என் மலர்
புதுச்சேரி
- புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது
- முதல்-அமைச்சர் ரங்கசாமி எதிர்கட்சி தலைவராக இருந்தபோது, காங்கிரஸ் ஆட்சியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யவில்லை என குற்றம்சாட்டினார்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் ரங்கசாமி எதிர்கட்சி தலைவராக இருந்தபோது, காங்கிரஸ் ஆட்சியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யவில்லை என குற்றம்சாட்டினார்.
கவர்னர் கிரண்பேடியின் குறுக்கீடு, மத்திய அரசின் தொல்லை ஆகியவற்றின் காரணமாக காங்கிரஸ் ஆட்சியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்ய முடியவில்லை.
தற்போது பா.ஜனதா வுடன் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்துள்ள ரங்கசாமி, ஏன் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யவில்லை? பா.ஜ.க.வுக்கும், என்.ஆர்.காங்கிரசுக்கும் விரிசல் உள்ளதா? மத்திய அரசு பட்ஜெட்டை திருப்பி அனுப்புகிறதா? புதுவை பா.ஜனதாவினர் முழு பட்ஜெட் போடுவதை தடுக்கிறார்களா?
காங்கிரசை குறை சொன்ன ரங்கசாமி இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்? இதுகுறித்து புதுவை மக்களுக்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டும்.
நிதி பற்றாக்குறையால் அரசு ஊழியர்களுக்கே சம்பளம் போட முடியாத நிலை நிலவுகிறது. தொழில்நுட்ப பல்கலைக்கழக ஊழியர்கள் சம்பளம் வழங்க கோரிக்கை வைத்து வருகின்றனர்.
எங்கள் ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களைத்தான் இந்த அரசு தற்போது செயல்படுத்தி வருகிறது. புதிதாக என்.ஆர்.காங்கிரஸ் அரசில் ஒரு திட்டம்கூட கொண்டு வரப்படவில்லை. இதை முதல்-அமைச்சருக்கு சவால்விட்டு நான் கூறுகிறேன். பல இடர்பாடுகளையும், நெருக்கடிகளையும் தாண்டி நாங்கள் திட்டங்களை கொண்டு வந்தோம்.
நடுத்தர குடும்பங்கள் தற்போது மின் கட்டண உயர்வால் அவதிக்குள்ளாகியுள்ளனர். மாதம் ரூ.2 ஆயிரம் மின் கட்டணம் செலுத்திய குடும்பங்கள் தற்போது கூடுதலாக ரூ.600 செலுத்த வேண்டியுள்ளது.
தனியார்மயமானால் இது மேலும் அதிகரிக்கும். தனியார்மயத்தை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்ல தயாராகி வருகிறோம்.
கடந்த காலங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் புதுவையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை பார்த்து இங்கு குடியேறினர். தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
புதுவையில் ரேஷன்கார்டை ரத்து செய்துவிட்டு தென்மாநிலங்களுக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது.
கடந்தகால ஆட்சியின்போது ஆண்டுக்கு இலவச அரிசி வழங்க ரூ.294 கோடி நிதி ஒதுக்கினோம். புதிய அரசு ஓராண்டாகியும் இதுவரை ரேஷன்கடையும் திறக்கவில்லை, இலவச அரிசியும் வழங்கவில்லை.
மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இளைஞர்களின் போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் ராணுவ வீரர்களில் 75 சதவீதம் பேர் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்பது பல்வேறு கேள்விகளையும், சர்ச்சைகளையும் எழுப்பியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நாக்பூரில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு தடிகளை கொண்டு பயிற்சி அளிப்பார்கள். தற்போது ராணுவத்தில் ஆர்.எஸ்.எஸ்.காரர்களை நுழைக்க திட்டமிட்டு இந்த சதி செய்துள்ளனர்.
தடிகளை பயன்படுத்தி பயிற்சி எடுத்தவர்கள் துப்பாக்கியில் பயிற்சி எடுக்கும் நிலையை உருவாக்கியுள்ளனர். எனவே அக்னிபத் திட்டத்தை திரும்பப்பெற வேண்டும். வடமாநிலங்களில் பரவிய கலவரம் தென் மாநிலங்களில் பரவும் நிலை உருவாகும். இதை கட்டுப்படுத்த முடியாது.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
- முத்தியால்பேட்டையில் பிளஸ்-2 மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி சுகுணா. இவர்களது மகன் விக்னேஸ்வரன்
புதுச்சேரி:
முத்தியால்பேட்டையில் பிளஸ்-2 மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுவை முத்தியால் பேட்டை சோலை நகர் கல்லறை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் குமாரவேலு. கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி சுகுணா. இவர்களது மகன் விக்னேஸ்வரன்(வயது17). இவர் முத்தியால்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து தேர்வு எழுதியிருந்தார்.
