என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "People block the road"

    • நின்று செல்ல ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதி அளித்தார்.
    • உடுமலை-பல்லடம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    சூலூர்,

    சூலூர் அருகே செஞ்சேரி புதூர் பகுதியில் சின்ன புதூர் கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பல்லடம் -உடுமலை வழியாக செல்லும் பஸ்கள் நிறுத்துவதில்லை எனக் கூறி பொதுமக்கள் சாலை மறியல் ஈடுப்பட்டனர்.

    இதுகுறித்து நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தும் பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நிறுத்துவதில்லை எனவும், பலமுறை பஸ் டிரைவர்களிடம் மற்றும் அதிகாரிகளிடம் கூறியும் யாரும் செவி சாய்க்கவில்லை என பொது மக்கள் தெரிவித்தனர்.

    இங்கிருந்து வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் இதனால் பெரும் இன்னலுக்கு உள்ளாகின்றனர். பஸ்களை சின்ன புதூர் பஸ் நிறுத்தத்தில் உடனடியாக நிறுத்த வேண்டும் என நூற்றுக்கும் அதிகமானார் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்து விரைந்து வந்த சுல்தான்பேட்டை போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை அடுத்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உடுமலை பஸ் பணிமனை மேலாளர் நடராஜன் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து இனிமேல் பஸ்கள் அனைத்தும் நின்று செல்ல ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதி அளித்தார்.

    இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். போராட்டத்தால் சுமார் அரை மணி நேரம் உடுமலை-பல்லடம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • தவளக்குப்பம் அருகே கிராம பொது மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • தவளக்குப்பத்தை அடுத்த இடையார்பாளையம் அருகே என்.ஆர்.நகர் உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    தவளக்குப்பம் அருகே கிராம பொது மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தவளக்குப்பத்தை அடுத்த இடையார்பாளையம் அருகே என்.ஆர்.நகர் உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதியில் மழைக்காலங்களில் மழைநீர் வீடுகளில் புகுந்து விடுவதால் அப்பகுதி மக்கள் ஒவ்வொரு ஆண்டும் அவதியடைந்து வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்று அரசுக்கு அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனாலும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் என்.ஆர். நகரில் ஒரு தனிநபர் தனக்கு சொந்தமான இடத்தில் சுற்றுச்சுவர் அமைத்ததாக கூறப்படுகிறது.

    இந்த சுற்றுசுவர் அமைப்பதின் மூலம் மழை நீர் மேலும் வெளியேற முடியாமல் பாதிப்பு ஏற்படும் என கருதிய அப்பகுதி மக்கள் ஆவேசமடைந்து இன்று காலை புதுவை-கடலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் தவளக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமாரும் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னார். அதோடு தொகுதி எம்.எல்.ஏ.வும், சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் அப்பகுதி மக்களிடம் செல்போனில் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனையேற்று பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    சுமார் 15 நிமிடம் நடந்த இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அவ்வழியே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    ×