என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பா.ஜனதாவினர் பேரணி
    X

    பேரணியை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் தொடங்கி வைத்து பேசிய காட்சி.

    பா.ஜனதாவினர் பேரணி

    • பிரதமர் மோடியின் 8 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை மக்களுக்கு தெரிவிக்கும் நிகழ்ச்சி புதுவை பா.ஜனதா சார்பில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • உழவர்கரை மாவட்ட பா.ஜனதா கட்சி மாவட்டத் தலைவர் நாகேஸ்வரன் தலைமையில் பிரதமரின் சாதனைகளை தெரிவிக்கும் வகையில் காமராஜ் சாலை பாலாஜி தியேட்டர் அருகில் இருந்து முருகா தியேட்டர் வரையில் பேரணி நடைபெற்றது.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடியின் 8 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை மக்களுக்கு தெரிவிக்கும் நிகழ்ச்சி புதுவை பா.ஜனதா சார்பில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    அதன்படி உழவர்கரை மாவட்ட பா.ஜனதா கட்சி மாவட்டத் தலைவர் நாகேஸ்வரன் தலைமையில் பிரதமரின் சாதனைகளை தெரிவிக்கும் வகையில் காமராஜ் சாலை பாலாஜி தியேட்டர் அருகில் இருந்து முருகா தியேட்டர் வரையில் பேரணி நடைபெற்றது.

    பேரணியை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் ெதாடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக செல்வகணபதி எம்.பி.

    கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த பேரணியில் பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் மோகன்குமார், பா.ஜனதா மாநில செயலாளர் லதா, தட்டாஞ்சாவடி தொகுதி தலைவர் பசுபதி, இளைஞரணி மாநில பொதுச்செயலாளர் வேல்முருகன், உழவர்கரை மாவட்ட மகளிரணி தலைவி வள்ளி உள்பட 300-க்கும் மேற்பட்ட மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் கையில் பதாகைகளுடன் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×