என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கடன் தொல்லையால் முன்னாள் வங்கி மானேஜர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இவருக்கு யாஸ்மின் என்ற மனைவியும், ஒரு மகள் உள்ளனர்.

    புதுச்சேரி:

    கடன் தொல்லையால் முன்னாள் வங்கி மானேஜர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். புதுவை ஏம்பலம் அருகே பாக்கம் கூட்டுரோட்டை சேர்ந்தவர் அப்துல் பஷீர் அகமது (வயது38). இவருக்கு யாஸ்மின் என்ற மனைவியும், ஒரு மகள் உள்ளனர். தனியார் வங்கியில் உதவி மானேஜராக பணிபுரிந்து வந்த அப்துல் பஷீர் அகமது அந்த வேலை பிடிக்க வில்லை என்று வேலையை ராஜினாமா செய்து விட்டு ஜோதிடம் மற்றும் நாட்டு வைத்தியம் தொழில் செய்து வந்தார்.

    இதற்கிடையே அப்துல் பஷீர் அகமது பலரிடம் கடன் வாங்கி வேல்ராம்பட்டு பகுதியில் மனை வாங்கி அதில் புதிய வீடு கட்டினார். இதனால் அப்துல் பஷீர் அகமதுக்கு கடன் தொல்லை அதிகமானது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு அப்துல் பஷீர் அகமதுக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர். இதனால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்தார். அவரது மனைவி யாஸ்மின் ஆறுதல் கூறி சமாதானம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அப்துல் பஷீர் அகமது திருக்காஞ்சியில் உள்ள சிவன் கோவில் அருகே விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அப்துல் பஷீர் அகமது பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது மனைவி யாஸ்மின் கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பில் சுதேசி மில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் தலைமை வகித்தார்.

    புதுச்சேரி:

    மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பில் சுதேசி மில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலை கழகம் லோகுஅய்யப்பன், மீனவர் விடுதலை வேங்கைகள் மங்கையர்செல்வன், தமிழர் களம் அழகர், தமிழர் தேசிய முன்னணி தமிழ்மணி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஸ்ரீதர், எஸ்.டி.பி.ஐ. கட்சி பரகத்துல்லா, தன்னுரிமை கழகம் சடகோபன், அம்பேத்கர் தொண்டர் படை பாவாடைராயன், மாணவர் கூட்டமைப்பு சுவாமிநாதன், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், ராஜா உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    பாரதியார் பல்கலைக் கூடத்தில் விதிகளை மீறி, சமூக இடஒதுக்கீடை பின்பற்றாமல் தமிழகத்தை சேர்ந்த உதவி பேராசியர்கள் பணி நியமனத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பல்கலைக்கூட பொறுப்பு முதல்வர் மீது உயர்மட்ட விசாரணை நடத்தி பணிநீக்கம் செய்ய வேண்டும்.

    கலை பண்பாட்டுத்துறை செயலரை காத்திருப்போர் பட்டியலில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

    • புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர மற்றும் தொகுதி செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று உப்பளம் தலைமை அலுவலகத்தில் நடந்தது.
    • கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். காரைக்கால் மாவட்ட செயலாளர் ஓமலிங்கம், மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர மற்றும் தொகுதி செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று உப்பளம் தலைமை அலுவலகத்தில் நடந்தது.

    கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். காரைக்கால் மாவட்ட செயலாளர் ஓமலிங்கம், மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், கட்சியின் எதிர்கால நலன் கருதி தற்போதுள்ள கட்சி ஒருங்கிணைப்பாளர்கள் என்ற இரட்டை தலைமையை மாற்றி, கட்சிக்கு ஒரே தலைமையாக கட்சி பொதுச்செயலாளர் பதவியை 23-6-2022 அன்று சென்னையில் நடைபெற உள்ள கட்சி செயற்குழு, பொதுக் குழு கூட்டத்தில் கொண்டு வர வேண்டும் என்றும்தமிழக எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை கட்சியின் பொதுச் செயலாளராக ஏற்றுக் கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் முன்னாள் மாநில செயலாளர் நடராசன், மாநில இணைச் செயலாளர் வீரம்மாள், மாநில துணைச் செயலாளர்கள், வையாபுரி மணிகண்டன், கோவிந்தம்மாள் ,பொருளாளர் ரவிபாண்டுரங்கன், மாநில ஜெ. பேரவை செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாஸ்கர் மற்றும் முன்னால் எம்.எல்.ஏ.வுமான ராஜாராமன், மாநில இணைச் செயலாளர்கள் கணேசன், திருநாவுக்கரசு, நகரக் செயலாளர்கள் அன்பழக உடையார், சித்தானந்தம், செயற்குழு உறுப்பினர் விஜயலட்சுமி.

    மாநில துணை செயலாளர்கள் எம்.ஏ.கே. கருணாநிதி, கிருஷ்ணமூர்த்தி, கணேசன்.,வி.கே. மூர்த்தி, காந்தி, குமுதன், சேரன், மாநில எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் மருதமலையப்பன், வக்கீல் பிரிவு செயலாளர் ராமலிங்கம், மீனவரணி செயலாளர் ஞானவேல், மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் செல்வம், மாணவரணி செயலாளர் பிரதீப், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தினேஷ்குமார் உட்பட நகர நிர்வாகிகள்,தொகுதி நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    • சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு புதுவை அரிக்கன்மேடு பகுதிக்கு ஒரு நாள் சுற்றுலாவை அரிக்கமேடு ஆராய்ச்சி இயக்கம் ஏற்பாடு செய்து இருந்தது.
    • பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல், வரலாறு மற்றும் தொல்லியல் தொடர்பான வரலாற்றுக் கருத்தரங்கமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிரியர் அன்பு நிலவன் வரவேற்புரை ஆற்றினார்

    புதுச்சேரி:

    சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு புதுவை அரிக்கன்மேடு பகுதிக்கு ஒரு நாள் சுற்றுலாவை அரிக்கமேடு ஆராய்ச்சி இயக்கம் ஏற்பாடு செய்து இருந்தது. பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல், வரலாறு மற்றும் தொல்லியல் தொடர்பான வரலாற்றுக் கருத்தரங்கமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிரியர் அன்பு நிலவன் வரவேற்புரை ஆற்றினார்.

    புதுவை இயற்கை கழக இயக்குனர் அருண் நாகலிங்கம் சுற்றுலாவின் முக்கியத்துவம் மற்றும் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து நோக்க உரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக புதுவை அருங்காட்சியக இயக்குனர் அறிவன் சிறப்புரையாற்றினார்.

    அரிக்கமேடு சுற்றியுள்ள பகுதிகள், உரைகிணறுகள், சுவர்கள் மற்றும் ஆற்றுப்பகுதி உள்ளிட்ட இடங்களுக்கு பள்ளி மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டு, அதன் சிறப்புகள் குறித்து ஆராய்ச்சியாளர் ரமேஷ் விளக்கமளித்தார். சங்க இலக்கிய ஆய்வாளர் சுமித்ரா நன்றி கூறினார். ஆசிரியை தேவிதனம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

    • புதுச்சேரி கலாம் ரோலர் ஸ்கேட்டிங் கிளப் சார்பில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்கே ட்டிங் ஊர்வலம்
    • ராஜவேலு தலைமை தாங்கி விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கலாம் ரோலர் ஸ்கேட்டிங் கிளப் சார்பில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்கே ட்டிங் ஊர்வலம் நடந்தது.