குமாரவேலு வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவியும் வெளியே சென்றிருந்தார். வீட்டில் விக்னேஸ்வரனும், அவரது தங்கையும் இருந் தனர். சிறிது நேரம் கழித்து விக்னேஸ்வரன் அதே பகுதியில் தனது நண்பர்களிடம் சகஜமாக பேசி விட்டு வீடு திரும்பினார்.
வீட்டு மாடிக்கு சென்ற விக்னேஸ்வரன் வெகுநேரமாகியும் கீழே இறங்கி வராததால் சந்தேகமடைந்த அவரது தங்கை மாடிக்கு சென்று பார்த்தார். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் கதவை பலமாக தட்டிப்பார்த்தார். ஆனால் விக்னேஸ்வரன் கதவை திறக்காததால் அக்கம் பக்கத்தினர் மற்றும் விக்னேஸ்வரனின் நண்பர்களை அழைத்து வந்தார். அவர்கள் கதவை கடப்பாரையால் உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது விக்னேஸ்வரன் மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனே தூக்கில் இருந்து விக்னேஸ்வரனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே விக்னேஸ்வரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். முத்தியால்பேட்டை போலீசார் விக்னேஸ்வரன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- முதலியார்பேட்டை தொகுதியில் ரூ.15 லட்சத்தில் சாலை மற்றும் வடிகால் வசதி பணி சம்பத் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
- முதலியார்பேட்டை, நைனார் மண்டபம், சுதானா நகர் கமலம் வீதியில் புதிதாக சாலை மற்றும் வடிகால் வசதி செய்யும் பணி ரூ. 15.81 லட்சம் செலவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
புதுச்சேரி:
முதலியார்பேட்டை, நைனார் மண்டபம், சுதானா நகர் கமலம் வீதியில் புதிதாக சாலை மற்றும் வடிகால் வசதி செய்யும் பணி ரூ. 15.81 லட்சம் செலவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
இதற்கான பூமி பூஜை சம்பத் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. இதில், புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமார், செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் வெங்கடாஜலபதி, இளநிலை பொறியாளர் ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு நெட்பால் போட்டி நடைபெற்றது.
- சங்கத்தின் மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் மற்றும் இதயம் பேரியக்கம் தலைவர் புதுவை குமார் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
புதுச்சேரி:
புதுவை அமெச்சூர் நெட்பால் சங்கத்தின் அனுமதி யுடன் டி.என் . சரவணன் விளையாட்டு கழகம் சார்பில் 4-ம் ஆண்டு மாணவ-மாண விகளுக்கான நெட்பால் போட்டி கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வரை நடக்கிறது
இதில் ஆண்கள் பிரிவில் 10 அணிகளும் பெண்கள் பிரிவில் 10 அணிகள் பங்கேற்கின்றன. போட்டியை புதுவை மாநில கோஜுரியு கராத்தே சங்கத்தின் மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் மற்றும் இதயம் பேரியக்கம் தலைவர் புதுவை குமார் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
மேலும் இவ்விழாவில் புதுவை அமெச்சூர் நெட் பால் சங்கத்தின் தலைவர் நாகரத்தினம், துணை தலைவர் வைத்தியநாதன், பொதுச் செயலாளர் சிவகுமார் மற்றும் மீனாட்சி கணேஷ் பொது சேவை இயக்கம் மற்றும் ஜெயின் சரவணன், விளையாட்டு கழக தலைவர் கணேஷ் மற்றும் அமெச்சூர் நெட்பால் சங்கத்தின் துணைத் தலைவர் பார்த்திபன் , செயற்குழு உறுப்பினர் நாராயணன், சிவபாலன், மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- ரேஷன்கடைகளை திறந்து அரிசி வழங்க வேண்டும் என்று மாதர் சங்க மாநாட்டில் தீர்மானம் செய்யப்பட்டது.
- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 15-வது புதுவை பிரதேச மாநாடு அரசு ஊழியர் சம்மேளன அலுவலகத்தில் நடந்தது.
