என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவை முத்தியால் பேட்டை எம்.எஸ்.அக்ரஹாரம் பகுதியில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு மின்சார வயர் அறுந்து ஒரு வீட்டின் மீது விழுந்தது.
    • வீட்டிலிருந்த 4 பேர் மீது மின்சாரம் தாக்கியது. இவர்களில் தெய்வானை, கணேஷ் ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால் பேட்டை எம்.எஸ்.அக்ரஹாரம் பகுதியில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு மின்சார வயர் அறுந்து ஒரு வீட்டின் மீது விழுந்தது.

    இதில் வீட்டிலிருந்த 4 பேர் மீது மின்சாரம் தாக்கியது. இவர்களில் தெய்வானை, கணேஷ் ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மற்ற 2 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதை கண்டித்து பொதுமக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. கிழக்கு மாநில துணை செயலாளரும், முத்தியால்பேட்டை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வையாபுரி மணிகண்டன் பொதுமக்கள், அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் உப்பளம் வம்பாகீரப்பாளையத்தில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டார்.

    இறந்துபோன 2 பேரின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களுடன் மின்துறை தலைமை அலுவலகம் முன்பு பொதுமக்களுடன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

    புதுவை அரசையும், மின்துறையையும் கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர்.இதையடுத்து மின்துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முகம் வையாபுரிமணிகண்டனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அவர்களின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தினார்.

    அதற்கு பதிலளித்த கண்காணிப்பு பொறியாளர், இந்த இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவர்களின் குடும்பத்தினருக்கு வேலை வழங்குவது குறித்து அதிகாரிகளிடம் கலந்துபேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நிவாரணம் வழங்குவது குறித்து அரசுக்கு உரிய பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்தார்.

    அப்போது வையாபுரி மணிகண்டன், 2017-ல் அக்ரஹாரம் பகுதியில் புதைவட கேபிள் அமைக்க கோப்பு தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

    அதன்பின் கொரோனா ஊரடங்கால் பணிகள் கிடப்பில் போடப் பட்டுள்ளது. இந்த பணிகளை 10 நாட்களில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொகுதி முழுவதும் மின்கம்பிகள் சீராக உள்ளதா? என ஆய்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

    இதையடுத்து, 10 நாட்களில் அப்பகுதியில் புதைவட கேபிள் அமைக்க நடவடிக்கை எடுக்கவும், தொகுதி முழுவதும் மின்துறை அதிகாரிகளை கொண்டு மின்கம்பிகளின் நிலை குறித்து ஆய்வு செய்யவும் கண்காணிப்பு பொறியாளர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து பொதுமக்கள் தங்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • ஆத்மா திட்டத்தை தொடர வேண்டும் என்று மத்திய வேளாண் அதிகாரியிடம் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • மத்திய அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் இணை செயலர் சாமுவேல் பிரவீன் குமாரை டெல்லி யில் சந்தித்து வேளாண் துறை மூலமாக செயல் படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்கள் பற்றி விவாதித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை வேளாண்துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் மத்திய அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் இணை செயலர் சாமுவேல் பிரவீன் குமாரை டெல்லியில் சந்தித்து வேளாண் துறை மூலமாக செயல் படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்கள் பற்றி விவாதித்தார்.

    செப்டம்பர் மாதத்தோடு முடிவதாக மத்திய அரசு அறிவித்திருந்த ஆத்மா திட்டத்தினை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று ஏற்கனவே மத்திய அரசாங் கத்திற்கு அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    இந்த சந்திப்பின்போதும் அதனை மீண்டும் வலியுறுத்தினார்.

    வேளாண் துறை இணை செயலர் மத்திய அரசாங்கமானது ஆத்மா திட்டத்தை தொடர முடிவு எடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

    மேலும் இந்த வருடம் ஆத்மா திட்டத்திற்கு கூடுதல் நிதி வழங்குமாறு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கேட்டுக் கொண்டார். அதற்கு வேளாண் இணை செயலர் கூடுதல் நிதி வழங்க ஆவண செய்யப்படும் என்று உறுதி கூறினார்.

