என் மலர்
புதுச்சேரி

குடிமை பொருள் வழங்கல் துறை இயக்குனர் சக்திவேலை வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அருகில் காங்கிரஸ் சிறப்பு அழைப்பாளர் வினோத் உள்ளார்.
காங்கிரசார் முற்றுகை
- குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை காங்கிரசார் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்
- மாநில தலைவர் சாமிநாதன் உருவப் படங்களோடு கூடிய பேனர்களை முகாம் நடக்கும் இடத்தின் முன்பு வைத்தனர். இதற்கு காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டை தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வைத்தியநாதன் ஏற்பாட்டின்பேரில் குடிமைப்பொருள் வழங்கல்துறை சார்பில் ரேஷன்கார்டு மாற்றல் முகாம் நடத்த எம்.எல்.ஏ. அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த பா.ஜனதாவினர், குடிமைப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், மாநில தலைவர் சாமிநாதன் உருவப் படங்களோடு கூடிய பேனர்களை முகாம் நடக்கும் இடத்தின் முன்பு வைத்தனர். இதற்கு காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அரசு விழாவில் கட்சி பேனர்களை எப்படி வைக்கலாம்? என கேள்வி எழுப்பினர். போலீசாரை வரவழைத்து, பேனர்களை அகற்றச்செய்தனர். திடீரென முகாம் ரத்து செய்யப்ப ட்டதாக குடிமைப்பொருள் வழங்கல் துறை தெரிவித்தது. இதனால் எம்.எல்.ஏ. வைத்தியநாதன், ஆதரவாளர்கள், தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் ஆத்திரமடைந்தனர்.
அவர்கள் தட்டாஞ்சா வடியில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்துக்கு வந்து முற்றுகையிட்டனர். எம்.எல்.ஏ. தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், பறிக்காதே, பறிக்காதே, எம்.எல்.ஏ. உரிமையை பறிக்காதே, நியாயம்தானா? நியாயம்தானா? பா.ஜனதா வே நியாயம்தானா? என கோஷமிட்டனர்.
சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக முற்றுகை போராட்டம் நடந்தது. இடையில் அவர்கள் சாலையை மறித்து மறியல் செய்ய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். இதனால் காங்கிரசாருக்கும், போலீ சாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. போலீசார் அவர்களை அங்கிருந்து அகற்றி குடிமைப்பொருள் அலுவலக வாசலுக்கு அனுப்பினர்.
குடிமைப்பொருள் வழங்கல்துறை அலுவலகம் முன்பு காங்கிரசார் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் அலுவலகவாயிலை பூட்டி பாதுகாப்பில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் உள்ளே செல்ல முடிய வில்லை. தகவலறிந்த வைத்திலிங்கம் எம்.பி. சம்பவ இடத்துக்கு வந்தார். அவரும் எம்.எல்.ஏ.வுடன் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர் வைத்திலிங்கம் அங்கிருந்து கிளம்பி ச்சென்றார். இதையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி இயக்கு னரிடம் பேச்சுவார்த்தை நடத்த வரும்படி அழைத்துச்சென்றனர்.
இதையடுத்து போராட்டக்காரர்கள் குடிமைப்பொருள் வழங்கல்துறை அலுவலகத்துக்கு சென்று நுழைவுவாயில் முன்பு போராட்டம் நடத்தினர்.