புதுச்சேரி:
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 15-வது புதுவை பிரதேச மாநாடு அரசு ஊழியர் சம்மேளன அலுவலகத்தில் நடந்தது.
மாநாட்டுக்கு சங்க தலைவர் இளவரசி, பிரதேசக்குழு உறுப்பினர்கள் முனியம்மாள், சிவசங்கரி தலைமை வகித்தனர். மாநாட்டு கொடியை பெரியநாயகி ஏற்றி வைத்தார். இளவரசி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாரிமுத்து வரவேற்றார்.
அகில இந்திய துணைத்தலைவர் சுதா சுந்தர்ராமன் மாநாடை தொடங்கி வைத்தார். செயலாளர் சத்தியா வேலை அறிக்கை வாசித்தார். பொருளாளர் கலையரசி வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்தார். தமிழ்மாநில செயற்குழு சங்கரி, சகோதாரன் சமூக மேம்பாட்டு நிறுவன தலைவர் ஷீத்தல்நாயக், சரளா, விஜயா, பர்கத்சுல்தானா ஆகியோர் வாழ்த்தி பேசினர். தமிழ் மாநில தலைவர் வாலண்டினா நிறைவுரையாற்றினார். கோமதி நன்றி கூறினார்.
கூட்டத்தில், புதுவையில் ரேஷன்கடைகள் அனைத்தும் மூடுவிழா செய்யப்பட்டு அரிசி வழங்கப்படாமல் உள்ளது. தமிழகம், கேரளாவில் 14 அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. இதேபோல புதுவையில் ரேஷன்கடைகளை திறந்து அரிசி வழங்க வேண்டும்.
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வினால் விலைவாசி கடுமையாக உயர்ந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை முழுமையாக குறைக்க வேண்டும்.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை விளக்கி சுதேசி மில் அருகே மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.
- தவளக்குப்பம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம் பெண் கடத்தப்பட்டார்.
- கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் வேல்விழி இறந்து விட்டதால் தமிழ்வேல் ஆனந்தி என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார்.
புதுச்சேரி:
தவளக்குப்பம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம் பெண் கடத்தப்பட்டார். தவளக்குப்பம் அருகே கொருக்குமேடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தமிழ்வேல். இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது முதல் மனைவி வேல்விழி. இவர்களுக்கு ரம்யாகிருஷ்ணன்(வயது19) என்ற மகளும், ராமகிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் வேல்விழி இறந்து விட்டதால் தமிழ்வேல் ஆனந்தி என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே ரம்யா–கிருஷ்ணனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து கடந்த 1½ மாதத்துக்கு முன்பு மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயிக்கப்–பட்டது.
இந்த நிலையில் வழக்கம் போல் தமிழ்வேல் வேலைக்கு சென்றார். மாலையில் அவரது தாயார் போன் செய்து ரம்யாகிருஷ்ணன் யாரோ அடையாளம் தெரியாத வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் செல்வதாக தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தமிழ்வேல் உடனே வீட்டுக்கு வந்தார்.
அப்போது வீட்டில் இருந்த ரம்யாகிருஷ்ணன் துணிமணிகள் ஏதும் இல்லை. ரம்யாகிருஷ்ணனை யாரோ கடத்தி சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தமிழ்வேல் தனது மகள் கடத்தப்பட்டது குறித்து தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது சாரம் சரிந்து விழுந்ததில் அண்ணன்-தம்பி படுகாயமடைந்தனர்.
- இவருக்கு 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி பவித்ரா என்ற மனைவியும், ஒரு ஆண் கைக்குழந்தையும் உள்ளது.
புதுச்சேரி:
கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது சாரம் சரிந்து விழுந்ததில் அண்ணன்-தம்பி படுகாயமடைந்தனர்.
பண்ருட்டி அருகே திருவதிகை பகுதியை சேர்ந்தவர் அஜித்(வயது30). இவருக்கு 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி பவித்ரா என்ற மனைவியும், ஒரு ஆண் கைக்குழந்தையும் உள்ளது. கட்டிடங்களில் படம் அலங்காரம் செய்யும் தொழில் செய்து வந்த (ஸ்தபதி) அஜித்தும், அவரது தம்பி அருண்குமாரும்(29) கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மேல் பட்டாம்பாக்கத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி நாராயணன் மூலம் புதுவை ரெயின்போ நகரில் முதல் குறுக்கு தெருவில் கட்டுமான வேலை நடந்து வரும் ஒரு வீட்டில் படம் அலங்காரம் செய்யும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டி ருந்தனர். அண்ணன்-தம்பி இருவரும் கட்டிடத்தில் சாரத்தில் நின்று படம் வரையும் வேலையில் ஈடுபட்டனர்.