    இதன் தொடக்க விழா 100 அடி ரோட்டில் உள்ள இந்திராகாந்தி சிலை அருகில் நடந்தது. நிகழ்ச்சிக்கு துணை சபாநாயகர் ராஜவேலு தலைமை தாங்கி விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் கலந்து கொண்ட மாணவர்கள் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேனர்களை கையில் ஏந்திய படி ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலம் மறை மலை அடிகள் சாலை, புஸ்சி வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று காந்தி சிலையில் முடிவடைந்தது. அங்கு அவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

    • மதுபோதையில் குளிக்க சென்ற போது கோவில் குளத்தில் தவறி விழுந்து சைக்கிள் கடை ஊழியர் பலி
    • முத்தியால்பேட்டையில் செங்களுநீரம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு பாத்தியப்பட்ட குளம் அந்த பகுதியில் உள்ளது.

    புதுச்சேரி:

    குளிக்க சென்ற வாலிபர் குளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்து போனார்.

    புதுவை முத்தியால்பேட்டையில் செங்களுநீரம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு பாத்தியப்பட்ட குளம் அந்த பகுதியில் உள்ளது. இந்த குளத்தில் இன்று காலை ஆண் ஒருவரின் உடல் மிதந்தது. இதனையறிந்த அப்பகுதியினர் முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.உடனே சம்பவ இடத்திற்கு நிலைய அதிகாரி முகுந்தன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து குளத்தில் மிதந்து கொண்டிருந்த உடலை மீட்டனர். அப்போது அந்த நபர் இறந்திருப்பது தெரியவந்தது. பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் இந்திராகாந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அந்த நபர் மஞ்சு நகர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த சக்தி மருது (38)என்பதும் இவர் அந்த பகுதியில் உள்ள சைக்கிள் கடையில் வேலை பார்த்து வந்ததும் ெதரியவந்தது.இவர் மது போதையில் குளத்தில் குளிக்க சென்ற போது தவறி விழுந்து இறந்து போனது தெரியவந்தது.இறந்து போன சக்தி மருதுக்கு இந்திரா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.

    • பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு பாரதீய ஜனதா கட்சி மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் டாக்டர். க.வெற்றிச்செல்வம் 101-வது முறையாக ரத்ததானம் செய்தார்
    • அவரது நண்பர்களும் ,கூட்டுறவு பிரிவு நிர்வாகிகளும் ரத்ததானம் செய்தனர்.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு பாரதீய ஜனதா கட்சி மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் டாக்டர். க.வெற்றிச்செல்வம் 101-வது முறையாக ரத்ததானம் செய்தார். மேலும் அவரது நண்பர்களும் ,கூட்டுறவு பிரிவு நிர்வாகிகளும் ரத்ததானம் செய்தனர்.

    ரத்ததான நிகழ்ச்சியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார். மாநில துணைத்தலைவர்கள் செல்வம், அருள்முருகன், மாநில கூட்டுறவு பிரிவு நிர்வாகிகள் அசோக்குமார், ஹரிதாஸ், மாவட்ட நிர்வாகிகள் தினேஷ், லட்சுமிநாராயணன், குப்புசாமி ,ஆறுமுகம், மோகன், ராஜேந்திரன், சந்தோஷ், விஷால், பிரஜித் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மேலும் புதுவை ஏ.ஜி. பத்மாவதி மருத்துவ மனையில் இருதய அறுவை சிகிச்சைக்காக வெற்றிச்செல்வத்தின் அரிய வகை ரத்தமான பி. நெகட்டிவ் ரத்தம், தேவைப்பட்டது. பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் இருதய அறுவை சிகிச்சை செய்ய போகும் பூராயார் என்கிற நோயாளிக்கு உடனடியாக பயன்படுத்தப்பட்டது.

    • முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிறந்த நாளையொட்டி ராஜ்பவன் வட்டார காங்கிரஸ் சார்பில் ஒஸ்.பீஸ் ஆதரவற்றோர் இல்லத்தில் பல் மருத்துவ முகாம் நடந்தது.
    • முகாமை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் சீனியர் துணை தலைவர் தேவதாஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    புதுச்சேரி:

    முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிறந்த நாளையொட்டி ராஜ்பவன் வட்டார காங்கிரஸ் சார்பில் ஒஸ்.பீஸ் ஆதரவற்றோர் இல்லத்தில் பல் மருத்துவ முகாம் நடந்தது. முகாமை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் சீனியர் துணை தலைவர் தேவதாஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    மாநில பொது செயலாளர்கள் தனுசு, திருமுருகன், இளையராஜா, வட்டார தலைவர் ஜெரால்டு, நிர்வாகிகள் மருதுபாண்டியன், சார்லஸ், ராஜ்குமார், தியாகராஜன், பிரதீஷ் இருதயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • திருபுவனை தொகுதி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிதி வழங்கப்பட்டது.
    • திருபுவனை தொகுதியைச் சார்ந்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வில்லியனூர் வட்டார வளர்ச்சி துறை

    புதுச்சேரி:

    திருபுவனை தொகுதியைச் சார்ந்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வில்லியனூர் வட்டார வளர்ச்சி துறையின் மூலமாக மதகடிப்பட்டு நெய்தல் மகளிர் சுய உதவி குழுவுக்கு ரூ. 7.50 லட்சம், மதகடிப்பட்டு அப்துல் கலாம் மகளிர் சுய உதவி குழுவுக்கு ரூ.7.15 லட்சம், நல்லூர் மகாலட்சுமி மகளிர் சுய உதவிக் குழுவுக்கு ரூ.7.44 லட்சம், நல்லூர் அன்னை மகளிர் சுய உதவி குழுவுக்கு ரூ.4.93 லட்சம், மற்றும் கலிதீர்தாள்குப்பம் நலிவுற்றோர் குறைப்பு நிதி ரூ.1.5 லட்சம் ஆகிய குழுக்களுக்கு திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ. அங்காளன் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நிதி உதவிகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியின் போது இணை வட்டார வளர்ச்சி அதிகாரி, உதவிப் பொறியாளர் மற்றும் அதிகாரிகள் மற்றும் எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

    • திருமலை திருப்பதி தேவஸ்தானம் கல்யாண உற்சவ திட்டம் மற்றும் புதுவை ஸ்ரீவாரி திருக் கல்யாண சேவா டிரஸ்ட் சார்பில் லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் ஸ்ரீவாரி சீனிவாச திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
    • அதனையொட்டி திருமலையில் இருந்து உற்சவ பெருமாள் புதுவைக்கு எழுந்தருளினார்

    புதுச்சேரி:

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் கல்யாண உற்சவ திட்டம் மற்றும் புதுவை ஸ்ரீவாரி திருக் கல்யாண சேவா டிரஸ்ட் சார்பில் லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் ஸ்ரீவாரி சீனிவாச திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

    அதனையொட்டி திருமலையில் இருந்து உற்சவ பெருமாள் புதுவைக்கு எழுந்தருளினார்.செல்ல பெருமாள்பேட்டை விவேகானந்தா பள்ளி வளாகத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    சீனிவாசபெருமாளுக்கு சுப்ரபாத சேவை நடந்தது. இதை தொடர்ந்து, அனைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. மங்கள இசையுடன் திருக்கல்யாண உற்சவம் தொடங்கி நடக்கிறது.

    திருக்கல்யாண உற்சவத்தை திருமலையில் இருந்து வரும் அர்ச்சகர்கள் நடத்துகின்றனர். விழாவில், கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

    விழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக் காக பஸ் நிலையத்தில் இருந்து லாஸ்பேட்டைக்கு இலவச பஸ் இயக்கப்படுகிறது.

    கொரோனா பரவலை தடுக்க விழாவிற்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். விழா அரங்கில் சமூக இடைவெளியை பின்பற்றிட வேண்டும் என விழாக் குழுவினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    • புதுவை கலிதீர்த்தாள் குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் சாதனை பாராட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
    • மாணவர்களுக்கு பணி நியமன ஆணையும், கல்லூரியில் சாதனை புரிந்த பேராசிரியர் மற்றும் மாணவர்களுக்கு விருது மற்றும் பரிசு வழங்கியும் கவுரவித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை கலிதீர்த்தாள் குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் சாதனை பாராட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    சென்னை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் கல்வி தொடர்பு மேலாளர் (தமிழ்நாடு மற்றும் புதுவை) கணஷே் திருநாவுக்கரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணையும், கல்லூரியில் சாதனை புரிந்த பேராசிரியர் மற்றும் மாணவர்களுக்கு விருது மற்றும் பரிசு வழங்கியும் கவுரவித்தார்.

    மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மலர்க்கண் வரவேற்றார்.

    இந்த கல்வி ஆண்டு (2021-2022) நடைபெற்ற கல்லூரி வளாக வேலைவாய்ப்பு நேர்க்காணலில் எம்.ஐ.டி. கல்லூரி மாணவ-மாணவிகள் டி.சி.எஸ்., சி.டி.எஸ்., விப்ரோ, கேப் ஜெமினி, ஆக்சிஸ் வங்கி, எச்.டி.எப்.சி. ஏ.எம்.சி. போன்ற 60 முன்னணி நிறுவனங்களில் 450 பணி நியமன ஆணைகளை பெற்றனர். வேலைவாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் வேலைவாய்ப்பு மையத்தின் செயல்பாடுகள் குறித்த ஆண்டறிக்கை வாசித்தார். வேலைவாய்ப்பு துறை துணை அதிகாரி வைத்தீஸ்வரன் நன்றி கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் வேலைவாய்ப்பு ஒருங் கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • பா.ஜனதா கட்சியின் உழவர்கரை மாவட்ட நிர்வாகிகள்
    • தி.மு.க.- காங்கிரசுக்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது.

    புதுச்சேரி:

    ஜிப்மரில் இந்தி திணிப்பு என பொய்யான தகவல் பரப்பிய தி.மு.க.- காங்கிரசுக்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது.

    பா.ஜனதா கட்சியின் உழவர்கரை மாவட்ட நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் மூலக்குளம் ரீனா மஹாலில் நடைபெற்றது.

    உழவர்கரை மாவட்ட பா.ஜனதா கட்சி தலைவர் நாகேஸ்வரன் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக பா.ஜனதா கட்சி மாநில தலைவர் சாமி நாதன், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கல்யாண சுந்தரம், சிவசங்கரன், மாநில துணைத் தலைவர் மற்றும் உழவர்கரை மாவட்ட பா.ஜனதா பொறுப்பாளர் அருள் முருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    ரஷ்யா-உக்ரைன் போரின் போது உக்ரைனில் தங்கி மருத்துவம் படித்த சுமார் 23 ஆயிரம் இந்திய மாணவர்களை பாதுகாப்பாக தாய் நாட்டுக்கு அழைத்து வந்தமைக்கும், பொட்ரோல் வரியை குறைத்து மக்களுக்கு பயனளிக்கும் வகையில் மத்திய கலால் வரியை குறைக்க நடவடிக்கை எடுத்ததற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டை தெரிவிப்பது,

    புதுவையில் புதிய பஸ் நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கும், ஆவாஸ் போஜனா பிரமதரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2.75 லட்சமாக இருந்த மானியத் தொகையை ரூ.3.75 லட்சமாக உயர்த்திய தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது.

    ஜிப்மர் ஆஸ்பத்திரியில் இந்தி திணிப்பு என்ற பொய்யான தகவலை மக்களிடையே பரப்பி அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்திய தமிழகத்தை ஆளும் தி.மு.க. அரசையும், காங்கிரசையும் வன்மையாக கண்டிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் மாநில செயலாளர் லதா, பட்டியல் அணி தலைவர் தமிழ்மாறன், நீலகண்டன் மற்றும் உழவர்கரை மாவட்டத்தில் உள்ள பா.ஜனதா கட்சியின் அனைத்து தொகுதி தலைவர்களும், மாநில நிர்வாகிகளும், அணி தலைவர்களும், பிரிவு அமைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

    ×