என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்
பிளஸ்-2 மாணவர் தூக்கு போட்டு சாவு
- முத்தியால்பேட்டையில் பிளஸ்-2 மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி சுகுணா. இவர்களது மகன் விக்னேஸ்வரன்
புதுச்சேரி:
முத்தியால்பேட்டையில் பிளஸ்-2 மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுவை முத்தியால் பேட்டை சோலை நகர் கல்லறை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் குமாரவேலு. கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி சுகுணா. இவர்களது மகன் விக்னேஸ்வரன்(வயது17). இவர் முத்தியால்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து தேர்வு எழுதியிருந்தார்.
குமாரவேலு வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவியும் வெளியே சென்றிருந்தார். வீட்டில் விக்னேஸ்வரனும், அவரது தங்கையும் இருந் தனர். சிறிது நேரம் கழித்து விக்னேஸ்வரன் அதே பகுதியில் தனது நண்பர்களிடம் சகஜமாக பேசி விட்டு வீடு திரும்பினார்.
வீட்டு மாடிக்கு சென்ற விக்னேஸ்வரன் வெகுநேரமாகியும் கீழே இறங்கி வராததால் சந்தேகமடைந்த அவரது தங்கை மாடிக்கு சென்று பார்த்தார். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் கதவை பலமாக தட்டிப்பார்த்தார். ஆனால் விக்னேஸ்வரன் கதவை திறக்காததால் அக்கம் பக்கத்தினர் மற்றும் விக்னேஸ்வரனின் நண்பர்களை அழைத்து வந்தார். அவர்கள் கதவை கடப்பாரையால் உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது விக்னேஸ்வரன் மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனே தூக்கில் இருந்து விக்னேஸ்வரனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே விக்னேஸ்வரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். முத்தியால்பேட்டை போலீசார் விக்னேஸ்வரன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