    இந்த சந்திப்பின்போது புதுவை அரசாங்கத்தின் வேளாண் செயலர் ரவி பிரகாஷ் வேளாண் அமைச்சரின் தனி செயலர் மனோகரன் உடன் இருந்தனர்.

    • பூரணாங்குப்பம் பகுதியிலுள்ள ஜோதி சிலம்பம் பயிற்சி பள்ளியில் தவளக்குப்பம், அபிஷேகப்பாக்கம் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் ஜோதி சிலம்பு பயிற்சி மையம் இணைந்து யோகா நிகழ்ச்சியை நடத்தினர்.
    • யோகா நிகழ்ச்சிக்கு தொகுதி எம்.எல்.ஏ.வும் சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி யோகாசனங்கள் செய்தார்

    புதுச்சேரி:

    யோகா தினத்தையொட்டி மணவெளி தொகுதி பூரணாங்குப்பம் பகுதியிலுள்ள ஜோதி சிலம்பம் பயிற்சிசர்வதேச யோகா தினத்தையொட்டி மணவெளி தொகுதி பூரணாங்குப்பம் பகுதியிலுள்ள ஜோதி சிலம்பம் பயிற்சி பள்ளியில் தவளக்குப்பம், அபிஷேகப்பாக்கம் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் ஜோதி சிலம்பு பயிற்சி மையம் இணைந்து யோகா நிகழ்ச்சியை நடத்தினர்.

    இந்த யோகா நிகழ்ச்சிக்கு தொகுதி எம்.எல்.ஏ.வும் சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி யோகாசனங்கள் செய்தார்.

    இந்த நிகழ்ச்சியில் ஜோதி சிலம்பம் பயிற்சி பள்ளி ஆசிரியர் ஜோதி, செந்தில், கண்ணன், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் செவிலியர்கள் யோகா ஆசிரியர்கள் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் லட்சுமிகாந்தன், தட்சிணாமூர்த்தி, தண்டபாணி, சக்தி, பாலன் ஆனந்தன் ரவி மற்றும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு யோகாசனங்களை செய்தனர்.

    • மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு கத்தி குத்து விழுந்தது.
    • புதுவை லாஸ்பேட்டை செண்பவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல்

    புதுச்சேரி:

    மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு கத்தி குத்து விழுந்தது. புதுவை லாஸ்பேட்டை செண்பவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல்(வயது32). கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை.

    மது குடிக்கும் பழக்க முள்ள இவர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு மதுக்கடைக்கு மது குடிக்க சென்றார். அங்கு மது குடித்துக்கொண்டிருந்த போது மற்றொரு மேஜையில் அமர்ந்து மது குடித்துக்கொண்டிருந்த மடுவுப்பேட்டையை சேர்ந்த கட்டையன் என்ற வெங்கடேசுக்கும் சக்திவேலுக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இருவரும் மாறி மாறி தாக்கி கொண்டனர்.

    அப்போது கட்டையன் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியை எடுத்து சக்திவேலுவின் வயிற்றில் சரமாரியாக குத்தி விட்டு தப்பியோடி விட்டார். இதில் படுகாயமடைந்த சக்திவேலை அங்கிருந்த வர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அரியாங்குப்பம் மணவெளியில் அரிச்சுவடி மனநல மையம் உள்ளது.
    • மையத்தில் 12-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் மணவெளியில் அரிச்சுவடி மனநல மையம் உள்ளது. இந்த மையத்தில் 12-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

    விழாவில் சிறப்பு விருந்தினராக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டார். மைய இயக்குனர் டாக்டா் இளவழகன், சபாநாயகர் ஏம்பலம் செல்வத்தை பூங்கொத்து கொடுத்து வரவேற்று சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி மரியாதை செய்தார். இதனை தொடர்ந்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கேக்வெட்டி ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

    விழாவில் மனநலம் பாதிக்கப்பட்டோரின் கலை நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க வருங்கால தலைவர் சதிஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆத்திசூடி சிறப்பு பள்ளி தாளாளர் டாக்டர் சத்திய வாணன் நன்றியுரை கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பட்டை அரிச்சுவடி மனநல மைய ஊழியர்கள் செய்து இருந்தனர்.

