என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மோட்டார் சைக்கிள் திருட்டு
    X
    கோப்பு படம்

    மோட்டார் சைக்கிள் திருட்டு

    • புதுவையில் 4 இடங்களில் மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடியுள்ளனர்.
    • புதுவையில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் திருட்டு நடந்து வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் 4 இடங்களில் மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடியுள்ளனர்.

    புதுவையில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் திருட்டு நடந்து வருகிறது. போலீசார் வாகன திருட்டை தடுக்க நடவடிக்கை எடுத்து ஆங்காங்கே சோதனை நடத்தினாலும், தொடர்ந்து மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் தினமும் நடந்து வருகிறது. ஒரு நாளைக்கு 2-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போகின்றன.

    இந்த நிலையில் புதுவையில் மேலும் 4 இடங்களில் மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். அதுபற்றி விபரம் வருமாறு:-

    புதுவை வெங்கட்டா நகர் 7-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது71). இவர் பிரெஞ்சு டியூசன் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமாக புதுவை இஞ்ஞியாசி மேஸ்திரி வீதியில் சொந்த–மாக வீடு உள்ளது. அந்த வீட்டை அவர் வாடகைக்கு விட்டுள்ளார். அடிக்கடி அந்த வீட்டை தர்மராஜ் பார்வையிட செல்வார்.

    அதுபோல் அந்த வீட்டை பார்வையிட தர்மராஜ் தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அன்று இரவு வீட்டு மாடியில் தூங்கினார். மறுநாள் காலையில் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணாமல் தர்மராஜ் திடுக்கிட்டார். மோட்டார் சைக்கிளை யாரோ மர்மநபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவை முத்திரை–யர்பாளையம் தனபால் நகர் விரிவு பகுதியை சேர்ந்தவர் சேகர்(59). இவர் ரேசன் கடை விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார்.

    இவர் சிதம்பரத்தில் நடந்த உறவினர் திருமணத்துக்கு செல்ல தனது மோட்டார் சைக்கிளை பஸ் நிலையம் எதிரே நிறுத்தி பூட்டி விட்டு பஸ்சில் சிதம்பரத்துக்கு சென்றார். பின்னர் நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்ப மோட்டார் சைக்கிளை பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணாமல் சேகர் அதிர்ச்சியடைந்தார். மோட்டார் சைக்கிளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து சேகர் உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மரக்காணம் அருகே கடப்பாக்கம் இடைகழியநாடு பகுதியை சேர்ந்தவர் பார்த்தீபன்(33). இவர் புதுவை எல்லைப்பிள்ளை சாவடி 100 அடி ரோட்டில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    இவர் தினமும் மோட்டார் சைக்கிளில் பணிக்கு சென்று வீடு திரும்புவது வழக்கம்.

    பார்த்தீபன் மோட்டார் சைக்கிளை தான் வேலை பார்க்கும் அலுவலக வாசலில் நிறுத்தி விட்டு பணியில் ஈடுபட்டார். பின்னர் பணி முடிந்து வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை யாரோ திருடி சென்றிருப்பதை கண்டு திடுக்கிட்டார்.

    இதுகுறித்து அவர் ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவை குயவர் பாளையம் ஏழை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (45). தனியார் நிறுவன ஊழியர்.

    இவர் தனது மோட்டார் சைக்கிளை தட்டாஞ்சாடி மார்க்கெட் கமிட்டி அருகே நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார். பின்னர் மாலை வேலை முடிந்து வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் அங்கு இல்லை. மோட்டார் சைக்கிளை திருடப்பட்டிருந்ததை அறிந்த ரமேஷ் இதுகுறித்து கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×