்

    புதுச்சேரி:

    புதுவை உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் வார்டு ராஜா நகர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என தொகுதி எம்.எல்.ஏ. நேரு, சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலுவை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து உருளையன்பேட்டை ராஜா நகர் பகுதியில் சுகாதார நிலையம் அமைக்கும் இடத்தை தேர்வு செய்ய ஆய்வு நடந்தது. நேரு எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு மற்றும் அதிகாரிகள் ஆய்வில் பங்கேற்றனர். ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க போதுமான இடவசதி உள்ளதா? ஆம்புலன்ஸ் மற்றும் வாகனங்கள் வந்து செல்ல சாலை வசதிகள் உள்ளதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    ஆய்வின்போது அப்பகுதியை சேர்ந்த அஞ்சலிதேவி, கோபால், பாரதி, சவுந்தர்ராஜன், பிரபாத், குமார், சசி, குமார், கோவிந்தராஜ், கபிலன், ஜோசப்விஜய், சுரேஷ், ஆனந்தவள்ளி, சார்லத், கவுரி, பிரேமா, கவுரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காங்கிரஸ் கட்சி புதுவையில் வலுவான கட்சியாகத்தான் இன்றும் உள்ளது.
    • என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜனதா ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியில்தான் உள்ளனர்.

    புதுச்சேரி:

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை தொடர்ந்து 3-வது நாளாக இன்று ராகுல்காந்தியை விசாரணைக்கு அழைத்துள்ளது.

    சோனியாகாந்தி, ராகுல் காந்தி மீது பொய்வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறி மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து புதுவை காங்கிரசார் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் காங்கிரசார் தர்ணா போராட்டம் நடத்தினர்.

    இதன்படி புதுவையிலும் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிர மணியன் தலைமையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்ணா போராட்டத்தில், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் அமைச்சர் கந்தசாமி, சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நீலகங்காதரன், அனந்தராமன், நிர்வாகிகள் ரகுமான், கருணாநிதி, தனுசு, இளையராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.

    காங்கிரஸ் கட்சி புதுவையில் வலுவான கட்சியாகத்தான் இன்றும் உள்ளது. என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜனதா ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியில்தான் உள்ளனர். புதுவையில் ஒவ்வொரு தொகுதியிலும் மூத்த காங்கிரசார் பலர் உள்ளனர். அவர்களின் வாரிசுகள் வேறு கட்சிக்கு சென்றிருக்கலாம். அவர்களை யெல்லாம் அழைத்து பேச வேண்டும்.

    புதுவையில் தனித்தனியே கமிட்டி போட்டு கட்சியை வலுப்படுத்த வேண்டும். வரும் தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும். அதற்கு தேவையான வேட்பாளர்கள் உள்ளனர். தி.மு.கவுடன் கூட்டணி சேர்ந்ததால்தான் தமிழகத்தில் காங்கிரஸ் காணாமல் போய்விட்டது. அதேநிலை புதுவைக்கு ஏற்படக்கூடாது.

    புதுவையில் காங்கிரஸ் யாரையும் சார்ந்திராமல் தனித்து போட்டியிட வேண்டும்.

    கடந்த முறை தேர்தலில் என்னை முதல்-அமைச்சர் என கூறினீர்கள், பின்னர் நீங்கள் முதல்-அமைச்சர் ஆனீர்கள். கட்சித்தலைவர், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, எம்.பி.க்கு எல்லாம் வயதாகி விட்டது. மீண்டும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் கவர்னர், வெளிநாட்டு தூதர், துணை ஜனாதிபதி என வேறு பதவிகளை வாங்கி சென்று விடுங்கள்.

    புதுவையில் இளைஞர்களுக்கு வழிவிடுங்கள். நானும் அந்த வயதுக்கு வந்தால் பதவியில் இருக்கமாட்டேன் என பேசினார்.

    அப்போது நாராயண சாமி குறுக்கிட்டு, ஏம்பலம் தொகுதியில் பொதுக்கூட்டத்தில் பேசும்போது, யார் வேண்டுமானாலும் முதல்-அமைச்சர் ஆகலாம், கந்தசாமி கூட முதல்-அமைச்சர் ஆகலாம் என்றுதான் கூறினேன். நீங்கள்தான் முதல்-அமைச்சர் என கூறவில்லை. கட்சித்தலைமை யாரை கைகாட்டுகிறதோ? அவர்கள்தான் பதவிக்கு வருவார்கள் என்றார்.