    • புதுவையில் பார்வையற்றோர்கள் ஒன்றிணைந்து பார்வையற்றோருக்கான புதுவை உதவும் இதயங்கள் அறக்கட்டளை அமைக்கப்பட்டு அன்னே சல்லிவன் பெயரை கொண்ட வாசிப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.
    • திறப்பு விழாவுக்கு புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர் சீனிவாசன் தலைமை தாங்கினார்

    புதுச்சேரி:

    புதுவையில் பார்வையற்றோர்கள் ஒன்றிணைந்து பார்வையற்றோருக்கான புதுவை உதவும் இதயங்கள் அறக்கட்டளை அமைக்கப்பட்டு அன்னே சல்லிவன் பெயரை கொண்ட வாசிப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.

    இதன் திறப்பு விழாவுக்கு புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி முதல்வர் மலர்க்கண் முன்னிலை வகித்தார். மையத்தின் தலைவர் கிறிஸ்டோபர் பிரசாந்த், முன்னாள் தலைவர் சதீஷ்குமார், பி.எஸ்.என்.எல். அனிதா, புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியைகள் சந்தானலட்சுமி, கல்பனா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியை மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர்கள் ஜெயக்குமார், விஜயபிரசாத் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். விழாவில் நிர்வாக உறுப்பினர்கள் தீனா, சந்தோஷ், சுபாஷ், வினோத், முகேஷ், ராம்பிரசாத், ஹரினி, தர்ஷிணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த வாசிப்பு மையத்தில் பார்வையற்றோருக்கு அனைத்து வசதிகளும், அதற்கு தேவையான புத்தகங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    • 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் மத்திய அரசு திட்டத்தில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்க வேண்டும் என்று பா.ஜனதா மகளிர் அணி செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
    • பா.ஜனதா கட்சி மகளிர் அணி செயற்குழு கூட்டம் தவளகுப்பத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநில மகளிர் அணி தலைவி ஜெயலட்சுமி தலைமையில் நடைபெற்றது

    புதுச்சேரி:

    10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் மத்திய அரசு திட்டத்தில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்க வேண்டும் என்று பா.ஜனதா மகளிர் அணி செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    புதுவை பா.ஜனதா கட்சி மகளிர் அணி செயற்குழு கூட்டம் தவளகுப்பத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநில மகளிர் அணி தலைவி ஜெயலட்சுமி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக பா.ஜனதா மாநிலத் தலைவர் சாமிநாதன், மகளிர் அணி மாநில பொறுப்பாளர் வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ., பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் மோகன்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்

    தேசிய மகளிர் அணி செயற்குழு உறுப்பினர் தாமரைச்செல்வி, மகளிர் அணி மாநில பொதுச் செயலாளர்கள் கனகவள்ளி, அனிதா, துணை தலைவிகள் அமுதாராணி, கீதா, மாநில செயலாளர்கள் அனுசுவை, மீனா, மகளிர் அணி பொருளாளர் தேன்மொழி, உழவர்கரை மாவட்ட மகளிரணி தலைவி வள்ளி, நகர மாவட்ட மகளிரணி தலைவி செல்வபிரியா, அரியாங்குப்பம் மாவட்ட மகளிர் அணி தலைவி சங்கீதா, வில்லியனூர் மாவட்ட மகளிர் அணி தலைவி ஜெயந்தி, காரைக் கால் மாவட்ட மகளிர் அணி தலைவி பார்வதி உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    மத்திய அரசின் திட்டமான 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக அறிவித்த பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டை தெரிவித்துக்கொள்வது. மத்திய அரசின் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் திட்டத்தில் 50 சதவீத வேலை வாய்ப்பினை மகளிருக்கு அளிக்க வேண்டும்.

    ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் மருத்துவ வசதி வழங்க வேண்டும். அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பகல் நேர பாதுகாப்பு பணியை மகளிருக்கு ஒதுக்க வேண்டும்.

    காரைக்கால் மாவட்டத்தில் சமுதாய நலக்கூடங்கள் கட்டி கொடுக்க வேண்டும். பஸ் மற்றும் ரெயில் பயண கட்டணத்தில் பெண்களுக்கு சலுகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • நெட்டப்பாக்கம் அருகே கோவில் கோபுர கலசத்தில் ஏறி போட்டோ எடுத்ததை காவலாளி போலீசில் புகார் தெரிவித்ததால் அவரை வாலிபர் தாக்கினார்.
    • நெட்டப்பாக்கம் அருகே பண்டசோழ நல்லூர் குளத்து மேட்டுத் தெருவை சேர்ந்தவர் முருகன்

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் அருகே கோவில் கோபுர கலசத்தில் ஏறி போட்டோ எடுத்ததை காவலாளி போலீசில் புகார் தெரிவித்ததால் அவரை வாலிபர் தாக்கினார். நெட்டப்பாக்கம் அருகே பண்டசோழ நல்லூர் குளத்து மேட்டுத் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது45). இவருக்கு பேபி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    முருகன் அங்குள்ள முத்தாலம்மன் கோவிலில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 17-ந் தேதி இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடை பெற்றது. முருகன் கோவிலில் காவல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது நள்ளிரவு அதே பகுதியை சேர்ந்த ஆதித்தியன்(22), மணிகண்டன் (23) மற்றும் பனையடிக்குப்பத்தை சேர்ந்த சூர்யா(42) ஆகியோர் கோவில் கோபுரத்தில் ஏறி கலசம் அருகே நின்று போட்டோ எடுத்தனர்.

    இதனை முருகன் நெட்டப்பாக்கம் போலீசில் புகார் தெரிவித்ததால் போலீசார் விரைந்து வந்து 3 வாலிபர்களையும் பிடித்து சென்று பின்னர் விசாரணை நடத்தி அனுப்பி வைத்து விட்டனர்.

    இந்த நிலையில் முருகன் கோவிலில் இருந்தார். அப்போது ஆதித்தியன் என்னையும் எனது நண்பர்களையும் போலீசில் ஏன் புகார் செய்தாய் எனக்கூறி முருகனை மரக்கட்டையால் தாக்கினார்.

    மேலும் என்னிடம் வைத்துக்கொண்டால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று ஆதித்தியன் மிரட்டி விட்டு சென்றார். இந்த தாக்குதலில் தலை, முதுகு, கை, கால்கள்களில் பலத்த காயமடைந்த முருகனை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து முருகனின் மனைவி பேபி நெட்டப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆதித்தியனை தேடி வருகிறார்கள்.

    • புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (51)ரியல் எஸ்டேட் அதிபர்.
    • சரவணன் இறப்பில் மர்மம் உள்ளது என்று அவரின் உறவினர்கள் மற்றும் புதுவை எம்.எல்.ஏ வைத்தியநாதன் குற்றம் சாட்டினர்.

    வேலுார்:

    புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (51)ரியல் எஸ்டேட் அதிபர். இவர் காட்பாடி அருகே 13 ஏக்கர் நிலம் வாங்குவதற்கு நிலத்தின் உரிமையாளர்களிடம் அட் வான்ஸ் தொகை கொடுத்துள்ளார்.

    அந்த இடத்தை பத்திரப்பதிவு செய்து ஒப்படைக்காமல், நிலத்தின் உரிமையாளர்கள் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது. இதனால் சரவணன் தான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார்.