அப்போது எதிர்பாராத விதமாக சாரம் சரிந்து விழுந்தது. இதில் அஜித்தும், அவரது தம்பி அருண்குமாரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். உடனே அங்கு கட்டிட பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளர்கள் 2 பேரையும் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் பெரியக்கடை போலீசார் விசாரணை நடத்தி வேலை செய்யும் இடத்தில் சரியான பாதுகாப்பு சூழலை ஏற்படுத்தி கொடுக்காத கட்டிட மேஸ்திரி மற்றும் சூப்பர்வைசர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் சாதனையாளர் தின கொண்டாட்டம் நடைபெற்றது.
- மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார்
புதுச்சேரி:
மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் சாதனையாளர் தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் மற்றும் கல்லூரியின் இயக்குனர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் ராஜப்பன் வரவேற்புரையாற்றினார்.
இந்த கல்வி ஆண்டில் (2021-22) நடைபெற்ற கல்லூரி வளாக தேர்வில் 490 மாணவ-மாணவிகள் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.அவர்களுக்கு சிறப்பு விருந்தினர் ஐ.சி.டி. அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரி ஹரிபாலச்சந்திரன் நேர்முக வளாக தேர்வு மூலம் தேர்வான 490 மாணவ-மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். மேலும் ஐ.சி.டி. அகாடமியின் புதுவை மற்றும் தமிழ்நாடு மாநில தலைவர் அழகிரி, தயாரிப்பு மற்றும் மார்க்கெட்டிங் தலைவர் சரவணன் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி ஜெய்ஸ் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கல்லூரியின் வேலைவாய்ப்பு அதிகாரி சதீஷ்குமார் கல்லூரியில் நடைபெற்று வரும் வேலைவாய்ப்பு மையத்தின் செயல்பாடுகள் குறித்த ஆண்டறிக்கையை வாசித்தார்.
இந்த ஆண்டின் சிறந்த மாணவருக்கான விருதினை கணிப்பொறியியல் துறையின் இறுதி ஆண்டு மாணவர் சக்தி மற்றும் சிறந்த மாணவிக்கான விருதினை கணிப்பொறியியல் துறையின் கயல்விழி ஆகியோர் தட்டிச் சென்றனர்.
இந்த ஆண்டுக்கான சிறந்த ஆசிரியருக்கான விருது கணிப்பொறியியல் துறையின் துணை பேராசிரியர் ரகுபதிக்கு வழங்கப்பட்டது. சிறந்த ஆசிரியைக்கான விருது மின்னியல் மற்றும் மின்னணு பொறியியல் துறையை சேர்ந்த பேராசிரியர் ஜெரால்டின் விஜிக்கு வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கணிப்பொறியியல் துறைதலைவரும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியை பிரியாராதிகாதேவி செய்திருந்தார்.
- பா.ஜனதா நிர்வாகியிடம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம நலம் விசாரித்தார்.
- அவருக்கு கால் மற்றும் முதுகு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதற்காக அவர் சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
புதுச்சேரி:
புதுவை மாநில பா.ஜனதா ஓ.பி.சி. அணி மாநில தலைவரும், ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் இந்திய நிறுவனத்தின் இண்டிபெண்டண்ட் டைரக்டர் என்ஜினீயர் சிவகுமார் கடந்த மார்ச் மாதத்தில் கட்டிட வேலை நடைபெறும் இடத்தில் விபத்தில் சிக்கினார். அவருக்கு கால் மற்றும் முதுகு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதற்காக அவர் சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
அவரை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சந்தித்து நலம் விசாரித்தார். இதற்கு முன்பாக மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கல்யாண சுந்தரம், ரிச்சர்டு, வி.பி. ராமலிங்கம் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் நலம் விசாரித்தனர். தற்போது சிவகுமார் நலமாக உள்ளார். இந்த சந்திப்பின் போது புதுவை மாநில ஓ.பி.சி. அணி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- பிரதமர் மோடியின் 8 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை மக்களுக்கு தெரிவிக்கும் நிகழ்ச்சி புதுவை பா.ஜனதா சார்பில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- உழவர்கரை மாவட்ட பா.ஜனதா கட்சி மாவட்டத் தலைவர் நாகேஸ்வரன் தலைமையில் பிரதமரின் சாதனைகளை தெரிவிக்கும் வகையில் காமராஜ் சாலை பாலாஜி தியேட்டர் அருகில் இருந்து முருகா தியேட்டர் வரையில் பேரணி நடைபெற்றது.
