என் மலர்
புதுச்சேரி

பா.ஜனதா நிர்வாகியிடம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நலம் விசாரித்த காட்சி.
பா.ஜனதா நிர்வாகியிடம் நலம் விசாரித்த சபாநாயகர்
- பா.ஜனதா நிர்வாகியிடம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம நலம் விசாரித்தார்.
- அவருக்கு கால் மற்றும் முதுகு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதற்காக அவர் சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
புதுச்சேரி:
புதுவை மாநில பா.ஜனதா ஓ.பி.சி. அணி மாநில தலைவரும், ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் இந்திய நிறுவனத்தின் இண்டிபெண்டண்ட் டைரக்டர் என்ஜினீயர் சிவகுமார் கடந்த மார்ச் மாதத்தில் கட்டிட வேலை நடைபெறும் இடத்தில் விபத்தில் சிக்கினார். அவருக்கு கால் மற்றும் முதுகு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதற்காக அவர் சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
அவரை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சந்தித்து நலம் விசாரித்தார். இதற்கு முன்பாக மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கல்யாண சுந்தரம், ரிச்சர்டு, வி.பி. ராமலிங்கம் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் நலம் விசாரித்தனர். தற்போது சிவகுமார் நலமாக உள்ளார். இந்த சந்திப்பின் போது புதுவை மாநில ஓ.பி.சி. அணி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.