    இதுதொடர்பாக காட்பாடி காந்தி நகரில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் கடந்த 18-ந்தேதி சரவணன் மற்றும் சில முக்கிய புள்ளிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகு சிறிது நேரத்தில் மர்மமான முறையில் சரவணன் இறந்து கிடந்தார்.

    சரவணன் உடலை மீட்ட விருதம்பட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரவணன் இறப்பில் மர்மம் உள்ளது என்று அவரின் உறவினர்கள் மற்றும் புதுவை எம்.எல்.ஏ வைத்தியநாதன் குற்றம் சாட்டினர்.

    இதையடுத்து இந்த வழக்கில் சரவணன் இறப்பு தொடர்பாக சில முக்கிய புள்ளிகளை பிடித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    ரியல் எஸ்டேட் அதிபர் சரவணன் பிரேத பரிசோதனை முடிவு வந்துள்ளது. அதில் அவர் உடலில் ஆல்கஹால் இல்லை. நெஞ்சு எலும்பு முறிந்து பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், சரவணன் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

    மேலும் அன்று இரவு நடந்த ஆலோசனையில் யாரெல்லாம் இருந்தனர். அவர்களுக்கும் சரவணன் வாங்க நினைத்த இடத்துக்கும் என்ன தொடர்பு என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த வழக்கில் அரசியல் கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளி உட்பட 3 பேரை பிடித்து தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது. சரவணன் இறப்பில் உள்ள மர்மங்கள் அனைத்துக்கும் விரைவில் விடை கிடைத்துவிடும் என்றனர் .

    • அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞர் பெரு மன்றம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • இந்திய இளைஞர்கள் அனைவருக்கும் நிரந்தர மற்றும் நிலையான வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்.

    புதுச்சேரி:

    இந்திய இளைஞர்கள் அனைவருக்கும் நிரந்தர மற்றும் நிலையான வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்.

    இந்திய ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை எடுக்கும் அக்னிபத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். பல்வேறு அரசு நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மறைமலையடிகள் சாலை சுப்பையா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாநில தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். செயலாளர் அந்தோணி முன்னிலை வகித்தார். சி.பி.ஐ. மாநில செயலாளர் சலீம், மாநில துணை செயலாளர் எழிலன், துணை தலைவர் எரிக்ரேம்போ, ரவீந்திரன், சசிதரன், பழனி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    நிர்வாகிகள் சுகதேவ், ரஞ்சித், யசோதா, ராமசாமி, முருகன், சிவராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு அக்னிபத் திட்டத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    • முத்திரையர் பாளையத்தில் கலெக்டரின் உதவியாளர் மற்றும் அவரது மனைவியை வீடு புகுந்து தாக்கிய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • புதுவை முத்திரையர் பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனிவேல்

    புதுச்சேரி:

    முத்திரையர் பாளையத்தில் கலெக்டரின் உதவியாளர் மற்றும் அவரது மனைவியை வீடு புகுந்து தாக்கிய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    புதுவை முத்திரையர் பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வர் பழனிவேல் (வயது49). இவர் கலெக்டரின் நேர்முக உதவியாளராக இருந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவருக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் பழனிவேல் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். அப்போது அருண்குமார், அவரது தம்பி அஜித் மற்றும் அருண்குமாரின் மாமனார் மோகனசுந்தரம் ஆகியோர் பழனிவேலுவை வழிமறித்து மோட்டார் சைக்கிளில் எப்படி வேகமாக செல்லலாம் என கூறி தகராறு செய்தனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. பின்னர் பழனிவேல் வீட்டுக்கு வந்து விட்டார்.

    அப்போது ஆத்திரம் தீராத அருண்குமார், அவரது தம்பி அஜித் மற்றும் மோகனசுந்தரம் ஆகிய 3 பேரும் பழனிவேலுவின் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து அவரையும், அவரது மனைவியையும் கட்டையாலும், கல்லாலும் தாக்கி விட்டு சென்றனர்.