புதுச்சேரி:
பிரதமர் மோடியின் 8 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை மக்களுக்கு தெரிவிக்கும் நிகழ்ச்சி புதுவை பா.ஜனதா சார்பில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதன்படி உழவர்கரை மாவட்ட பா.ஜனதா கட்சி மாவட்டத் தலைவர் நாகேஸ்வரன் தலைமையில் பிரதமரின் சாதனைகளை தெரிவிக்கும் வகையில் காமராஜ் சாலை பாலாஜி தியேட்டர் அருகில் இருந்து முருகா தியேட்டர் வரையில் பேரணி நடைபெற்றது.
பேரணியை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் ெதாடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக செல்வகணபதி எம்.பி.
கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த பேரணியில் பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் மோகன்குமார், பா.ஜனதா மாநில செயலாளர் லதா, தட்டாஞ்சாவடி தொகுதி தலைவர் பசுபதி, இளைஞரணி மாநில பொதுச்செயலாளர் வேல்முருகன், உழவர்கரை மாவட்ட மகளிரணி தலைவி வள்ளி உள்பட 300-க்கும் மேற்பட்ட மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் கையில் பதாகைகளுடன் கலந்து கொண்டனர்.
- 15-ந் தேதி காலை கணபதி பூஜையுடன் முதல் கால யாக பூஜை தொடங்கியது.
- கும்பாபிஷேக விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
தவளக்குப்பம் அடுத்த தானாம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள 5 கோவிலில் மகா கும்பாபிஷேகம் காலை நடைபெற்றது.
அதனை முன்னிட்டு கடந்த 15-ந் தேதி காலை 9 மணி அளவில் கணபதி பூஜையுடன் முதல் கால யாக பூஜை தொடங்கியது.பின்னர் காலை 8.30 மணி அளவில் 2-ம் கால யாக பூஜைகள் மற்றும் மாலையில் 3-ம் கால யாக பூஜை நடந்தது.
விழாவின் முக்கிய நாளான இன்று (வெள்ளிக் கிழமை) காலை 4 மணி அளவில் 4-ம் கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது.
பின்னர் யாகசாலையில் இருந்து கடம் புறப்பட்டு காலை 6 மணி அளவில் பூரணி பொற்கலை சமேத அய்யனார் கோவில், அதைத்தொடர்ந்து புத்து மாரியம்மன் கோவில், சிவசடையப்பர் கோவில், சாந்த காளியம்மன், புட்லாய் அம்மன் கோவில் ஆகிய 5 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் தொடர்ந்து நடைபெற்றது.
இதில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் மற்றும் அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சாமியை தரிசித்தனர். அதனைத்தொடர்ந்து மூலவருக்கு விசேஷ அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை காண் பிக்கப்பட்டது. இரவு அனைத்து சாமிகளும் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை தானாம்பாளையம் கிராம பஞ்சாயத்து மற்றும் ஊர்மக்கள் செய்தனர்.
- பனித்திட்டு கடற்கரையில் முகத்துவாரம் தூர்வாரும் பணி சபாநாயகர் அமைச்சர் தொடங்கி வைத்தனர்.
- அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோர் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் பாகூர் கொம்யூன் ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட நல்லவாடு மற்றும் பனித்திட்டு கடற்கரை முகத்துவாரத்தை ஆழப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மீனவர்கள் தொகுதி எம்.எல்.ஏ.வும் சபாநாயகருமான ஏம்பலம் செல்வத்திடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து கடற்கரை முகத்துவாரம் ஆழப்படுத்தும் பணிக்கு புதுவை பொதுப்பணித்துறை நீர்ப்பாசன அலுவலகம் மூலம் பூமி பூஜை நடந்தது. பனித்திட்டு கடற்கரையில் நடந்த விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோர் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
விழாவில் லட்சுமிகாந்தன், எம்.எல்.ஏ, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் மணிமாறன், இளநிலை பொறியாளர் வெங்கடேஸ்வரன் மற்றும் ஊர் மக்கள் பங்கேற்றனர்.