    இதையே சொல்லி எத்தனை காலம் ஏமாற்று வீர்கள்? என கந்தசாமி கேள்வி எழுப்பினார். இதற்கு நாராயணசாமியின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு எதிராக கந்தசாமி ஆதரவாளர்கள் பேசினர். இதனால் இருதரப்பு வாக்குவாதம் ஏற்பட்டது.

    தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கந்தசாமி, போராட்டத்தை அலுவலகத்துக்குள் நடத்துவதில் என்ன பயன்? மக்களுக்கு தெரியப்படுத்துவோம், ரெயில் மறியல் செய்யலாம், சாலை மறியல் செய்யலாம் என அழைத்தார். அதற்கு எதிர்தரப்பில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, கட்சி அலுவலகத்தில்தான் போராட்டம் நடத்த வேண்டும் என அறிவு றுத்தியுள்ளனர் என தெரி வித்தனர்.

    இதையடுத்து முன்னாள் அமைச்சர் கந்தசாமி அலுவலகத்தில் இருந்து வெளியேறி அலுவலகத்துக்கு எதிரில் சாலையில் நற்காலியை போட்டு அமர்ந்து தர்ணா செய்தார். அவருடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரும் அமர்ந்தனர். இதனால் காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு உள்ளேயும், வெளியிலும் தர்ணா நடந்தது.

    • தேர்வில் தோல்வி பயத்தில் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை கோரிமேடு இந்திராநகரில் வசிப்பவர் கிருஷ்ண பிரசாத் சர்மா. இவர் ஆரோவில் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வரவேற்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் பிரதீப் சர்மா (வயது17). இவர் புதுவையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து தேர்வு எழுதியிருந்தார்.

    இதற்கிடையே பிரதீப் சர்மாவுக்கு தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயம் இருந்து வந்தது. இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறி வருத்தப்பட்டு வந்தார். அவருக்கு பெற்றோர் தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் பெறுவாய் என ஆறுதல் கூறி வந்தனர். ஆனாலும் பிரதீப் சர்மா விரத்தியுடன் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு சாப்பிட்டு விட்டு பிரதீப் சர்மா படுக்கை அறைக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து சந்தேகமடைந்த பிரதீப் சர்மாவின் தாய் படுக்கை அறைக்கு சென்று பார்த்த போது அங்கு மின் விசிறியில் பிரதீப் சர்மா துப்பட்டாவால் தூக்குப்போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து கிருஷ்ண பிரசாத் சர்மா கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவை குரும்பாப்பேட் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி பரமேஸ்வரி (52). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி அதே பகுதியில் உள்ள அமைதி நகரில் தனது கணவருடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பரமேஸ்வரி உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மேலும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ஆஸ்பத்திரிக்கு சென்று பரமேஸ்வரி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அப்போது திடீரென மனமுடைந்த பரமேஸ்வரி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தவளக்குப்பம் அருகே கிராம பொது மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • தவளக்குப்பத்தை அடுத்த இடையார்பாளையம் அருகே என்.ஆர்.நகர் உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    தவளக்குப்பம் அருகே கிராம பொது மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தவளக்குப்பத்தை அடுத்த இடையார்பாளையம் அருகே என்.ஆர்.நகர் உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதியில் மழைக்காலங்களில் மழைநீர் வீடுகளில் புகுந்து விடுவதால் அப்பகுதி மக்கள் ஒவ்வொரு ஆண்டும் அவதியடைந்து வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்று அரசுக்கு அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனாலும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் என்.ஆர். நகரில் ஒரு தனிநபர் தனக்கு சொந்தமான இடத்தில் சுற்றுச்சுவர் அமைத்ததாக கூறப்படுகிறது.

    இந்த சுற்றுசுவர் அமைப்பதின் மூலம் மழை நீர் மேலும் வெளியேற முடியாமல் பாதிப்பு ஏற்படும் என கருதிய அப்பகுதி மக்கள் ஆவேசமடைந்து இன்று காலை புதுவை-கடலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் தவளக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமாரும் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னார். அதோடு தொகுதி எம்.எல்.ஏ.வும், சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் அப்பகுதி மக்களிடம் செல்போனில் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனையேற்று பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    சுமார் 15 நிமிடம் நடந்த இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அவ்வழியே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    ×