    இந்த தாக்குதலில் தலை, முகத்தில் காயமடைந்த பழனிவேலு மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    பின்னர் இதுகுறித்து பழனிவேலு மேட்டுப் பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அருண்குமார் மற்றும் அவரது தம்பி அஜித் மற்றும் அருண்குமாரின் மாமனார் மோகனசுந்தரம் ஆகிய 3 பேரையும் தேடி வருகிறார்கள்.

    • புதுவையில் அரசு பள்ளியில் தேர்வு எழுதிய 4 ஆயிரத்து 744 பேரில் 4 ஆயிரத்து 398 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • புதுவை, காரைக்காலில் மொத்தம் உள்ள 154 அரசு, தனியார் பள்ளிகளில் 68 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

    புதுச்சேரி:

    தமிழகம், புதுவையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி தேர்வு முடிவுகளை வெளியிட்டு கூறியதாவது:-

    புதுவை, காரைக்காலில் அனைத்து பள்ளிகளின் தேர்ச்சி 96.13 சதவீதம். புதுவை, காரைக்காலில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி 91.96 சதவீதம். பிளஸ்-2 பொதுத்தேர்வில் புதுவை, காரைக்காலை சேர்ந்த 6 ஆயிரத்து 876 மாணவர்களும், 7 ஆயிரத்து 547 மாணவிகளும் என மொத்தம் 14 ஆயிரத்து 423 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.

    இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்த 6 ஆயிரத்து 486 மாணவர்கள், 7 ஆயிரத்து 379 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 865 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

    அரசு பள்ளிகளில் தேர்வு எழுதிய 6 ஆயிரத்து 130 பேரில் 5 ஆயிரத்து 637 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தனியார் பள்ளிகளில் தேர்வு எழுதிய 8 ஆயிரத்து 293 பேரில் 8 ஆயிரத்து 228 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    புதுவையில் அரசு பள்ளியில் தேர்வு எழுதிய 4 ஆயிரத்து 744 பேரில் 4 ஆயிரத்து 398 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தனியார் பள்ளியில் தேர்வு எழுதிய 7 ஆயிரத்து 510 பேரில் 7 ஆயிரத்து 457 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    காரைக்காலில் அரசு பள்ளியில் தேர்வு எழுதிய ஆயிரத்து 386 பேரில் ஆயிரத்து 239 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தனியார் பள்ளியில் தேர்வு எழுதிய 783 பேரில் 771 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். காரைக்காலில் அரசு பள்ளியில் 89.39 சதவீதத்தினரும், தனியார் பள்ளியில் 98.47 சதவீதத்தினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    புதுவையில் அரசு, தனியார் பள்ளிகளில் 96.74 சதவீதத்தினரும், காரைக்கால் மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளிகளில் 92.67 சதவீதத்தினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    புதுவையில் அரசு பள்ளிகளில் மட்டும் 92.71 சதவீதம், காரைக்காலில் 89.39 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    புதுவை, காரைக்காலில் மொத்தம் உள்ள 154 அரசு, தனியார் பள்ளிகளில் 68 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் புதுவையில் 61 பள்ளிகளும், காரைக்காலில் 7 பள்ளிகளும் அடங்கும். புதுவை, காரைக்காலில் மொத்தம் உள்ள 53 அரசு பள்ளிகளில் புதுவையில் 2 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

    புதுவை, காரைக்காலில் அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களில் இந்தி 1, இயற்பியல் 8, வேதியியல் 39, உயிரியல் 83, கணிப்பொறி அறிவியல் 98, கணிதம் 41, பொருளியல் 36, வணிகவியல் 144, கணக்குப்பதிவியல் 114, வணிக கணிதம் 25, கணிணி பயன்பாடு 117, தாவரவியல் 1, விலங்கியல் 2 என மொத்தம் 709 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    கடந்த முறையை விட பிளஸ்-2 தேர்வில் 4.81 சதவீத மாணவர்கள் கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளில் 10 சதவீத மாணவர்கள் கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

    பேட்டியின்போது கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உடனிருந்தார்.

    ×